Home Blog Page 25

டிசம்பர் 15 யில் என்ட்ரி கொடுக்கும் அமித்ஷா.. தமிழகம் வந்ததும் அடுத்த வேளை இதுதான்!!

0

ADMK BJP: தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என அனைத்தும் இந்த தேர்தலில் குறியாக உள்ளன. தேர்தல் ஆணையமும் அதன் பணிகளில் மும்முரம் காட்டி வரும் வேளையில், மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழகம் நோக்கி திரும்பியுள்ள பாஜக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்திருந்தாலும், அதனை கட்டுப்படுத்துவது அமித்ஷா தான் என்று எதிர்க்கட்சிகளும், அரசியல் ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.

அதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே சில நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனைகளை சரிசெய்ய மூத்த நிர்வாகிகள் பலரும், டெல்லி சேர்ந்து அமித்ஷாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட, ஓபிஎஸ், அண்ணாமலை, டெல்லி சென்ற நிலையில் டிசம்பர் 14 ஆம் தேதி நயினார் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

டிசம்பர் 15 ஆம் தேதி அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் தமிழகத்திற்கு வந்த உடன் முதல் வேளையாக, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த பேச்சுவார்த்தையில் பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைப்பது பற்றியும், அண்ணாமலையை மீண்டும் மாநில தலைவராக நியமிப்பது பற்றியும் பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முக்கியமாக தமிழக தேர்தலில் பாஜகவிற்கான தொகுதி பங்கீடு மற்றும், ஆட்சியில் பங்கை பற்றி அமித்ஷா நேரடியாக பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமித்ஷாவின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

அறிவாலயத்தில் கம்யூனிஸ்ட் நடத்திய மீட்டிங்.. நோக்கம் இது தானா!! விடைதெரியாமல் முழிக்கும் ஸ்டாலின்!!

0

DMK COMMUNIST: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், 2021 தேர்தலில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டுமென அதிமுகவும், இந்த தேர்தலிலும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டுமென திமுகவும் போராடி வருகிறது. அதிமுக பாஜக, தமாக உடன் மட்டுமே கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஆளுங்கட்சியா திமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணியை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளும், நிபந்தனைகளும், திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கையை முதன் முதலில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்திய நிலையில், அடுத்ததாக விசிகவும் இதனை பற்றி பேச தொடங்கியுள்ளது. மேலும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூடிய விரைவில், அதிக தொகுதிகள் என்ற வாதத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்த்த சமயத்தில், தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது போல தெரிகிறது. இன்று அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநில செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, நடைபெற இருப்பதால் அதற்கு முதல்வருக்கு அழைப்பு விடுக்க வந்தோம் என அவர்கள் கூறினார்கள். தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, அறிவாலயம் வந்தாலே, கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து மட்டும் தான் பேசுவோமா என்று கோபமாக பதிலளித்திருந்தனர். இவர்களின் இந்த கருத்து தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது. காங்கிரஸ், விசிகவின் கோரிக்கையை சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்டாலின் தற்போது இவர்களின் நிபந்தனையை எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தவெக மேலுள்ள பயத்தை வெளிச்சம் போட்டு காட்டிய திமுக.. விஜய் குறித்து மறைமுக விமர்சனம்!!

0

TVK DMK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த வேகத்தை மேலும் கூட்டும் வகையில், தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திரமாக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். 2 மாபெரும் நாடுகளையும், 5 பிரச்சார கூட்டங்களையும் நடத்திய விஜய், மூன்று தினங்களுக்கு முன்பு புதுவையில் பொதுக்கூட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து, 18 ஆம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.  விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்.

மேலும் பல இடங்களில் திமுகவையும், ஸ்டாலினையும் நேரடியாக விமர்ச்சித்திருக்கிறார். ஸ்டாலினை அங்கிள் என்றும், சிஎம் சார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடியாக திமுக விஜய்யை தாக்கும் என்று நினைத்த சமயத்தில் அவர்கள் விஜய்யை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் புதிய கட்சியான தவெக மீது 70 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த திமுகவிற்கு பயம் வந்துவிட்டது என்று பலரும் விமர்சித்து வந்தனர். இதற்கு ஏற்றார் போல தான் திமுகவின் நடவடிக்கையும் இருந்தது.

மேலும் ஸ்டாலின் ஒரு முறை, பழைய எதிரிகள் என்று அதிமுகவையும், புதிய எதிரிகள் என்று தவெகவையும் எதிரி பட்டியலில் சேர்த்தது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் திமுகவிற்கு விஜய்யை பார்த்து பயம் என்பது உறுதியானது. இந்நிலையில் அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், வேளாண்துறை அமைச்சர், எம்.ஆர்.கே. பன்னிர் செல்வம் , செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று வந்து இன்றைக்கு முளைத்த காளான்கள் எல்லாம், திமுகவை அளிப்பேன் என்று சொல்வதற்கு தகுதியற்றவர்கள் என்று விஜய்யை மறைமுகமாக சாட்டியிருந்தார். இவரின் இந்த கருத்து தவெக மேலுள்ள பயத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ராமதாஸ் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டம்.. தமிழக அரசின் முடிவை எதிர்நோக்கும் பாமக!!

0

PMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே இருக்கும் நிலையில் கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அதிமுக, திமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாதக தனித்து களம் காண இருக்கும் சமயத்தில், மற்ற கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் தான் பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் உட்கட்சி மோதல் ஏற்பட்டு அது டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராமதாஸ் டெல்லி உயர் நீதி மன்றத்தில் மனு அளிக்க நீதிமன்றம், தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமகவில் தலைமை போட்டி நிலவி வருவதால், வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும் என்பதால், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து டிசம்பர் 17 ஆம் தேதி பாமகவின் அன்புமணி தலைமையில் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதற்காக திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து வருகிறது அன்புமணி தரப்பு.

மேலும் ராமதாஸ் தலைமையில் இன்று வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த கோரியும் ராமதாஸ் தலைமையில் இன்று சென்னையில் போராட்டம் நடைபெற இருக்கிறது. அமைதியான போராட்டத்தில் எங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், சிறை செல்வது போல வேறு வகையான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு எந்த மாதிரியான பதிலை அளிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

தவெக-வைத்தியலிங்கம்.. அவர் செங்கோட்டையன் மாதிரி இல்ல!! தினகரன் சொல்வதென்ன!!

0

AMMK TVK ADMK: 2026 இல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், தமிழக கட்சிகளும் தீவிரமாக உழைத்து வருகின்றன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்தும் அதிமுகவும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளிடம் விவாதித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்ற, அது பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது.

மேலும், இந்த கட்சியில் இணைந்த செங்கோட்டையன், அதிமுகவிலிருக்கும் முக்கிய அமைச்சர்களை தவெகவில் சேர்ப்பேன் என கூறி இருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கம் தவெகவில் இணைய போவதாக தகவல் பரவி வந்தது. இது குறித்து வைத்தியலிங்கம் எந்த கருத்தையும் கூறாத நிலையில், அது உறுதி என அனைவரும் நினைத்தனர்.

இவ்வாறான நிலையில் இது குறித்து பேசிய, டிடிவி தினகரன், நான் உறுதியாக சொல்கிறேன், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தவெகவில் இணைய மாட்டார் என்றும், அவர் நன்கு யோசித்து முடிவெடுக்க கூடியவர் என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்தது போல் உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த போது அதனை பற்றி அவர் என்னிடம் கூறவில்லை என்று தினகரன் கூறியது அவர்களுக்குள் உள்ள முரண்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. 

டிசம்பர் 14 யில் நயினார்.. இன்னக்கி எடப்பாடி பழனிசாமி!! பாஜக போடும் அரசியல் கணக்கு!!

0

ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக, அதிமுகவை விட அதிகமாக சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் பாஜகவின் முயற்சிகள் அனைத்தும் சுக்கு நூறாகி கொண்டிருக்கின்றன. அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் பாஜகவில் ஐக்கியமாவார்கள் என்று நினைத்த சமயத்தில் செங்கோட்டையன் திடீரென தவெகவில் இணைந்து விட்டார். டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் சேர மாட்டோம் என்று முடிவாக உள்ளார். அதிமுகவில் நுழைந்தே தீர வேண்டுமென ஓபிஎஸ் போராடி வருகிறார்.

இவ்வாறான நிலையில் தான் ஓபிஎஸ், 5 தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவரை தொடர்ந்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு வர, அவரும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க, அதற்கு பின் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து பேசினார். இவ்வாறு வரிசையாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி வரும் சூழல் பரபரப்பை உருவாக்கியது. இதனால் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது. இந்த கேள்வியை மேலும் பலப்படுத்தும் வகையில், டிசம்பர் 14 அன்று, தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அமித்ஷா அழைப்பின் பேரில் டெல்லி சென்று அவரை சந்திக்க உள்ளார்.

அந்த சந்திப்பிற்கு முன், இன்று இபிஎஸ்யை நயினார் சந்தித்து பேசியது கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை டெல்லி சென்று வந்தவுடன் தினகரனை சந்தித்தது போலவே டெல்லி செல்வதற்கு முன்பு நயினார் இபிஎஸ்யை சந்தித்தது, ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோரை கட்சியில் சேர்ப்பதை பற்றியும், பாஜகவின் அரசியல் வியூகம் குறித்தும் கலந்துரையாட பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெகவுடன் பாமகவின் டாப் தலை நடத்திய மீட்டிங்.. அன்புமணி விஜய் மட்டும் தான் மிஸ்ஸிங்!!

0

TVK PMK: பாமகவில் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. எதிர் தரப்பு ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி வந்த அன்புமணியும், ராமதாசும், இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கினார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் அறிவித்த நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக டெல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அன்புமணி தான் தலைவர் என்ற கருத்தை மறுக்கவில்லை.

மேலும், பாமகவில் தற்சமயம், தலைமை போட்டி நிலவி வருவதால், தேர்தல் நேரத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை எழும் என்பதால், பாமகவின் மாம்பழம் சின்னம் தற்சமயம் முடக்கி வைக்கபடுகிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை ராமதாஸ் தரப்பு கொண்டாட, அன்புமணி தரப்பு அதனை விமர்சித்து வந்தது. இவ்வாறான நிலையில் பாமகவின் கூட்டணி யாருடன் என்பது தற்சமயம் வரை உறுதி  செய்யபடவில்லை. அன்புமணி அதிமுக பக்கம் ஆதரவு தெரிவித்து வருவதால், அக்கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

17 ஆம் தேதி ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால், அதற்கு திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி ஆதரவாளர் பாலு அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் இன்று தவெகவுக்கும் அழைப்பது விடுத்த அவர், அழைப்பிற்கு பின், தவெகவின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் என அனைவரிடம் சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் விஜய் தலைமயிலான கூட்டணியில் பாமக சேர்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

செங்கோட்டையனுக்காக அப்பாவை உதறிய விஜய்.. KAS பிடியில் தவெக!! ஆப்பு வைத்த இணைவு!!

0

TVK: இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 10 முறை தோல்வியடைந்த அதிமுக 11 வது முறையாவது வெற்றி பெற வேண்டுமென வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த முறையும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென திமுக கடுமையாக முயற்சித்து வருகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று உறுதியாக கூறி வருகிறது. மேலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களமிறங்கினாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென கூறி வருகிறது. இவ்வாறு அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மற்ற கட்சிகளை விட அதிகளவு மக்களை ஈர்த்துள்ள கட்சி என்றால் அது தவெக என்றே கூறலாம். 

விஜய் கட்சிக்கு பெருகும் ஆதரவை கண்ட, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் பலரும் தவெகவில் இணைய ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கு பிள்ளையார் சுழி போட்டது அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தான். அவர் இணைந்த பிறகு தான், நாஞ்சில் சம்பத் மற்றும் சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைய ஆரம்பித்தனர். கரூர் சம்பவம் ஏற்படத்திலிருந்தே தவெகவில் உட்கட்சி மோதல் வெடித்து வரும் சமயத்தில், தற்போது புதிதாக செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்துள்ளதால், மேலும் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், விஜய்யின் முன்னாள் மேனேஜராக இருந்த பி.டி. செல்வகுமார் இன்று திமுகவில் இணைந்த நிலையில், தவெக குறித்து பேசிய அவர், தவெகவில் புதிய நபர்களின் வருகையால், விஜய்யின் தந்தைக்கே மதிப்பு குறைந்து விட்டது என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். அவர் புதிய நபர்கள் என்று சொன்னது செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத்தை தான் என்பது விளங்குகிறது. இவரின் இந்த கருத்து, தவெகவில் ஏற்பட்டுள்ள பிரிவினையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்துக்கும், ஆதவ் அர்ஜுனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் புதிய நபர்களின் வருகையால், சொந்த அப்பவே ஒதுக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஓபிஎஸ்.. ஆனா ஒரு கண்டிஷன்!! இபிஎஸ் போட்ட ரூல்!!

0

ADMK: தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாநில கட்சிகளிடையே பல்வேறு திருப்பங்கள் நிலவி வருகின்றன. திமுகவின் கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ள நிலையில், தவெகவின் கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அதிமுகவில் பிரிவினைகள் அதிகரித்து வருகின்றன. அதிமுகவிலிருந்து பிரிந்த தினகரன் தனிக்கட்சி துவங்கிய நிலையில், சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார். மேலும் அதிமுகவுக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இபிஎஸ்க்கு கெடு விதித்திருந்தார். அதன் படி நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இபிஎஸ் இதனை தட்டிக் கழித்து விட்டார். இதன் மூலம் இவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது நடக்காத காரியம் என்பதை இபிஎஸ் தெளிவுபடுத்தி விட்டார்  என்று ஒரு தரப்பு கூறி வந்தது.

ஆனால் அதிமுகவை சேர்ந்தவர்கள், பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குறித்து இபிஎஸ் மௌவுனம் காத்ததால், அரை மனதாக ஒருங்கிணைப்புக்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டார் என்று கூறுகின்றனர். மேலும் ஓபிஎஸ் அதிமுகவில் இணைக்கப்பட்டாலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கபடாது என்றும், இபிஎஸ் கை காட்டும் தொகுதியில் தான் ஓபிஎஸ் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த தகவல் இன்னும் உறுதிபடுத்த படாத நிலையில், ஒரு வேலை இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், அதிமுக, பாஜக மற்றும் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

செங்கோட்டையனை போட்டிக்கு அழைத்த நயினார்.. ஒன் டு ஒன் மேட்சுக்கு ரெடியான திருநெல்வேலி!!

0

BJP TVK: அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிருப்தி அமைச்சர்களை தவெகவில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இவரின் இந்த இணைவு குறித்து, பலரும் அவர்களது கருத்துக்களை கூறி வருவதோடு, இது விவாதங்களுக்கும் வழிவகுத்ததுள்ளது. அந்த வகையில் இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் தவெக எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்றும், தவெகவை மிகவும் தாழ்மைப்படுத்தி பேசியிருந்தார்.

செங்கோட்டையனின் தவெக இணைவு தவறான முடிவு என்பது போலவும் ஒரு கருத்தை கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது என்கிறார் நயினார், அவருக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். அவர் எங்கு போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். அவர் எங்கு நிற்கலாம் என தொகுதியை தேடி கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் நிற்க சொல்லுங்கள் என்று சவால் விட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய நயினார், செங்கோட்டைனுக்கு என்மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை, நான் நியாமான விசயத்தை தானே சொன்னேன். ஒரு வேளை செங்கோட்டையன் என்னை டெபாசிட் இழக்க செய்வாரானால், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் இந்த கருத்து, 2026 தேர்தலில் செங்கோட்டையனும், நயினாரும் ஒரே தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் திருநெல்வேலி தொகுதியில் போட்டி அதிகளவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.