நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் ஓரிரு நாட்களில் மறைய.. இந்த 5 வீட்டு வைத்தியங்கள் தான் பெஸ்ட்!!

Photo of author

By Divya

நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் ஓரிரு நாட்களில் மறைய.. இந்த 5 வீட்டு வைத்தியங்கள் தான் பெஸ்ட்!!

Divya

மனிதர்கள் நாவில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருப்பதை கரு நாக்கு என்று அழைக்கின்றோம்.கரு நாக்கு இருப்பவர்கள் அதிகம் பொய் சொல்வார்கள்,கரு நாக்கு இருப்பவர்கள் சொன்னால் பழிக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.நாக்கில் கரும்புள்ளிகள் இருந்தால் அவை நாவின் அழகையே கெடுத்துவிடும்.

எனவே நாவில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க நீங்கள் இயற்கை வைத்தியத்தை தேர்வு செய்யலாம்.

நாவில் கரும்புள்ளி வர காரணங்கள்:

*நாவில் அடிபடுதல்
*சேதமான பற்களின் தாக்கம்
*இயற்கை முறை
*நாக்கு புற்றுநோய்
*இரசாயனத்தின் விளைவு

நாவில் உள்ள கரும்புள்ளிகள் மறைய உதவும் அற்புத வீட்டு வைத்திய குறிப்புகள்:

தீர்வு 01:

வேப்பிலை

நாக்கில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க வேப்பிலை பயன்படுத்தலாம்.அதற்கு முதலில் பாத்திரத்தில் இரண்டு கொத்து வேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த வேப்பிலை பானத்தை ஆறவைத்து வாய் கொப்பளித்து வந்தால் நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

தீர்வு 02:

கற்றாழை ஜூஸ்

நாக்கில் உள்ள கருப்பு புள்ளிகள் மறைய கற்றாழை பயன்படுத்தலாம்.அதற்கு முதலில் ஒரு ஒரு கற்றாழை மடல் எடுத்து அதன் சதை பற்றை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீரில் அலசி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகினால் நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.அதேபோல் வெறும் கற்றாழை ஜெல்லை நாவில் வைத்து தடவினால் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

தீர்வு 03:

இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு

நாவில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க பட்டை,இலவங்க பானத்தை பயன்படுத்தலாம்.ஒரு துண்டு பட்டை மற்றும் நான்கு கிராம்பை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இதை ஆறவைத்து வாய் கொப்பளித்து வந்தால் நாவில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

தீர்வு 04:

வெள்ளைப்பூண்டு

நாக்கில் உள்ள புள்ளிகள் மீது ஒரு வெள்ளை பூண்டு சாறை தடவினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.

தீர்வு 05:

அன்னாசிப் பழம்

நாக்கில் படும்படி அன்னாசி பழச் சாறு பருகி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.தொடர்ந்து அன்னாசிப்பழ சாறு பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.