பாஜகவின் முக்கிய புள்ளி தூக்கு போட்டு தற்கொலை?..

Photo of author

By Parthipan K

பாஜகவின் முக்கிய புள்ளி தூக்கு போட்டு தற்கொலை?..

Parthipan K

BJP's main point is suicide by hanging?

பாஜகவின் முக்கிய புள்ளி தூக்கு போட்டு தற்கொலை?..

தெலுங்கானா பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து  செயற்குழுவில் பணியாற்றி  வந்தவர் தான் ஞானேந்திர பிரசாத். மியாபூர் எல்லைக்குட்பட்ட தனது வீட்டில் அவர் தனது உதவியாளரிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி விட்டு தூங்க சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராத நிலையில் அவரது உதவியாளர் அவரை அழைத்துள்ளார்.அவரிடமிருந்து எந்த பதிலும் அளிக்காத  நிலையில்  ஜன்னல் பகுதியை உடைத்து கொண்டு உதவியாளர் உள்ளே சென்றுள்ளார்.

அப்போது  அவரது அறையில்  மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.அதிர்ச்சியடைந்த உதவியாளர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.உடனே விரைந்து வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார்  விசாரணை நடந்து வருகிறது.இந்த விசாரணையில் அவரது தற்கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை. அதற்கான ஆவணம் எதுவும் கிடைக்கவில்லை.ஆனால் அவர் கடந்த சில நாட்களாக இந்த இல்லத்திலேயே வசித்திருக்கிறார் என தெரிவித்தார்கள்.

செர்லிங்கம்பள்ளி தொகுதியை சேர்ந்த அவர் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலுடன் இருந்துள்ளார் எனவும் கூறினார்கள்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரசாத் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் தான் உதவியாளரிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி விட்டு தூங்க சென்றுள்ளார்.பிரசாத் தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி தகவல் அவருக்கு தெரிய வந்துள்ளது. தெலுங்கானா பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் திடீர் தற்கொலை செய்த சம்பவம் கட்சியினருகிடையே பரபரப்பு  ஏற்பட்டு வருகிறது.