சித்து விளையாட்டை காட்டிய பாஜக செயலாளர்! போலீசார் கொடுத்த ரிவெஞ்!வைரலாகும் வீடியோ காட்சி!

சித்து விளையாட்டை காட்டிய பாஜக செயலாளர்! போலீசார் கொடுத்த ரிவெஞ்!வைரலாகும் வீடியோ காட்சி!

திமுக ஆட்சி அமைந்த பிறகு சில திமுக பிரமுகர்கள் அதிமுக வின் முந்தைய திட்டங்களை எதிர்த்து வந்தனர். குறிப்பாக அதிமுக வின் அம்மா உணவகங்களை சில திமுக உறுப்பினர்கள் அடித்து நொறுக்கினர் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நாங்கள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறி ரவுடிஸதிலும் ஈடுபட்டனர். இது ஒருபக்கம் நடந்து வருகையில் பாஜகவின் அராஜகமும் மறுபக்கம் நடந்து வருகிறது. தற்பொழுது பாஜக பிரமுகர்கள் சிலர் தங்களின் சித்து விளையாட்டை கோவை மாவட்டத்தில் காட்டியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பூலுவபட்டி என்ற பேரூராட்சி உள்ளது. அங்குள்ள அலுவலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்படம் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அந்த  பேரூராட்சியின் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான சில பாஜக உறுப்பினர்கள்  அந்த அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். ஏன் ஸ்டாலினின் புகைப்படம் மட்டும் உள்ளது? மோடியின் புகைப்படம் இல்லை எனக்கூறி அந்த அலுவலக ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த ஊழியர்கள் கூறியதை மீறி பாஜக பிரமுகர்கள் கொண்டுவந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை கட்டாயமாக மாட்டி விட்டு சென்றனர். புகைப்படத்தை மாட்டி விட்டது மட்டுமின்றி அங்கு உள்ள ஊழியர்களை மிரட்டியுள்ளனர். புகைப்படத்தை கழட்டினால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளனர். அங்கு பாஜக செய்த அட்டூழியம் அனைத்தும்  வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது. ஊழியர்களை மிரட்டியதர்காவும்  அரசு  விதிமுறைகளை மீறி அரசு அலுவலகத்தில் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தியதால் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.நாளுக்கு நாள் பாஜகவின் அடாவடி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Leave a Comment