புதன்கிழமை, செப்டம்பர் 10, 2025
Home Blog Page 37

மகளிருக்கு அடித்த ஜாக்பாட்; உங்களுக்காக காத்திருக்கும் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

0

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட ,சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது.

குடும்பத்தில் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளை தடுக்கவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் பணியாற்ற பணியாளர் இருந்தால் ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண் மற்றும் மூன்றாம் பாலினதவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் தொழில் முனைவோர்களாக மாற்றவும் பாதுகாப்பிற்காகவும் குழந்தைகள் திருமணம் உதவி பெண்கள் உள்ளிட்டவை விழிப்புணர்வு வழங்கிட செயல்படுத்தி வருகின்றது.

மகளிர் அதிகாரம் மையத்தில் தரவு நுழைவு பணியாளர் ஒரு பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. அதனால் பெண்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரிக்கு ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பாமக இருக்கும் கூட்டணியை திரும்பி கூட பார்க்க மாட்டேன்; விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!

0

விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டேன் என கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார். அன்புமணிக்கு அறிவுரை கூறும் வகையில் திருமாவளவன் பேசியது மகிழ்ச்சி அளிபதாக இருக்கும் நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை முரண்பாடு, ஆதரவு இருக்கும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்பு மணிய இடையில் மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் அடுத்த கட்டத்தின் உச்சத்தை எட்டி வருகின்றது. ராமதாஸ் ஒரு பக்கம் கடைசி மூச்சு இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று கூறிவரும் நிலையில் அன்புமணி ஒவ்வொரு மாவட்டமாக பொதுக்குழுவை கூட்டி ஆதரவை திரட்டி வருகின்றார்.

மேலும் ராமதாஸ் ஆதரவாளர்களாக இருக்கும் எம்எல்ஏக்கள் ஜிகே மணி மற்றும் அருள் இருவரையும் அன்புமணி கிண்டல் செய்து பேசியிருக்கிறார். அவர்களின் உடல்நலம் விரைவாக குணமடைய அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம் எனவும் அன்புமணி கூற அங்கிருந்து அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் சிரிக்க தொடங்கியுள்ளனர்.

பாமகவில் ஏற்படும் பிளவு காரணமாக கூட்டணி அமைப்பதில் சிக்கல் உருவாகும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் விசிக திருமாவளவன் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கின்றார்

அப்பொழுது திமுக கூட்டணிக்குள் பாமக வந்தாலும் விசிக வெளியேறும் என்பதை கூறி இருக்கின்றார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பின் பொழுது ராமதாஸ்யிடம்  கேள்வி எழுப்பப்பட்டது.

அவருடைய கருத்து கொள்கை அதில், கருத்து சொல்வதற்கு நான் யார் ஒருவருக்கும் ஒரு கருத்துக் கொள்கை முரண்பாடு ஈர்ப்பு உள்ளிட்டவை இருக்கும் அதனை நாம் கருத்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இது அவசியம் கிடையாது; நீதிபதி உத்தரவு!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வரக்கூடிய பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாகனத்திற்கான அனுமதி பாஸ் வாங்கி வர வேண்டுமென தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் வந்து உத்தரவினை எதிர்த்து இந்து முன்னணி சார்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த முன்னணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாகனத்தில் வரக்கூடியவர்கள் முறையாக வாகன அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை அண்ணா நகர் காவல் துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பிறப்பிக்க எந்தவித அதிகாரமும் கிடையாது.

அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அதனால் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதாடினார். அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி அதிக அளவில் பொதுமக்கள் கூட கூடிய மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களை முறைப்படுத்துவதற்காக அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறைதான்.

அதனால் இந்த உத்தரவுகளை தலைமை காவலருக்கு மேல் உள்ள அதிகாரிகள் வழங்கலாம் என சட்டம் இருக்கிறது என தெரிவித்தார். இந்த உத்தரவு என்பது மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு இல்லை வாகனங்களையும் முறைப்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாநாட்டுக்கு வரும் வாகனங்களின் நிற்கும் இடங்களில் காவல்துறை போலீஸ் சோதனை மையம் அமைக்க வேண்டும், மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம், ஓட்டுனரின் ஆதார் அட்டை, வாகன பதிவு சான்று உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறையினரிடம் வழங்க வேண்டும். இதனை பதிவு செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டனர்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் பாஸ் பெற்றிருப்பது அவசியம் என பிறப்பிக்கப்பட்ட நிபந்தனை ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சின்னத்தம்பி செஞ்ச சாதனையை எந்த படத்தாலும் முறியடிக்க முடியாது! நடிகர் பிரபு ஒரு பார்வை!

0

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனின் மகனாக அறிமுகமாகி பின்னர் படிப்படியாக தன்னுடைய நடிப்பு திறமையால் உயர்ந்து தற்போது குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் நடிகர் பிரபு. இவரை ஒரு போலீஸ் ஆபிசர் ஆக்குவது தான் தந்தை சிவாஜியின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால் பிரபுவின் சித்தப்பா சண்முகம் இவரை சினிமாவில் நடிக்க வைக்க ஆசைப்பட்டு சங்கிலி என்ற படத்தில் சிவாஜியுடன் நடிக்க வைத்தார்.

இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தம் 230 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். 140 படங்களுக்கு மேல் ஹீரோவாகவும், மீதமுள்ள படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார் பிரபு. அதேபோல எல்லா முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்த ஒரே நடிகர் பிரபு தானாம். 1988 ஆண்டுகளில் பிரபு நடிப்பில் மொத்தம் 14 படங்கள் வெளியானது.

அந்த 14 படங்களில் 13 படங்கள் வெற்றி பெற்றது. ஒரே வருடத்தில் 13 வெற்றிப்படங்களை கொடுத்த ஒரே நடிகர் பிரபு தான். அதேபோல 1991 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு முழுவதும் வெளியான சின்னத்தம்பி படம் 46 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. ஒரு நடிகரின் படம் 46 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது பிரபுக்கு தானாம். அதேபோல பிரபு கதாநாயகனாக நடிக்கும் படங்கள் பொதுவாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல வசூல் செய்யுமாம். தமிழ் சினிமாவில் 40 இயக்குனர்களை அறிமுகப்படுத்தியதும் பிரபு தான்.

நீ எல்லாம் கிராமத்து கதை பண்ணத்தான் லாயக்கு! சிட்டி சம்மந்தமான படத்தை எடுக்க நீ சரிப்பட்டு வரமாட்ட! சிகப்பு ரோஜாக்கள் குறித்து மனம் திறந்த பாரதி ராஜா!

0

இயக்குனர் இமயம் பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அதுவும் அவரது ரெண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் ஒரு வருடத்திற்கு மேலே சென்னை தேவி தியேட்டரில் ஓடி இருக்கிறது.

அந்த காலகட்டத்தில் இவர் கிராமத்து பின்னணி கொண்டவர், இவரால் வெறும் கிராமத்து பின்னணி கொண்ட படங்கள் எடுத்து தான் வெற்றி பெற முடியும். சிட்டி பின்னணி கொண்ட படங்களை எடுக்க சரிப்பட்டு வரமாட்டார் என்று இவர் காதுப்படவே நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். அப்போது இவர் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் கதையை எழுதிவிட்டு என்னாலும் சிட்டி பின்னணி கொண்ட படத்தை எடுக்க முடியும் என்று தன்னை நிரூபிக்க அந்த காலத்தில் இருந்த இரண்டு முன்னணி நடிகர்களிடம் சிகப்பு ரோஜாக்கள் கதையை சொல்லி இருக்கிறார்.

இவர் மேல் நம்பிக்கை இல்லாமல் அவர்கள் சிகப்பு ரோஜாக்கள் படத்தினை நிராகரித்து விட்டனர். பின்னர் கமலிடம் சொன்னவுடன் கமல் ஒப்புக்கொண்டுள்ளார். T Nagar யில் மிகப்பெரிய பங்களாவை கமலின் பரிந்துரையில் வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இடம்பெற்றிருக்கும் கருப்பு நிற பூனை மூன்றே நாட்களில் காணாமல் போயுள்ளது. இவர்கள் எங்கு தேடியும் அந்த பூனை கிடைக்கவில்லை.

இதனால் அந்த பூனையின் உரிமையாளர் படக்குழுவினர் மீது வழக்கு போட்டுள்ளார். பின்னர் அவரிடம் சமாதானம் பேசி வழக்கை வாபஸ் வாங்க வைத்துள்ளனர். வெறும் 20 நாட்களில் அந்த பங்களாவில் சிகப்பு ரோஜாக்கள் படத்தை எடுத்து முடித்துள்ளார் பாரதி ராஜா. படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சிகப்பு ரோஜாக்கள் படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அந்த காலத்தில் தேவி தியேட்டரில் இருந்து அண்ணா சாலை வரைக்கும் நிற்குமாம். தன்னாலும் நகரப்பின்னணி கொண்ட படங்களை எடுத்து வெற்றி பெற வைக்க முடியும் என்று பாரதி ராஜா நிரூபித்தது தான் இந்த சிகப்பு ரோஜாக்கள். அந்த காலத்திலேயே கமலஹாசன் புதுப்புதுக் கதை மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்திருக்கிறார் பாருங்கள்.

2026 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு கட்டாய ABS மற்றும் இரட்டை ஹெல்மெட் – புதிய உத்தரவு!

0

இந்தியாவில் வாகனப் பாதை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது. 2026 ஜனவரி 1 முதல், புதிய இருசக்கர வாகனங்களில் (ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்) கட்டாயமாக ABS (Anti-lock Braking System) பொருத்தப்பட வேண்டும் என்றும், வாங்கும் ஒவ்வொரு வாகனத்துக்கும் 2 BIS சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலை?

தற்போது, 125ccக்கு மேற்பட்ட வாகனங்களுக்கே மட்டுமே ABS கட்டாயம். இதனால், சுமார் 40% வாகனங்களில் இத்தகைய பாதுகாப்பு வசதி இல்லாத நிலை உள்ளது. ABS மூலம் திடீரென பிரேக் அடித்தாலும் சக்கரங்கள் பூட்டு ஏற்படாமல், வாகனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இதனால் விபத்து ஏற்படும் சாத்தியம் 35%–45% வரை குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரட்டை ஹெல்மெட் கட்டாயம்!

இப்போது ஒரு ஹெல்மெட் மட்டும் வழங்குவது வழக்கம். ஆனால், 2026 முதல் வாகன உரிமையாளருக்கும் பின்னாடி பயணிப்பவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்ய, 2 ஹெல்மெட்டுகள் (BIS சான்றளிக்கப்பட்டவை) கொடுக்க வேண்டிய கட்டாயம் விதிக்கப்படுகிறது.

கடுமையான முடிவுக்கு காரணம்?

இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் 44% இருசக்கர வாகன பயணிகளே உயிரிழப்பதற்கான காரணமாக உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணியாததாலும், வாகன கட்டுப்பாட்டின்மை காரணமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகள், இந்திய சாலைகளை பாதுகாப்பானவையாக மாற்ற அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த புதிய விதிமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடைமுறைப்படுத்தப்பட்டால், இது மில்லியன் கணக்கான இருசக்கர பயணிகளுக்கான உயிர்காக்கும் பாதுகாப்பாக அமையும்.

தலைவர் பதவியால் மன நிம்மதி போய்விட்டது; ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அன்புமணி!

0

பாமகவில் அண்மைக்காலமாகவே ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகின்றது. அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில் பாமக தலைவர் பதவி ஏற்றத்தில் இருந்து மன நிம்மதி போய்விட்டதாக தெரிவித்தார். தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில் அதனை பாமக நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் நடந்த சில சம்பவங்களை அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.

இருவரும் ஒருவர் மேல் ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதனால் பாமக நிர்வாகியால் மிகவும் குழப்பத்தில் இருக்கின்றனர் இந்நிலையில் அன்புமணி  மனநிம்மதி போய்விட்டதாக கூறியது மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் பாமக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி பல்வேறு கருத்துகளை முன் வைத்தார். மேலும் தமிழ்நாட்டிற்கு ஒரு விடிவு கொண்டு வர வேண்டும் அதற்காக தான் ஜூலை 25ஆம் தேதி ராமதாஸ் பிறந்தநாள் அன்று நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நடக்கும் கொடுங்கோள் ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்றி தமிழகத்திற்கு நல்லாட்சியை நாம் அமைக்க வேண்டும். மக்களே ஒன்று கூடுங்கள் என்ற நோக்கத்தில் தான் நடைபயணம் செல்வதாகவும் தெரிவித்தார்.

100 நாள் நடைபயணம் மேற்கொண்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பாமக தலைவர் பதவியில் இருக்கும் அன்புமணியை நீக்கி தானே தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால் தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது என அன்புமணி கூறினார் தானே கட்சித் தலைமை பதவியில் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

இருவரும் இதுபோல எதிரும் புதிருமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அன்புமணி பேசியிருந்தார்.

தந்தையிடம் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை என்று கூறியிருந்தார் அதே சமயத்தில் ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முருகன் எங்களுக்கு டார்கெட் இல்ல; முருகனை வைத்து அரசியல் பண்ணறவங்க தான் எதிரி..நடிகர் அமீர் பேட்டி!

0

மதுரையில் வரும் 21ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பாக பாஜக சங்க பரிவார் அமைப்புகள் இணைந்து முருக பக்தர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மனித சங்கலை பேரணி நடைபெற்றது.

அதில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையின் மதநல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த மனித சங்கலி போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். இந்த மனித சங்கிலியின் நோக்கம் முருகன் எங்களுக்கு எதிரானவர் அல்ல முருகன் பெயரை வைத்து அரசியல் செய்பவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என்பதுதான்.

நீதிமன்றம் தான் வழிகாட்டுதல் கொடுத்தாலும் அப்புறம் எதற்கு நீங்கள் இந்த மனித சங்கலியை நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பலாம் நீதிமன்றம் எத்தனை முறை வழிகாட்டுதல் அளித்தாலும் அந்த அமைப்புகளின் மாநாட்டின் உண்மையான நோக்கம் மக்களுக்கு புரிய வைப்பதற்காக இந்த மனித சங்கிலி போராட்டத்தை நாங்கள் நடத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.

முருகன் பெயரை வைத்து கலவரம் செய்ய துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். திருமாவளவன் பேசுகையில் இந்த மனித சங்கிலி போராட்டம் முருக பக்தர்களுக்கு எதிரானது கிடையாது. முருக பக்தர்கள் சனாதனத்திற்கும் சதி அரசியலுக்கு வழி விடக்கூடாது என்று சுட்டிக் காட்டுவதற்காக இங்கு குவிந்திருப்பதாக தெரிவித்தார்.

மதுரை மண்ணில் மத நல்லிணக்கம் உள்ள நிலையில் திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் சகோதரத்துவத்தோடு ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் யாரும் இஸ்லாமியர்களை பகைத்துக் கொள்ளவில்லை.

இஸ்லாமியர்கள் இந்துக்களை பகையாக கருதவில்லை அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் திருப்பரங்குன்றத்திலேயே பகைமை இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். அதனை வைத்து அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர் என பேசினார்

ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்; பயணிகளே இத உடனே பண்ணுங்க!

0

ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் தற்போது ரயில் பயணத்தையே அதிக அளவு விரும்புகின்றனர். ரயில் பயணத்தின் பொழுது டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொண்டு பயணித்தால் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கலாம்.

ஆனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நொடியிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்வதால் கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்புவர்கள் தட்கல் டிக்கெட்டை நாடி செல்கின்றனர். இதன் மூலம் விண்ணப்பித்து தங்களது பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் ரயில்வேயின் தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய விதிகளை ஐ ஆர் சி டி சி அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஐ ஆர் சி டி சி வலைதளம் அல்லது செயலி மூலம் தக்கல் டிக்கெடுகளை முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது ஓடிபி அடிபடையிலான சரிபார்ப்பு அவசியமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஐஆர்சிடிசி கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டு, கேஒய்சி சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தட்கல் டிக்கெட் புக்கிங்கில் ஏற்படும் மோசடிகளை தடுக்கவே இந்த நடைமுறைகள் அமல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஐ ஆர் சி டி சி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் உள் நுழைந்து சுயவிவர பகுதிக்கு சென்று சரிபார்ப்பை முடிக்கவும், தட்கல் முன் பதிவின்போது ஓடிபி எளிதாக பெற காலதாமதம் ஆகலாம்..

ஐ ஆர் சி டி சி வலைதளம் அல்லது மொபைல் செயலியை பார்வையிட்டு தங்களுடைய கணக்கில் உள்நுழைய வேண்டும். அதன் பிறகு my account பகுதிக்குச் சென்று authenticate user என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும் அதன் பிறகு ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடியை உள்ளீடு செய்ய வேண்டும். verify details என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி வந்தடையும் பெறப்பட்ட ஒடிபியை உள்ளிட்டு ஒப்புதல் பெட்டியை கிளிக் செய்து சமிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு தங்களது ஐ ஆர் சி டி சி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படும்.

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; அரசு வழங்கும் 100 சதவீதம் பெறலாம்..உடனே விண்ணபியுங்கள்!

0

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வருகின்றது. அதில் இலவசமாக மாடு வழங்குதல், ஆடு வழங்குதல், நாட்டுக்கோழி போன்ற திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பதற்காக சிறிய அளவிலான பண்ணைகளையும் அமைத்து தருகிறது.

மேலும் அதற்கு மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கோழி கொட்டகை மானியத்துடன் அமைத்து தரப்படுகின்றது. அரசு கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனை செய்து வருகின்றனர்.

விவசாயம் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கோழி கொட்டகை அமைத்து கொடுக்கப்படும், இந்த திட்டம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

இந்த கோழிப்பண்ணை அமைப்பதற்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரையும் மானியம் வழங்கப்படும். இதில் 50 சதவீதம் மானியம் பண்ணை அமைப்பதற்கும், 50% மானியம் கட்டிடம் கட்டுவதற்கும் வழங்கப்படுகின்றது.

மேலும் தங்களுடைய கிராமத்துக்கு அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்குச் சென்று கோழிக்கோட்டையை இலவசமாக பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் டிஆர்டிஓ டிபார்ட்மெண்டுக்கு நேரில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

50 கோழிகள் இருப்பது அவசியம். கோழி கொட்டகை அமைக்க விண்ணப்பிக்க ஆறு மாதத்தில் இருந்து 50 கோழிகளை தொடர்ந்து வளர்த்திருக்க வேண்டும். கோழி கொட்டகை அமைக்க தங்களிடம் சொந்த இடம் இருப்பது அவசியம். தாங்கள் விண்ணப்பிக்கக்கூடிய கிராமத்திலேயே தொடர்ந்து வசிபவராக இருக்க வேண்டும்.. கோழி கொட்டகை விண்ணப்பிக்க ஆதார் அட்டை நகல், பண்ணை அமைக்க இருக்கும் இடத்தின் சிட்டா அடங்கல் நகல், பேங்க் பாஸ்புக் போன்ற ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.