Home Blog Page 160

விராட் கோலிக்கு தனது ரத்தால் பொட்டு வைத்த ரசிகர்!! வைரலாகும் வீடியோ!!

0

பெங்களூரு அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி மற்றும் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கொண்டாட்டங்களைச் சீரழித்த துயரமான கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, பெங்களூரு முழுவதும் அதிகரித்த உணர்ச்சிகளின் பின்னணியில் இது வந்துள்ளது. இந்த சிலிர்ப்பூட்டும் வீடியோ வெறித்தனத்தின் இருண்ட பக்கத்தை எடுத்துக்காட்டுகிறது, அங்கு கிரிக்கெட் வீரர்கள் மீதான அபிமானம் சுய-தீங்கு மற்றும் சடங்கு உச்சநிலையாக மாறுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூவின்  (RCB) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட IPL 2025 பட்டத்தை வென்றதைக் கொண்டாட, கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் போஸ்டரில் ஒரு ரசிகர் இரத்த திலகம் பூசுவதைக் காட்டும் ஒரு தொந்தரவான வீடியோ ஆன்லைனில் வெளியாகியுள்ளது . வைரலாகி வரும் இந்த வீடியோ, நெட்டிசன்களை திகைக்க வைத்துள்ளது, மேலும் நவீன விளையாட்டு கலாச்சாரத்தில் ரசிகர் பக்தியின் உச்சத்தை பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

https://x.com/surabhi_tiwari_/status/1930880961899622573?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1930880961899622573%7Ctwgr%5E8421723136d2476e18daace7f5e46e94b2d5d069%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fsports%2Fajeeb-pagalpan-hai-netizens-react-as-fanatic-virat-kohli-fan-applies-blood-tilak-on-his-poster-after-ipl-2025-triumph-video

அந்தக் காட்சிகளில், ஒரு ரசிகர் தனது மணிக்கட்டை வெட்டிக் கொண்டு, அந்த ரத்தத்தைப் பயன்படுத்தி, அவர் ஏந்தியிருக்கும் ஒரு போஸ்டரில் கோலியின் நெற்றியில் சடங்கு முறையில் குறியிடுவது காட்டப்பட்டுள்ளது. சமூக ஊடக பயனர்கள், இதுபோன்ற தீவிர பக்தி செயல்கள் கோலியின் செல்வாக்கால் தூண்டப்பட்டதா அல்லது ஆர்சிபியில் உள்ள பரந்த ரசிகர் கலாச்சாரத்தால் தூண்டப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர்.

பெங்களூரு அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி மற்றும் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கொண்டாட்டங்களைச் சீரழித்த துயரமான கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, பெங்களூரு முழுவதும் அதிகரித்த உணர்ச்சிகளின் பின்னணியில் இது வந்துள்ளது. இந்த சிலிர்ப்பூட்டும் வீடியோ வெறித்தனத்தின் இருண்ட பக்கத்தை எடுத்துக்காட்டுகிறது, அங்கு கிரிக்கெட் வீரர்கள் மீதான அபிமானம் சுய-தீங்கு மற்றும் சடங்கு உச்சநிலையாக மாறுகிறது.

விளையாட்டுகள் ஆர்வத்தைத் தூண்டி மில்லியன் கணக்கானவர்களை ஒன்றிணைக்க முடியும் என்றாலும், இது போன்ற தீவிரமான செயல்கள் போற்றுதலையும் நல்லறிவையும் சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சொன்னா குட் நியூஸ்; தங்க நகை அடமானம் வைக்க இனி கவலையே இல்ல!!

0

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. இதன் மூலம் சிறு கடன் வாங்குபவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரும் நிவாரணத்தை வழங்க முடியும்.

மேலும் ரிசர்வ் வங்கி இரண்டு லட்சம் வரை தங்க கடைங்களுக்கான மதிப்பு கடன் விகிதத்தை அதிகரித்துள்ளது. அதனால் கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் சந்தை மதிப்பில் 85 சதவீதம் வரை மட்டுமே கடனாக பெற முடியும். முன்பிருந்த 75% வரம்பிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக பார்க்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அடமானம் வைத்தால் முன்பு 75 ஆயிரத்துக்கு பதிலாக தற்போது 85 ஆயிரம் கடன் பெறலாம். இத்தகைய மாற்றம் சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் அவசர நிதி தேவைக்கு தங்க நகைகளை அடமான வைப்பவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் LTV விகிதம் என்பது கடன் பெறக்கூடிய சொத்து மதிப்பின் சதவீதத்தை வரையறுப்பதாக பார்க்கப்படுகின்றது. இந்த விகிதம் அதிகரிப்பதன் மூலம் கடனில் பாதுகாப்பை சமரசம் செய்யாமல் கடனை மேலும் அணுகக் கூடியதாக மாற்றலாம் என ரிசர்வ் வங்கி இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

மேலும் தனி நபர் கடன்களுடன் ஒப்பிடும்பொழுது குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக பல தனிநபர்கள் குறுகிய கால கடன் விருப்பமாக தங்க நகைகளை வைத்து கடன்களை பெற விரும்புகின்றார்கள்.ரிசர்வ் வங்கி அறிவிப்பை தொடர்ந்து முக்கிய தங்க கடன் வழங்குபவர்களின் பங்குகள் ஏற்றத்தை கண்டுள்ளது.

மாநிலங்களவை எம்பி தேர்தல்; போட்டியின்றி 6 வேட்பாளர்கள் தேர்வு?

0

மாநிலங்களவை எம்பி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுகவிற்கு நான்கு இடங்களும் அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதில் யார் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

மேலும் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்ட வைகோ, எம் சண்முகம் ,முகமது அப்துல்லா, பி வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரன், ஆகிய 6 எம்பி களின் பதவிக்காலம் ஜூலை 27ஆம் தேதி உடன் நிறைவடைகின்றது. அதனை அடுத்து தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 புதிய எம்பிகள் தேர்வு செய்ய வேண்டும்.

வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் எம் பி களை தேர்வு செய்ய தயாராக இருக்கின்றனர். அதிமுக சார்பில் தனபால் மற்றும் இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். கடந்த 2ஆம் தேதி வேப்பமனுக்கள் தாக்கல் தொடங்கியது.

சுயேச்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். முன்னதாக திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர் மற்றும் மநீக தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,அமைச்சர்கள் ஏவா வேலூ, ராஜேந்திரன், எம்பிக்கள் டி ஆர் பாலு, கனிமொழி, கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப் பெருந்தகை, திருமாவளவன், ராமச்சந்திரன், பே சண்முகம், முகமது அபுபக்கர், ஆகியோர் உடன் இருந்தார்கள்.

மேலும் பகல் ஒரு மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் கட்சியின் வேட்பாளர்கள் இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். திமுக சார்பாக 4 பேரும் அதிமுக சார்பாக இரண்டு பேரும் சுயேச்சி வேட்பாளர்கள் மூன்று பேர் என மொத்தம் ஒன்பது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை வாக்குகள் எண்ணபட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படாத பொழுது திமுக மற்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டி இன்றி தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

0

மத்திய அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றது. அதில் உதவித்தொகை குறித்தும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்காக தற்போது உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-26 ஆம் நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். முதலில் https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்திற்கு சென்று அங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு மாணவர்கள் ஒரு முறை பதிவு மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு என தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில் மூலம் தங்களுடைய சேமிப்பு கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்கிறதா என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி. அதன் பிறகு அனைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்; பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

0

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முழு ஆண்டு தேர்வுகள் அனைத்து பள்ளிகளிலும் நடந்து முடிந்த நிலையில் 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிவடைந்து ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களின் சீருடை குறித்து பள்ளி கல்வித்துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. பள்ளி திறந்த முதல் நாளிலிருந்து மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் மாணவர்கள் அரசு அங்கீகரித்த சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும்.

அதில் இறுக்கமான முக்கால் அளவுள்ள பேண்ட் இறுக்கமான மற்றும் முழங்கை சட்டை உள்ளிட்டவற்றை அணிந்து வர அனுமதி கிடையாது. மேலும் மாணவர்கள் அதிகளவு முடி வைத்திருக்கக் கூடாது, கத்தி, கத்திரிக்கோல் உள்ளிட்ட கூர்மையான பொருட்களை பள்ளிக்கு மாணவர்கள் எடுத்து வர அனுமதி கிடையாது. வண்ண கயிறுகள், ஜாதி அடையாளம் குறிக்கும் பனியன் அணிவது, அடையாள ஸ்டிக்கர் ஒட்டிய சைக்கிள் எடுத்து வருவது உள்ளிட்டவற்றைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் பல வண்ணங்களில் ரிப்பன் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கு வரும் பொழுது தூய்மையான சீருடை அணிந்து காலணி அணிந்து வருவது அவசியம். மாணவர்களுக்கு விடுமுறை தேவைப்பட்டால் அவர்களுடைய பெற்றோர் மூலம் ஆசிரியரிடம் தெரிவித்த பிறகே விடுமுறை எடுக்க வேண்டும். இல்லையெனில் மறுநாள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம்? அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!

0

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் பலரும் கொரோனா பெருந்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்கள். அப்போது கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு,

முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்த நிலையில் தடுப்பூசி போடப்பட்டு படிப்படியாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு தற்போது தான் மக்கள் பொது இடங்களுக்கு சகஜமாக சென்று வருகின்றனர். ஆனால் தற்போது இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றது.

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5364 ஆக உயர்ந்து காணப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் தமிழகத்தில் பொது மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் அல்ல, ஆனால் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க வழியாகும். கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை.

வீரியம் குறைவான கொரோனா தான் பரவி வருகின்றது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பொது இடங்களில் முக கவசம் அணிந்து செல்வது நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவித்தொகை; உடனே விண்ணப்பியுங்கள்!!

0

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்காஜம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறுகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்துள்ள நபர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இயற்கை மரணத்திற்காக உதவி தொகை 20,000 மற்றும் ஈமச்சடங்கு செய்வதற்கு உதவித்தொகை 2500 என மொத்தம் 22,500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

மேலும் இதில் ஈமச்சடங்கிற்காக உதவித்தொகை 2500 ரூபாய் தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்டிருந்தால் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உறுப்பினராக இருக்கக்கூடிய நபரின் இயற்கை மரணத்திற்காக உதவி தொகை 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.

மேலும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, திருமண உதவித் தொகை, கல்வித் தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்கான ஓய்வூதியம் மற்றும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் குழந்தைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனை பெற நிகழ்வு நடைபெற்ற நாளிலிருந்து சுமார் ஆறு மாதத்திற்குள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தனி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விண்ணப்பிப்பதற்கு காலதாமதம் ஆனால் விண்ணப்பங்களுக்கு உரிய அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகு பயன்பெற முடியும். அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுக்குள் விண்ணப்பித்து முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இனி பட்டா பெறுவது இவ்வளவு சுலபமா; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அரசு!

0

நிலம் என்பது முக்கிய சொத்தாக பார்க்கப்படும் நிலையில் அதற்கு பட்டா பெறுவதில் பல்வேறு சிரமம் ஏற்படுகின்றது. இந்நிலையில் பொது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது பட்டா விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கிடைக்கும் எனவும் புதிய முறையை பத்திரப்பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது.

நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துக்களை இ சேவை மூலமோ அல்லது இணையதளம் மூலமாகவோ நேரடியாக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்பிரிவு தேவையற்ற பட்டா மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசின் நில அளவுத்துறை இயக்குனர் கூறுகையில் தமிழக அரசின் உத்தரவின்படி பட்டா பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படும். சில சொத்துக்களில் வில்லங்கம் மற்றும் கோர்ட்டில் வழக்கு இருந்தால் மட்டுமே அதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் பட்டா மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் அப்படி காலதாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பட்டா வாங்குவதில் சிரமம் இருந்ததால் தமிழக அரசு பட்டா சிட்டா போன்றவற்றை ஆன்லைனில் கொண்டு வந்துள்ளது.

பட்டா வாங்குவதற்கான வழிகளை மிகவும் எளிமைப்படுத்தி கொடுத்துள்ளனர். முன்பிருந்த காலகட்டத்தில் சர்வேயரால் ஒரு மாதத்திற்கு 30 மனுக்கள் அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு 80 என்ற அளவில் வேகமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் எந்த விதத்திலும் சிரமம் அடையாமல் இருக்க தமிழக அரசு புதிய செயல்பாட்டினை கொண்டு வந்துள்ளது.

அரசு ஊழியர்களை குஷி படுத்திய தமிழக அரசு; பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்!!

0

தமிழக அரசு சார்பாக தற்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி அவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் எனப்படும் பழைய ஓய்வு புதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். செப்டம்பர் மாதத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

அதற்கு முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டம் இருந்தது. 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. ஒரு சில மாநிலங்களில் அரசு ஊழியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ராஜஸ்தான், திரிபுரா,உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதிமுக ஆட்சி முடிந்து 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது திமுகவின் 309 வது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வு ஊதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு கொரோனா காலகட்டம், மோசமான நிதிநிலை குறித்த காரணங்களை கொண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.

ஜூன் மாதத்தில் 2 நாட்கள் மது கடைகள் மூடல்; எங்கு தெரியுமா!

0

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய பகுதியாக தமிழ்நாடு கேரளா எல்லையோரமாக நிலம்பூர் உள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பகுதி என்றாலும் தமிழக எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த பகுதி இருப்பதினால் தமிழர்கள் சிலர் வசித்து வருகின்றனர்.

மேலும் பணி நிமிர்த்தம் காரணமாகவும் அங்கு தமிழர்கள் வசித்து வரும் நிலையில் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நிலம்பூர் பகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அதனால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஜூன் 19ஆம் தேதி அன்று பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் நிறுவனங்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான ஜூன் 18 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக எந்த இடத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் அங்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதுபோல ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்காக நிலம்பூர் பகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.