பெண்களை கிண்டல் செய்த பாஜக இளைஞர் கைது!! பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாரிடம் வாக்குவாதம்!!

Photo of author

By Savitha

பல்லாவரத்தில் நிகழ்ச்சி முடிந்த பின்பு பாஜக இளைஞர்கள் பெண்களை கிண்டல் செய்ததாக கைது செய்யபட்டதால் காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

பல்லாவரத்தில் இன்று பல்வேறு மத்திய அரசு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து சென்ற பின்னர் மது போதையில் இருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஜேபி வாலிபர்கள் மூன்று பேர் அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த தகவல் அறிந்து பல்லாவரம் காவல் நிலையத்தை 100க்கும் மேற்பட்ட பிஜேபி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போலீசார் பாஜகவினரை தாக்கியதாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த தாம்பரம் துணை ஆணையர் அதிவீர பாண்டியனை சுற்றி வளைத்த பாஜகவினர் போலீசார் வாலிபர்களை தாக்கியது குறித்து விளக்கமளிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த துணை ஆணையர் அதிவீரபாண்டியன் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசாரும் வெளியேறும்படியும் தானே விசாரனை செய்வதாக கடுமையாக கடிந்து கொண்டார். இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மூன்று பாஜக இளைஞர்களையும் துணை ஆணையர் விடுவித்தார்.இதனால் இரவு பல்லாவரம் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.