“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!!

0
297
#image_title

“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!!

பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாதே என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

மேலும் அவர், “மோடியிடம் இருந்து இன்றைக்கும் நாகரிகமான அரசியலை நாங்கள் எதிர்பார்த்ததில்லை. அவருடைய தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது மாண்புமிகு பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும் அதனுடைய வயிற்றெரிச்சல் தான் இந்த வருகைக்கு காரணம்.” என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து திமுக செய்திக்குழு தொடர்பு தலைவர் TKS இளங்கோவன், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் வருவதை திமுக தடுத்ததா? இந்த ஆண்டிலேயே 5 எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க ஜப்பானிலிருந்து கடன் உதவி வரவில்லை என்கிறார். ஆனால் 69 ஆயிரம் கோடியை பணக்காரர்களின் கடனை அடைக்க ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 2000 கோடியை ஒதுக்கி இருந்தால் தமிழக மக்கள் பயனடைந்திருப்பார்கள். இப்பொழுது கூறுங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை திமுகவா எதிர்த்தது. இப்படி பொய்யையே சொல்லுகிறார் மோடி.” என்று கூறியுள்ளார்.

மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,” ஹிந்தியை புகுத்த வேண்டும் என்று நினைக்கும் மோடிக்கு தமிழகம் கிடையாது. தமிழர்களை ஏமாற்ற பிரதமர் மோடி தமிழ், தமிழ் என்று பேசுகிறார். திராவிட மாடல் தமிழ் உணவுர்வு இருந்தால்தான் தமிழகம். அவர் எதந்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் 40 -ம் நமதே! ” என்று கூறினார். மேலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது என்று கூறினார்.

Previous articleபெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் ‘மார்ச் 3’போலியோ முகாம்!!
Next articleகூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!!