Home Blog Page 26

தவெக துணை முதல்வர் பதவியும் இவருக்கு தானா.. 18 ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

0

TVK: அதிமுக, திமுக என இருந்த தமிழக அரசியல் தற்போது தவெக, நாதக-வையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என்பது தெளிவாகிறது. விஜய் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போவதால் அவர் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் முடிவில் தான் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம்  ஓட்டாக மாறுமா என்பது தெரியவரும். இந்நிலையில், தவெக ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக வரும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்ற கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் பலரும் விஜய்யுடன் கைகோர்த்து வருகின்றனர்.

இதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் அமைந்த சம்பவம் தான் செங்கோட்டையன் சேர்க்கை. என்னை தொடர்ந்து இன்னும் பலர் தவெகவில் இணைய போகிறார்கள் என செங்கோட்டையன் கூறினார். இதனை தொடர்ந்து, கொங்கு மண்டலத்தை தவெக பக்கம் ஈர்ப்பதற்க்கான பணியை செங்கோட்டையன் கையிலெடுத்துள்ளார். தவெகவில் இணைந்த இவருக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.

ஏற்கனவே 2 பதவிகளை வகித்து வரும் செங்கோட்டையனுக்கு மூன்றாவதாக ஒரு பதவியை ஒதுக்க விஜய் முடிவெடுத்துள்ளாராம். வரும் 18 ஆம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், செங்கோட்டையனுக்கு தவெகவின் துணை முதல்வர் பதவியை அறிவிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது இன்னும் உறுதிப்படுத்த படாத நிலையில் இது குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. ஈரோடு செங்கோட்டையனின் கோட்டை என்பதால், இந்த இடத்தில் இதனை அறிவிப்பது தான் சரியாக இருக்கும் என்று விஜய் நினைக்கிறாராம்.

திமுகவில் இணைந்த விஜய்யின் நெருங்கிய நண்பர்.. ஆட்டம் காணும் அரசியல் களம்!!

0

DMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் அரங்கு பரபரப்பாக உள்ளது. மக்களும் தேர்தலை எதிர்நோக்கி உள்ள சமயத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலையும் தன் வசப்படுத்த வேண்டுமென பல முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளும், பழைய எதிரியான அதிமுகவும், புதிய எதிரியான தவெகவும் அதனை சிதைக்க முயன்று வருகின்றன. அதிமுகவையும், கூட்டணி கட்சிகளையும் கூட திமுக சமாளித்து விடும். ஆனால் தவெகவை சமாளிப்பது அதற்கு பெரும்பாடாக உள்ளது.

திமுக, தவெகவை எதிரியாக ஏற்று கொண்டதே இதற்கு உதாரணம். இந்நிலையில் விஜய்க்கு மேலும் பலத்தை கூட்டும் வகையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். இன்னும் சில அமைச்சர்களை கட்சியில் சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தவெகவுக்கு பலம் கூடி கொண்டே செல்வது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இவ்வாறான நிலையில் தான் விஜய்யின், முன்னாள் மேனேஜர் பி.டி. செல்வகுமார் திமுகவில் இணைந்துள்ளார்.

இவர் புலி படத்தின் இயக்குனராகவும், புறா, வில்லு, போக்கிரி படத்தின் பிஆர்ஓ-வாகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் விஜய்க்கு மிகவும் நெருக்கம் என்று திரைதுறை வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படி இருக்க இவர் ஏன் திமுகவில் இணைந்தார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. விஜய்யின் நண்பர் என்பதால், அவரை எதிர்ப்பதற்காக பி.டி. செல்வகுமாருக்கு உயர்ந்த பதவி தற்படலாம் என்று யூகிக்கப்படுகிறது.

விஜய் வந்தா என்ன வராட்டி என்ன.. நம்ப வின் பண்ண இவங்க மட்டும் போதும்!! பாஜக போட்ட பிளான்!!

0

BJP TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக மாநில கட்சிகளை விட தேசிய கட்சியான பாஜக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் அதிமுக உடன் கூட்டணி. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுகவின் நிபந்தனைகளை ஏற்று அதனுடன் கூட்டணி அமைத்த பாஜக, அடுத்ததாக நயினார் நாகேந்திரன் தலைமையில் சுற்று பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது.

ஆனால் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளார். இதற்காக அமித்ஷா எவ்வளவு முயற்சித்தும் அது நிறைவேறவில்லை. அமித்ஷா விஜய்யை நேரில் சந்தித்து பேசுவது மட்டும் தான் பாக்கி. இவர்களின் முயற்சி கை கூடாததால் ஆத்திரமடைந்த பாஜகவை சேர்ந்தவர்கள் விஜய்யை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். அது மட்டுமல்லாமல், விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் வேலையை பாஜக கை விட போவதாகவும் தகவல் வெளி வந்துள்ளது. அதற்கு பதிலாக, பாமக, தேமுதிக, ஜான்பாண்டியன் கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான பணியை தீவிரப்படுத்த போவதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. விஜய்யை கூட்டணியில் சேர்த்தால் அதிக வாக்குகள் வரும்.

அதாவது தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். பீகார் தேர்தலை போலவே தமிழகத்திலும் வரலாற்று சாதனை படைக்க முடியும் என்ற நோக்கத்தில் தான் பாஜக தவெகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. மேலும் அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதை போல விஜய்யும் இருக்க வேண்டும் என பாஜக நினைத்தது. ஆனால் விஜய் இவை எதற்கும் ஒத்து வரவில்லை என்பதால் அவரை தவிர்த்து வேறு கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட அமித்ஷா உத்தரவிட்டுள்ளாராம். தவெகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்ததற்காக விஜய் இருந்தால் மட்டும் தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும் என்று பொருளில்லை என பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறுகின்றனர்.

இவர நம்பவே முடியலையே.. யூடர்ன் அடித்த தினகரன்!! பதறும் விஜய்!! கொண்டாட்டத்தில் ஸ்டாலின்!!

0

AMMK DMK TVK: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், அண்மையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று கூறி NDA கூட்டணியிலிருந்து வெளியேறினார். மேலும் தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதனை தொடர்ந்து இவரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது ஈடேறவில்லை. இபிஎஸ்யை கடுமையாக எதிர்த்து வரும் டிடிவி தினகரன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழ, அவர் விஜய் அல்லது திமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே அவரது நடவடிக்கைகளும் இருந்தது. மேலும் தவெகவுக்கும், எம்ஜிஆர், ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த திமுகவுக்கும் தான் போட்டி என்று அவர் கூறியதால் தவெக பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருந்தது. ஆனால் தற்போது அவர் கூறிய கருத்து விஜய்யை எதிர்த்தும் திமுகவிற்கு ஆதரவாகவும் இருக்கிறது. நேற்று முன்தினம் புதுவையில், பொதுக்கூட்டம் நடத்திய விஜய், புதுச்சேரி தமிழகத்தை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பாராட்டி இருந்தார். இது பலரின் கண்டனங்களுக்கும் ஆளான நிலையில், இது குறித்து டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

பாண்டிச்சேரி தமிழ்நாட்டை விட சிறப்பாக உள்ளது என்பது விஜய்யின் கருத்து, என்னுடைய கருத்து அது கிடையாது என்று விஜய் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதை அவர் உணர்த்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததால் தினகரனும் கூடிய விரைவில் விஜய் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில், இவரின் இந்த பேச்சு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன் காரணமாக இவர் திமுகவில் சேர்வதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் உள்ளது.

விஜய் போட்டியிடும் தொகுதி.. திருச்சி பரபரப்புரை இதுக்கு தானா!! வெளிப்பட்ட விஜய் வியூகம்!!

0

TVK: 2026 சட்டசபை தேர்தலை எதிர் நோக்கி மாநில கட்சிகளும், தேர்தல் ஆணையமும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த முறை தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டியை எதிர்கொள்ள போகிறது. திமுக, அதிமுக, நாதக, புதிய கட்சியான தவெக போன்றவை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது. அதிலும் தவெகவிற்கான ஆராவாரம் பெருமளவில் உள்ளது என்றே சொல்லலாம்.

இதனால் இது ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர் கட்சியாக வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது.  இவ்வாறு பல்வேறு கருத்துக்கள் பரவி வரும் வேளையில், விஜய் அவரது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். ஆனாலும் கூட தவெக தலைமையில் இன்னும் ஒரு கட்சி கூட இணைந்த பாடில்லை. விஜயுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விகள் மேலோங்கி இருந்தாலும், விஜய் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

விஜய் போட்டியிடும் தொகுதியில் தானும் நேரடியாக போட்டியிட போவதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இப்படி இருக்கும் சமயத்தில் விஜய் போட்டியிடும் தொகுதி பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது. தவெக தனது முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்கியதாலும், திருச்சியில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதாலும், அவர் திருச்சியிலுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

தேதி குறிச்சாச்சி.. வைத்தியலிங்கம் சேர வேண்டியது மட்டும் தான் பாக்கி!! லீக் ஆன டாப் சீக்ரெட்!!

0

ADMK TVK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தல் என்றாலே அது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்த நிகழ்வு தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வரவு. இது தினந்தோறும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், சமீப காலமாகவே தவெகவில் முக்கிய அமைச்சர்களின் வருகையும், தொண்டர்களின் இணைவும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார்.

இவருக்கு தவெகவில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இவர் சேர்ந்த பின்பு தான் நாஞ்சில் சம்பத் மற்றும் சில அதிமுகவின் முக்கிய முகங்கள் தவெகவில் சேர்ந்தனர். இதனால் இவர் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கு அடித்த அதிஷ்ட்ம் என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை தவெகவில் சேர்க்கும் பணியை செங்கோட்டையன் தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கத்தை தவெகவில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை செங்கோட்டையன் மூலம் நடைபெற்று வந்தது.

ஓபிஎஸ் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும், அரசியலில் அவருடைய பணி குறைந்து கொண்டே செல்கிறது என்பதாலும், இதனை சரிக்கட்ட அவர் தவெகவில் இணைய சம்மதித்து விட்டார் என்றும் பலர் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் விஜய் கட்சியில் இணைவது கிட்ட தட்ட உறுதியானதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஈரோட்டில் 18 ஆம் தேதி நடக்கும் தவெக பொதுக்கூட்டத்தில் வைத்தியலிங்கம் அதிகாரபூர்வமாக இணைய போவதாகவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றனர்.

பாஜகவின் ஆட்டத்திற்கு ஃபுல் ஸ்டாப் வைத்த இபிஎஸ்.. பொதுக்குழு கூட்டத்தில் ஓப்பன் டாக்!!

0

ADMK BJP: அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் அரங்கு மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் மற்ற கட்சிகளை விட இந்த கட்சி அதிக வேகமெடுத்துள்ளது என்றே கூறலாம். அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் அத்தனையும் பாஜக தான் வழி நடத்தி வருகிறது.

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை தொடங்கி, கூட்டணி முடிவுகள், தொகுதி பங்கீடு என எல்லாவற்றையும் பாஜக தான் கண்காணித்து வருகிறது. இதனால் அதிமுக பாஜக கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இதனால் இபிஎஸ் மிகவும் ஆத்திரத்தில் இருந்தார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி முடிவுகளை எடுக்கும் முழு உரிமை எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் பல்வேறு விஷயங்களை பாஜகவிற்கு தெரியப்படுத்தியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. அதில் முக்கியமானது, ஓபிஎஸ், தினகரன் போன்றார் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் சேர்வதற்கு இபிஎஸ்யின் சம்மதம் அவசியம் என்பதும், எந்த ஒரு கட்சி கூட்டணியில் சேர்வதாக இருந்தாலும் அது அதிமுகவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகள் இனிமேல் பாஜகவிடம் எடுத்து செல்லபடாது என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

தவெகவின் டாப் தலையை சந்தித்த அதிமுக அமைச்சர்.. சேர்க்கைக்கு அச்சாரமிட்ட மீட்டிங்!!

0

ADMK TVK: சமீப காலமாகவே அதிமுகவில் ஏற்பட்டு வரும் சிக்கல்கள் அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியது, ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை ஆரம்பித்தது, சசிகலா அரசியலிலிருந்து விலகி இருப்பது, செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்தது போன்றவை பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. தவெகவில் சேர்ந்த செங்கோட்டையன் அதிமுகவின் மேல் அதிருப்தியில் உள்ள பலரும் தவெகவில் சேரப்போகிறார்கள் என்று கூறியிருந்தார். அதன்படி அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல்வேறு அமைச்சர்களுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் 18 ஆம் ஈரோட்டில் நடக்க இருக்கும் தவெக பிரச்சாரத்தில் இவர்கள் அனைவரும் இணைவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில காலமாகவே இபிஎஸ்யின் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ராஜ்மோகனை சந்தித்துள்ளார். இது மரியாதையை நிமித்தமான சந்திப்பாக தெரியவில்லை என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால், அதிருப்தி அமைச்சர்களை ஒன்று சேர்ப்பேன் என்று செங்கோட்டையன் கூறியதால் இது சேர்க்கைக்கான சந்திப்பு தான் என்று யூகிக்கப்படுகிறது. இது குறித்து அதிகார பூர்வமான தகவல் வெளிவராத நிலையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் பலரும் தவெகவில் இணைந்து வருவது இபிஎஸ்க்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறுகின்றார். இந்த நிலையிலாவது இபிஎஸ் தனது முதல்வர் பதவியிலிருந்து கீழிறங்கி தவெக தலைமையில் கூட்டணி அமைப்பாரா என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

அதிமுகவில் ஆட்சி பங்கு.. எம்.பி. தம்பிதுரை சொன்ன தகவல்!! வாயடைத்து போன பாஜக!!

0

ADMK BJP: தமிழகத்தில் கால் பாதிக்க முடியாமல் தவிக்கும் பாஜக, பீகார் தேர்தல் பெற்ற வெற்றியை மையப்படுத்தி வென்றுவிடலாம் என்று ஆலோசித்து வருகிறது. இதற்காக அதிமுக உடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து பல்வேறு வியூகங்களையும் வகுத்து வருகிறது. இபிஎஸ்யிடம் அதிக தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பாஜக இந்த முறை தமிழக ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. இதனை பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறி வந்தனர்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெளிவாக கூறியிருந்தார். இவ்வாறு பாஜகவை சேர்ந்தவர்கள் ஆட்சி பங்கை வலியுறுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. தம்பிதுரையிடம் ஆட்சியில் பங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, கண்டிப்பாக யாருக்கும் ஆட்சியில் பங்கை யாருக்கும் கொடுக்க மாட்டோம், அதிமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைக்கும். இது தொடர்பான அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி விரைவில் தெரிவிப்பார் என்றும் கூறினார். இவ்வாறு அதிமுகவும், பாஜகவும் ஆட்சி பங்கு தொடர்பாக கருத்து தெரிவித்து வருவதால், அவர்களுக்குள் சச்சரவு அதிகரித்து கொண்டே செல்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதை விரும்பாத இபிஎஸ் ஆட்சி பங்கு கோரிக்கையை எவ்வாறு எதிர் கொள்ள போகிறார் என்பது தெரியவில்லை.

அதிமுக ஒருங்கிணைப்பு.. அவர்களிடம் கேளுங்கள்!! ஓபிஎஸ் பதிலால் பரபரப்பு!!

0

ADMK: பல அணிகளாக பிரிந்து இருக்கும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கழக குரல் எழுந்து வரும் நிலையில், இன்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரிந்த தலைவர்களை சேர்ப்பதற்கான ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிமுக அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா, செங்கோட்டையன் போன்றவர்களை துரோகிகள் என்று கூறி வருவதால் இந்த இணைப்பு சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் பேசிய இபிஎஸ், இந்த தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், அதிமுக ஒன்று சேர பாஜக பாஜக விரும்புவது பற்றிய கேள்விக்கு, இதை பொதுக்குழு நடத்துவோரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார். ஒருங்கிணைவு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என இபிஎஸ்க்கு, ஓபிஎஸ் டிசம்பர் 15 வரை கெடு விதித்த நிலையில் இவரின் இந்த பதில் கவனம் பெற்றுள்ளது. மேலும் ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்க்கபடவில்லை என்றால் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை திமுகவா, தவெகவா, பாஜகவா இல்லை தனிக்கட்சி தொடங்குவது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.