BJP Annamalai: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மீண்டும் இணைய வேண்டுமென்றால் கட்டாயம் அண்ணாமலை இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை எடப்பாடி டெல்லி மேலிடத்தில் வைத்துள்ளார். இதற்கு சரி என்று அமித்ஷாவும் ஒப்புதல் கொடுத்துள்ளார். ஆனால் இது தமிழக பாஜக தொண்டர்களிடையே அதிருப்த்தி உண்டாக்கியுள்ளது. பாஜக தமிழகத்தில் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதென்றால் கட்டாயம் அண்ணாமலை தான் முக்கிய காரணம் அப்படி இருக்கையில் அவரையே வேண்டாம் என்று ஒதுக்குவது என பல தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை உச்சகட்டமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பாஜக நிர்வாகியான சரவணன் தலைமையில் அவரது பெயர் போட்டு பெரிய போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் வேண்டும் வேண்டும் மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும்… வேண்டாம் வேண்டாம் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று போட்டுள்ளனர். இந்த போஸ்டரானது ராமநாதபுரம் பரமக்குடி வட்டார முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஒட்டப்பட்ட போஸ்டரால் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித் தொண்டர்களின் அதிருப்தி நீங்க பாஜக நல்ல முடிவு எடுக்குமா அல்லது கூட்டணிக்காக அண்ணாமலை ஒதுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி இவரது இந்த பதவிக்கு பலரது பெயர்கள் அடிபட்டு வருகிறது. முதலாவதாக முக்குலத்தோர் இனத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரன் பெயரும் , மறுபுறம் வானதி சீனிவாசன், கருப்பு முருகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அடுத்த பாஜக மாநில தலைவராக இடம் பெற போவது யார் என்பதை வரும் 9 ஆம் தேதி தான் பார்க்க முடியும்.