தமிழகம் முழுவதும் பாஜக இன்று போராட்டம்! பெண்கள் முன்நின்று நடத்துகின்றனர்!
தமிழகம் முழுவதும் இன்று பாஜக கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தை பெண்கள் முன்நின்று நடத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் தமிழகம் முழுவதும் இன்று பாஜக கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்படவுள்ளது.
விஷச்சாராய உயிரிழப்பை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த போராட்டத்தை பெண்கள் முன்நின்று நடத்தவுள்ளனர். சென்னையில் நடைபெறும் விஷ சாராய உயிரிழப்பை கண்டிக்கும் இந்த போராட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ள போகிறார். மேலும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இந்த போராட்டத்தில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.