திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி?

Photo of author

By Vijay

திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி

திமுக அமைச்சர்கள் அதிக அளவு சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறி அது குறித்த பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார், அந்த பட்டியல் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஊடகங்களும் விவாதிக்க வில்லை அது ஏன் என பாஜக தமிழக துணை தலைவர் திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், வெற்றி வெற்றி பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிவித்த ஊழல் குற்றச்சாட்டுகளை எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனமும் விவாதிக்கவில்லை, காரணம் வம்பே வேண்டாம் தோண்ட தோண்ட ஊழல் குறித்து அதிகம் பேச வேண்டி வரும் என்று திமுக ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது, வியாபாரத்திற்கு அஞ்சி நடுங்கிய ஊடகங்கள் தங்கள் கடமையை செய்ய தவறி ஓடி ஒளிந்து கொண்டு விட்டன.

கவலை வேண்டாம் சமூக ஊடகங்கள் திமுகவின் கோர முகத்தை வெளிக் கொண்டு வந்து விட்டது ஆனால், இனி எந்த விவாதத்திற்கும் பாஜகவினர் சென்றாலும் இன்றைய ஊழல் ஒழிப்பு பிரகடனம் குறித்து விவாதிக்காதது ஏன் என்பதே நமது முதல் கேள்வி என, நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக ஊடகங்களுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.