கேரள மாநிலம் கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீராக மாறி வருகிறது என பாஜக பெண் எம்பி ஒருவர் தனது டுவிட்டரில் கருத்தை பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாஜகவினர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணிகள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் உள்ள இந்துக்கள் அதிகமான அளவில் இருக்கும் பகுதி ஒன்றில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தியதாகவும் இதனை அடுத்து அந்த பகுதிக்கு கேரள அரசு குடிதண்ணீர் வழங்குவதை நிறுத்தி விட்டதாகவும் பெண் எம்பி ஷோபா தனது டுவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கேரளா மற்றொரு காஷ்மீர் ஆக மாறி வருவதாகவும் உடனடியாக இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த டுவிட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவிக்கும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சோபாவின் இந்த டுவிட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஷோபா எம்பி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருப்பதாக அவர் அளித்த புகாரில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் கேரளா போலீசார் ஷோபா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.