படிப்பறிவு இல்லாத பிரதமருக்கு என்ன சொன்னாலும் புரியாது! டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து!!

0
168
#image_title
படிப்பறிவு இல்லாத பிரதமருக்கு என்ன சொன்னாலும் புரியாது! டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து!
நேற்று அதாவது மே 19ம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும் இது பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று அதாவது மே 19ம் தேதி புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மக்கள் அனைவரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இப்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே செல்லும். செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2019ம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதால் இந்திய ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த 2000 ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை கடுமையாக விமர்சித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “கடந்த காலங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகு ஊழல் அழிந்து விடும் என்று கூறினார்கள். தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றால் ஊழல் ஒழிந்துவிடும் என்று கூறுகின்றனர். அதனால் தான் பிரதமர் அவர்கள் படிப்பறிவு உள்ளவராக இருக்க வேண்டும். படிப்பறிவு இல்லாத பிரதமர் அவர்களுக்கு யார் என்ன சொன்னாலும் புரியாது” என்று பிரதமர் மோடி அவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கூறியுள்ளார்.