மிளகில் இவ்வளவு நன்மைகளா? எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகில் விஷத்தை முறிக்கக் கூடிய தன்மை இருக்கு. சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் இது நல்ல மருந்தாக உள்ளது.
வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் மிளகு பயன்பாடு உள்ளது.
பசியின்மை,செரிமான பிரச்சனை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தாகும். வாதம்-பித்தம்-கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்து. மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.
பல் தேய்க்கும்போது மிளகோட உப்பு சேர்த்து தேய்ச்சிட்டு வந்தா பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் எல்லாம் நீங்கி பல் வெண்மையாகும்.
காய்ச்சலுக்கு சளி இருமல் இருந்தா மிளகு ரசம் வைத்து குடித்தால் மிகவும் நன்மை உண்டாகும்.