கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!!

0
282
#image_title

கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!!

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியும் ஆற்றினார்.தேர்தல் சமயத்தின் போது விலை உயர்ந்த கார்களில் தான் பயணம் செய்தார். ஹெலிகாப்டரில் கூட அவர் பயணம் செய்தார். இது அப்போதே பலராலும் விமர்சிக்கப்பட்டது.

நெட்டிசன்களால் மீம்ஸ்களும் போடப்பட்டது. இறுதியில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததற்கு அண்ணாமலையின் தேர்தல் பிரச்சாரம் தான் காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். கர்நாடகாவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணாமலை அவர்களின் தேர்தல் பிரச்சாரம் கர்நாடக மக்களிடத்தில் எடுபடவில்லை என்று குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், அண்ணாமலை குறித்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அண்ணாமலை அவர்களை  குறித்த ட்ரோல் வீடியோக்கள், புகைப்படங்கள் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கர்நாடகா சிங்கம் என்று புகழப்பட்ட அண்ணாமலை அவர்கள் இன்று அதே கர்நாடகா மக்களால் கலாய்த்து தள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்டாயம் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. தென் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அகன்றுவிட்டது. எதிர்க்கட்சியான காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகள் தான் தென் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தது.

இந்நிலையில் குறிப்பாக தென் தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் நிலையில் பாஜக கட்சி உள்ளது. திரு. அண்ணாமலை அவர்கள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Previous article2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை – ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!
Next articleஇனிமேல் யூடியூபில் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது!! அதிரடியாக அறிவித்த யூடியூப் நிறுவனம்!!