இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தான் அடித்து சொல்லும்-பிரசாந்த் கிஷோர்.!!

0
207

பாஜக அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் கூட தேசிய அளவில் பாஜக முக்கிய கட்சியாக இருக்கும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்த பிரசாந்த் கிஷோர் கோவாவில் நடைபெற்ற அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றில் பேசிய இவர், இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் 40 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எப்படி இருந்ததோ, அதே போல் அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜக இருக்கும். அதேபோல், இந்திய அளவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று விட்டால் அக்கட்சியை ஒருபோதும் அப்புறப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பாஜகவை ஒரு போதும் அப்புறப்படுத்த முடியாது அதேபோல் மோடியை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என ராகுல்காந்தி நினைக்கிறார். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. பாஜகவுடன் நாம் பல ஆண்டுகளுக்கு போராட வேண்டியதிருக்கும். பாஜக அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் தேசிய அளவில் பாஜக மையமாக இருக்கும் மோடியின் வலிமையை அறிந்து கொள்ளாதவரை மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் வரமுடியாது ‌

அவரை தோற்கடிக்கவும் முடியாது. அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜகவை எதிர்த்து போராட வேண்டியதிருக்கும் என தெரிவித்துள்ளார். இந்திய அரசியலில் இன்னும் பல தசாப்தங்களுக்கு வல்லமைமிக்க கட்சியாக பாஜக இருக்குமென தெரிவித்துள்ளார்.

Previous articleகாதலிக்க மறுத்ததால் மறைத்து வைத்த கத்தியால் கொலையா?.பெங்களூரில் நடந்த கொடூரம்!
Next articleசெல்லப்பிராணியாகிய நாய் செய்த வேற லெவல் நிகழ்ச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here