பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று!

0
198

பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பலரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதியின் அடுத்த படம்!! சீக்ரெட் ரிலீசானதால் குஷியான ரசிகர்கள்!
Next articleவழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்..! தமிழக அரசு!