வழிபாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்..! தமிழக அரசு!

0
71

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தமிழக அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  • தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது.
  • முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும்.
  • கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம், திருநீறு, குங்குமம் உட்பட பிரசாதம் ஏதும் வழங்கக் கூடாது.
  • பக்தர்களுக்கு இருமல், சளி போன்ற நோய் அறிகுறி இருந்தால் உள்ளே அனுமதிக்க கூடாது.
  • 65வயதுக்கு மேற்பட்டோர், 10வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.
  • நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • பெரிய கோயில்களில் ஆன்லைன் மூலம் டோக்கன்கள் வழங்கி குறிப்பிட்ட நபர்களை மட்டுமே, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நாளை முதல் ஒவ்வொரு தனிமனிதரும் பாதுகாப்போடு வழிபாட்டு தலங்களுக்கு செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K