சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு பேரணிக்கு அனுமதி மறுத்தோடு மகளிரணி நிர்வாகிகளே வீட்டு காவலில் வைத்திருந்தது. இந்த விடியா திமுக அரசு ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு சரித்திர பதிவேடு வழங்கி குற்றவாளிகளை சுதந்திரமாக சுற்றி கொண்டிருக்க அனுமதி வழங்கிய அரசாங்க கருதப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஜனநாயக ரீதியாக போராடும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு. திமுகவில் குடிகொண்டுள்ள அத்தனை குற்றவாளிகளும் பாதுகாக்க நினைப்பதே அவர்களின் லட்சியம் இது தற்பொழுது பொதுமக்களுக்கும் தெரிந்து விடும் என்று பயம்? திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. என்று அண்ணாமலை அவர்கள் கூறியுள்ளார்.