கண் கூச்ச பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி பலன் பெறுங்கள்.
கண் கூச்சத்திற்கான காரணங்கள்:
*கண் வறட்சி
*கார்னியல் நோய் பாதிப்பு
*மின்னணு சாதன பயன்பாடு
*வைட்டமின் குறைபாடு
கண் கூச்சத்தை சரி செய்யும் ரெமிடி:
தேவையான பொருட்கள்:-
1)தூயத் தேன் – 6 மில்லி
2)தண்ணீர் – 6 மில்லி
செய்முறை விளக்கம்:-
**ஒரு கிண்ணத்தில் 6 மில்லி தூயத் தேன் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் 6 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
**இந்த கலவையை கண்களில் விட்டு பின்னர் கழுவ வேண்டும்.இதை தினமும் காலையில் எழுந்த உடன் செய்தால் கண் கூச்சம் நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பன்னீர் ரோஜா இதழ் – ஒன்று
2)சாமந்தி பூ – ஒன்று
3)வில்வ இலை – இரண்டு
4)சின்ன வெங்காயம் – ஒன்று
5)தாமரை பூ இதழ் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
**மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை குறிப்பிட்டுள்ள எ;அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு ஒரு கல்வத்தை தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு பன்னீர் ரோஜா இதழ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
**அடுத்து ஒரு சாமந்தி பூ இதழை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு வில்வ இலை,ஒரு உரித்த சின்ன வெங்காயம் மற்றும் தாமரை இதழ் ஒன்று போட்டு பேஸ்ட் பதத்திற்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு இந்த விழுதை ஒரு காட்டன் துணியில் போட்டு பிழிந்து சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த சாறு மூன்று சொட்டு அளவு கண்களில் விட்டால் கண் கூச்சம் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை – ஒன்று
2)மிளகு – இரண்டு
3)உலர் திராட்சை – ஐந்து
செய்முறை விளக்கம்:-
**உரலில் ஒரு காம்பு நீக்கிய வெற்றிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு மிளகு மற்றும் ஐந்து உலர் திராட்சை போட்டு கொரகொரப்பாக இடித்து சாப்பிட்டு வந்தால் கண் கூச்சம் நீங்கும்.அதேபோல் முருங்கை பருப்பில் இருந்து கிடைக்கும் எண்ணையை தினமும் இரவு தூங்குவதற்கு முன் கண்களில் விட்டு படுத்தால் கண் கூச்சம் சரியாகும்.