காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அண்ணாமலைக்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்!

Photo of author

By Sakthi

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வந்தது. இது தொடர்பாக வீடியோ 1 சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்ற வருடம் பாஜகவில் இணைந்த பத்திரிக்கையாளர் மதன் பாஜகவின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இதனையடுத்து மதன் மற்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் இருவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்கள். ஆனால் இந்த வீடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலுடன் தான் வெளியிடப்பட்டது என்று ஒருசில வீடியோ ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டார் மதன் ரவிச்சந்திரன். இதன் காரணமாக, தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இதுதொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவிக்கும்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியின் சார்பாக தன்னுடைய தலைமையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கிளம்பி தமிழக பாஜக அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைக்கு எதிராக பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றும் மத்திய அரசை கண்டித்து தமிழக பாஜக அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முற்றுகையிட இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு பாலியல் விஷச்செடி பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் என்பவருடைய கொடுமையான பாலியல் வன்மம் தற்சமயம் ஆபாச வீடியோ மூலமாக வெளிவந்து இருக்கிறது. இது தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர் இது போன்ற 17 பாஜக தலைவர்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி வருவது பெண்ணினத்துக்கு பேரதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

அதிகார பலத்துடன் நடைபெறும் பாலியல் குற்றங்கள் பொள்ளாச்சி சம்பவம் போன்ற மிகக் கொடுமையான சம்பவங்களாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால் பெண்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பாக கமலாலய முற்றுகைப் போராட்டத்தை நடத்த இருக்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார்.

பாலியல் கொடூரன் பாஜகவின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ராகவனை கைது செய்யவேண்டும் தன்னுடைய கட்சியின் நிர்வாகிகள் மானத்தை பாதுகாக்க தவறிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உடனடியாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுவரையில் தமிழக மக்களின் போராட்டங்கள் ஓயாது என்று தெரிவித்திருக்கிறார் ஜோதிமணி.