தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு நேற்றுடன் நடந்து முடிந்தது. இன்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிளும் வாக்குப் பதிவு தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் அவரது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சமீபத்திய செய்தியாக நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது குறித்து தான். கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் பெண் பிள்ளைகள் பர்தா அணிய தடை விதித்தனர்.
பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே விட்டுவிட்டு உள்ளே வரும்படி புதிய விதியை அமல் படுத்தி உள்ளனர். அதனால் அம்மாநிலம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் அதுகுறித்து கலவரங்கள் வெடிக்கத் தொடங்கியது. தேசியக்கொடியை அகற்றிவிட்டு காவி கொடியை கட்டும் அளவிற்கு மதக்கலவரங்கள் வெடிக்க தொடங்கியது. இவ்வாறு இதர மாநிலங்களில் நடந்துகொண்டிருக்கும் வேளையில் தற்போது நமது தமிழகத்திலும் தொடர ஆரம்பித்துவிட்டது. தற்போது நடைபெற்று வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு மதுரை மாவட்டத்தில் மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டில் ஒரு முஸ்லிம் பெண்மணி தனது நாக்கை செலுத்தி வந்துள்ளார். அவர் பர்தா அணிந்து வந்துள்ளார். அதனைக் கண்ட பாஜக பூத் தலைவர் கிரிராஜன் பர்தா அணிந்து கொண்டு வாக்கு அளிக்க கூடாது என அப் பெண்மணியிடம் கூறியுள்ளார். பாஜக முகவர் கிரிராஜன் இவ்வாறு கடுமையாக பேசியதை இதர கட்சியினர் எதிர்த்தனர். இதனால் அந்த வார்டில் சற்று பரபரப்பு நிலவியது. பாஜக முகவரின் இந்த செயலால் சற்று நேரம் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பாஜக முகவரி ராஜனுக்கு பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட்ட பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இவ்வாறு வாக்குபதிவு செலுத்தும் இடத்திலிருந்து மத கலவரம் தொடங்க ஆரம்பித்துவிட்டது.