அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலானோர் அசிடிட்டியால் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.நெஞ்சு பகுதியில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படுவதையே அசிடிட்டி என்கிறோம்.இந்த பாதிப்பு பெரும்பாலும் காலை நேரத்தில் தான் ஏற்படுகிறது.
வயிற்றில் உருவாகும் அமிலத்தால் இந்த அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறது.மாறி வரும் உணவுப்பழக்க வழக்கம்,மன அழுத்தம்,தூக்கமின்மை பிரச்சனை போன்றவற்றால் அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறது.
அசிடிட்டி அறிகுறிகள்:
*நெஞ்சு பகுதியில் எரிச்சல்
*தொடர் இருமல்
*வயிறு உப்பசம்
*வாயுக் கோளாறு
*அஜீரணக் கோளாறு
*உணவு சாப்பிடுவதில் சிரமம்
*வீசிங் பிரச்சனை
அசிடிட்டியை குணமாக்கும் பயனுள்ள குறிப்புகள்:
1.ஒரு கிளாஸ் நீரில் ஓமத்தை போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் அசிடிட்டி பாதிப்பு குணமாகும்.
2.மோரில் ஒரு தேக்கரண்டி வெந்தயத் தூள் சேர்த்து பருகி வந்தால் அசிடிட்டி பிரச்சனை சரியாகும்.
3.ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பருகி வந்தால் அசிடிட்டி பிரச்சனை சரியாகும்.
4.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீர் பருகி வந்தால் அசிடிட்டி பாதிப்பு சரியாகும்.
5.கருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் அசிடிட்டி பாதிப்பு சரியாகும்.
6.தினமும் காலை உணவிற்கு பிறகு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி பிரச்சனை சரியாகும்.
7.எலுமிச்சை ஜூஸ் பருகி வந்தால் அசிடிட்டி பாதிப்பில் இருந்து மீண்டுவிட முடியும்.
8.பெருஞ்சீரகத்தை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் அசிடிட்டி நீங்கும்.
9.தினமும் ஒரு கிளாஸ் கற்றாழை சாறு பருகி வந்தால் அசிடிட்டி பாதிப்பு சரியாகும்.
10.புதினா,துளசி மற்றும் இஞ்சியை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.