சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோனா என்ற வகை காரை அறிமுக படுத்தினார். அது ஒரு மின்சாரத்தால் இயங்கும் கார் ஆகும். புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் பெட்ரோல் டீசல் போன்ற எரிவாயு க்களை தடுக்கவும் ஐ. நா அறிவுறுத்தலின் பேரில் சில நாடுகளில் மின்சார ரக வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.
அதன் பேரில் நமது மத்திய அரசும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நமது முதல்வர் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என்ற மாடல் மின்சார ரக காரை அறிமுக படுத்தினார்.
இந்த ரக காரை கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒருவர் வாங்கியுள்ளார். அவரது வாகன நிறுத்தத்தில் இருந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த சமயத்தில் காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சார்ஜ் செய்யும்போது ஏற்பட்ட மின்சார கசிவினால் கார் வெடித்திருக்கலாம் என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனங்களை உபயோகப்படுத்துமாறு அரசாங்கம் கூறிவருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களின் அச்சத்தை போக்கி காரை மேம்படுத்த வேண்டும்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.