Home Blog Page 38

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்.. ஒரு பயனுமில்லை!! நயினார் சொன்ன பதில்!!

0

TVK BJP: சமீப காலமாகவே தமிழக அரசியலில் அதிகம் பேசப்படும் பெயர் தவெகவும், விஜய்யும் தான். அரசியலில் நுழைந்து சுமார் ஒன்றரை வருடங்கள் கூட பூர்த்தி ஆகாத நிலையில், அதற்கான வரவேற்பு யாரும் எதிர் பார்த்திராத அளவு அதிகரித்துள்ளது. இதனை கண்டு திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தன. ஆனால் தவெக தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கபட்டதால், முன்னணி கட்சிகள் பின் வாங்கின.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய அதிமுகவின் முக்கிய முகமான செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் களமே உற்று நோக்கி கொண்டிருந்த சமயத்தில், நேற்று புதிய கட்சியான தவெகவில் தன்னை இணைத்து கொண்டார்.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்தை கூறி வந்தனர். இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினாரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, செங்கோட்டையன் அனுபவம் மிக்க அரசியல்வாதி, இதனால் அவரது முடிவில் நான் கருத்து கூற எதுவும் இல்லை. மேலும், செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றது அதிமுக-பாஜகவிற்கு பின்னடைவா என்ற கேள்விக்கு, இந்த இணைவு எங்களுடைய கூட்டணிக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாதது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

இரண்டும் ஒன்று தான்.. செங்கோட்டையன் கருத்தால் கொந்தளிக்கும் திராவிட கட்சிகள்!!

0

ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக செயல்படத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் களம் இப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், மற்றும் மிக முக்கியமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை.

இவையனைத்தும் முக்கிய இடம் பெரும் நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்தே அவருக்கான ஆதரவு அதிகளவில் உள்ளது. இதனால் அதிமுகவிலிருந்து வெளியேற்ற பட்ட செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்து கொண்டார். 50 ஆண்டு காலம் அதிமுகவில் பணியாற்றிய செங்கோட்டையன், புதிய கட்சியில் சேர்ந்தது பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்தது. தவெகவில் இணைந்த கையுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன் 2026 யில் விஜய் தலைமையில் ஆட்சி அமையும்.

மக்கள் புதிய மாற்றத்தை எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக, திமுக இரண்டும் ஒன்று தான் என்று கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அப்படி இருக்க 50 ஆண்டு காலம் அதிமுகவில் இருந்து விட்டு, வேறு கட்சியில் சேர்ந்த உடன் இரண்டு கட்சியும் ஒன்று தான் என கூறுவது அவர் அதிமுகவிற்கு செய்யும் துரோகம் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனை அதிமுக மட்டுமல்லாது, திமுகவை சேர்ந்தவர்களும் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இபிஎஸ் செங்கோட்டையனை விமர்சிக்கததற்கு காரணம் இது தானா.. பயத்தில் அதிமுக!!

0

ADMK TVK: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து இன்னும் 2 வருடங்கள் கூட பூர்த்தி அடையவில்லை. அதற்குள் இந்த கட்சிக்கு திராவிட கட்சிகளுக்கு இணையாக அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்று விஜய் கூறியதால் தவெகவுக்கான வரவேற்பு திமுகவை மிகவும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அது அதிமுகவிற்கு யூடர்ன் அடித்து விட்டது. மூத்த தலைவர்களின் இறப்பிற்கு பிறகு அதிமுக பலமிழந்து காணப்படுகிறது. இதற்கு காரணமாக பலரும் பல்வேறு விசியத்தை கூறுகின்றனர். அதிமுகவின் நிலை மிகவும் மோசமாக இருக்கும் சமயத்தில் இதனை மேலும் பலவீனப்படுத்தும் விதமாக சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

இபிஎஸ்க்கு எதிராக நால்வர் அணி உருவானது, பிறகு நால்வர் அணியிலிருந்து பிரிந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது போன்றவை அதற்கு உதாரணங்களாக பார்க்கப்படுகிறது. அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வில்லை என்றாலும், அதன் எதிர் கட்சி அந்தஸ்த்தை தக்க வைக்க அதற்கு பலமான கூட்டணி தேவை. இதன் காரணமாக தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி அமைத்தது. ஆனால் பாஜகவும் கூட்டணிக்குள் இருந்தே தனது சித்து வேளையே காட்டி வருவதால் பாஜகவை நம்ப முடியாது என்பதை உணர்ந்த இபிஎஸ் தவெக உடன் கூட்டணி அமைக்க முயன்றார். இதுவும் நிறைவேறாமல் போனது. இதனால் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்யை நேரடியாகவே விமர்சித்து வந்தனர். ஆனால் இபிஎஸ் எந்த ஒரு இடத்திலும் விஜய் மற்றும் அவரது கட்சியை விமர்சித்தது இல்லை.

அப்படி விஜய்யை விமர்சித்தால் அதிமுக மீது விஜய்க்கு கோபம் அதிகமாகி விடுமோ என்ற பயத்தினால் தான் என்ற கருத்தும் வலுப்பெற்றது. இந்நிலையில் செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதிலிருந்தே, அவரை கடுமையாக விமர்சித்து வந்த இபிஎஸ், அவர் தவெகவில் இணைந்தது குறித்து கேட்ட போது, செங்கோட்டையன் அதிமுக கட்சியே இல்லை. கட்சியில் இல்லாதவர்களை பற்றி ஏன் கேட்கிறீர்கள் என்று பதிலளித்தார். இவரின் இந்த பதில், செங்கோட்டையன் விஜய்யுடன் இருக்கும் நிலையில் அவரை விமர்ச்சித்தால் அது தவெக அதிமுக கூட்டணிக்கு வரவிடாமல் அவர் தடுத்து விடுவாரோ என்ற பயத்தினால் தான் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

திராவிட கட்சி பிளவுற காரணம் தேசிய கட்சியா.. வெளியான திடுக்கிடும் தகவல்!!

0

ADMK BJP: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக தேர்தல் களம்  அடியெடுத்து வைத்துள்ளது. மக்களை சந்திக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும் வெற்றி பெற்று விட வேண்டுமென முயற்சித்து வரும் நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவும் அதற்கு இணையாக போட்டி போட்டு வருகிறது. அதிமுகவின் இத்தனை தோல்விகளுக்கு முக்கிய காரணம் இபிஎஸ்யின் தலைமையும், கட்சி பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருப்பதும் என அதிமுகவை சேர்ந்தவர்களே கூறியுள்ளனர்.

அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்ததற்கு காரணம், அதன் கூட்டணி கட்சியான பாஜக தான் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது. ஏனென்றால், பாஜக தற்சமயம் தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில் உள்ளது. பாஜகவிற்கு தமிழகத்தில் நுழைவதை விட திமுகவின் எதிர்ப்பாளர் பாஜக என்ற பட்டம் தான் வேண்டும். இப்போது திமுகவுக்கு எதிரியாக அதிமுக இருப்பதால் அந்த நிலையை பாஜக மாற்ற நினைக்கிறது.

மேலும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாஜக உடன் கூட்டணி அமைத்ததும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் செங்கோட்டையன் மூன்று முறை டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியதும் அதிமுக பிரிவினையில் பாஜகவிற்கு தொடர்பு உண்டு என்பதை நிரூபிக்கிறது. தற்சமயம் அதிமுக பலவீனமடைந்து உள்ளதால், திமுக மட்டுமே தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. இதனால் அதிமுகவை கூட்டணியிலிருந்தே மேலும் பலவீனப்படுத்தி, தமிழகத்தில் திமுகவிற்கு அடுத்த படியான இரண்டாவது கட்சியாக உருவெடுக்க பாஜக முயற்சிக்கிறது. இந்த கருத்தை மதிமுகவை சேர்ந்த துரை வைகோ எம்.பியும் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இவங்க சொல்லி தான் செங்கோட்டையன் தவெகவுக்கு போனாரா.. உண்மையை உடைத்த பிரபலம்!!

0

TVK BJP: சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் நடந்த தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது. அண்டை மாநிலங்களில் பாஜக வலுவாக இருந்தாலும், தமிழகத்தில் அதன் செல்வாக்கு வலுபெறவில்லை. இதற்காக பாஜக பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது. இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் மிக தீவிரமாக உள்ளது. இதற்காக அதிமுக சார்பில் பாதியளவு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்றால், அதற்கு அதிமுகவின் கூட்டணி மட்டுமல்லாது, மற்றொரு முக்கிய கட்சியின் கூட்டணியும் தேவை. அதற்காக விஜய் தலைமையிலான தவெகவை சேர்க்க நினைத்தது. ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருந்தார். மேலும் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து இருந்ததை ஒன்றிணைக்க நினைத்த பாஜகவிற்கு அது தோல்வியிலேயே முடிந்தது. இதுவும் பாஜக தமிழகத்தில் நுழைய முடியாததற்கு தடையாக இருந்தது. இவை இரண்டும் பாஜகவிற்கு  பாதகமாக அமைந்த நிலையில், இதனை சாதகமாக மாற்ற பாஜக முயற்சித்தது. அதன் ஒரு பகுதி தான் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது.

இவர் தவெக இணைந்த பின்னர் தவெகவையும் மெல்ல மெல்ல பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது. அதனால் இது முழுக்க முழுக்க பாஜகவின் சதி திட்டம் என்றே பார்க்கப்பட்டது. இந்நிலையில் இதனை உறுதிபடுத்தும் விதமாக, நடிகர் எஸ்.வி சேகர் ஒரு கருத்தை கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து ஒரு வீடியோ வெளியிட்ட அவர், செங்கோட்டையன் இந்த தவறை செய்ததிற்கு பாஜகவின் அழுத்தமே காரணம் என்று பாஜகவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். இவ்வாறு இது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இவரின் இந்த கூற்று செங்கோட்டையன் பாஜக, சொல்லி தான் தவெகவில் சேர்ந்தார் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இபிஎஸ்யால் நீக்கப்பட்ட அதிமுகவின் முக்கிய முகம்.. காரணம் இது தானா!!

0

ADMK: தமிழக அரசியல் அரங்கு 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திராவிட கட்சிகள் அதனை சிறப்பாக செய்து வரும் வேளையில், அந்த பணி பாதியளவு முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த முறையாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென அதிமுக போராடி வருகிறது. இபிஎஸ் அதிமுக தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், இதனை மிகவும் கவனமாக ஆராய்ந்து வருகிறது.

ஆனால் அதிமுகவை சேர்ந்தவர்களின் செயல் அதிமுகவை மீண்டும் தோல்வியை நோக்கி கொண்டு செல்கிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலருக்கு பிடிக்க வில்லை. மேலும், அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து இருப்பதால் அதன் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இதனை சரி செய்ய வேண்டுமென நினைத்து, இபிஎஸ்க்கு எதிராக போர் கொடி தூக்கிய செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் தவெகவில் இணைந்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது புதிதாக ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆத்தூர் அருகே ஜெயலலிதா பேரவை மன்ற இணைச்செயலாளராக பணியாற்றிய சங்கர் என்பவர், தூய்மை பணியாளிரிடன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கட்சியின் கொள்கைக்கும், ஒழுக்கத்திற்கும் எதிராக செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்து அவர் நீக்கபட்டுள்ளார். ஏற்கனவே கோவையில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இது குறித்து அதிமுக, திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது. ஆனால் தற்போது அதிமுக கட்சியிலேயே இது நடந்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் ஒரு முறை அதிமுகவின் முக்கிய அமைச்சரான சிவி சண்முகம் இலவச பொருட்களுடன் பெண்களை ஒப்பிட்டு பேசியதும் குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளும் விஜய்யின் ஆதரவாளர்கள் தான்.. விஜய்யை கிண்டலடித்த செங்கோட்டையன்!!

0

TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும், தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் வெவ்வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.

இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜய்யை தொடர்ந்து, செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2026 தேர்தலில் விஜய் ஆட்சியமைப்பார் என்று உறுதி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மூத்த தலைவரான எம்ஜிஆர் என்னை பல முறை அழைத்து பாராட்டி இருக்கிறார். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா உடன் இணைந்து பணியாற்றினேன். அதன் பிறகு, அதிமுக சிதறுண்டது. அதனை சரி செய்ய வேண்டுமேன நினைத்தேன்.

ஆனால் இது நிராகரிக்கப்பட்டது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், விஜய் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் வேண்டும், தூய்மையான ஆட்சியை மக்கள் எதிர் பார்க்கிறார்கள் என்றும் கூறினார். திமுக, அதிமுகவிற்கு மாறாக இன்னொரு ஆட்சி மலர வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். குழந்தைகளும் விஜய்யின் ஆதரவாளர்கள் தான் என்று கூறினார். இவரின் இந்த கருத்து அங்கு இருந்தவர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது.

தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் அடுத்த பிளான்.. இபிஎஸ்யின் கதை குளோஸ்!!

0

TVK ADMK: இபிஎஸ் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது மட்டுமல்லாமல், மக்களின் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி இருக்கும் சமயத்தில் உட்கட்சி விவகாரமாவது சரியாக இருக்கும் என்று பார்த்தால், அதிலும் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தன. இதற்கு முக்கிய காரணம் இபிஎஸ் மூத்த அமைச்சர்களின் கருத்தை கேட்காமலும், அவர்களை மதிக்காமலும் இருந்தது தான் என அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர். தற்போது அந்த நிகழ்வு வெளிச்சம் போட்டு கட்டப்பட்டுள்ளது.

தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அது யாரென்று கூட பாராமல் கட்சியை விட்டு நீக்குவது இபிஎஸ்யின் பழக்கமாக மாறி விட்டது. அப்படி தான் செங்கோட்டையனின் நீக்கம் நிகழ்ந்தது. கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவுடன், இன்று தவெகவில் இணைந்துள்ளார். இபிஎஸ் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டுமென எவ்வளவு முயற்சித்தும் அது நடக்கவில்லை. இதனால் முதலில் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை இணைத்து விட்டு பிறகு விஜய்யை பார்த்து கொள்ளலாம் என்று நினைத்த, இபிஎஸ்க்கு செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது ஆட்டத்தையே மாற்றி விட்டது.

தவெகவில் சேர்ந்த இவரின் குறிக்கோள் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பது அல்ல. எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற கூடாது என்பது தான். இதனால் விஜய் அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டால், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிடும். இதன் காரணமாக எந்த காரணத்திற்காகவும், விஜய் அதிமுக பக்கம் சென்று விட கூடாது என்பதில் செங்கோட்டையன் தெளிவாக இருந்தார். தற்போது தவெகவில் இணைந்த கையுடன் அவர் தனது முதல் வேளையாக இதனை தான் செய்வார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

செங்கோட்டையன் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ.. செம்ம வைரல்!!

0

TVK: அதிமுக துவங்கப்படத்திலிருந்தே அதில் முக்கிய முகமாகவும், தலைவர்களுக்கு மிக நெருங்கியவருமாக இருந்த செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கட்சியில் இருப்பதே தெரியாமல் போய் விட்டது. மேலும் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதற்கு காரணம் ஒருங்கிணைப்பு இல்லாதது என அவர் நினைத்தார். அது மட்டுமல்லாமல் இபிஎஸ் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்தே செங்கோட்டையனுக்கு கட்சியில் மதிப்பு குறைந்து விட்டது. இதனை சரி செய்ய வேண்டுமானால் பிரிந்த தலைவர்களை அதிமுகவில் ஒருங்கிணைத்து அவர்களை இபிஎஸ்க்கு எதிராக திருப்ப வேண்டுமென அவர் திட்டம் தீட்டினார்.

இதனை அறிந்த இபிஎஸ் அவரை கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு நால்வர் அணியாக இவர் செயல்படுவார் என்று நினைத்த சமயத்தில், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இன்று, விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார். இவர் அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்டது கட்சிக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமோ, அதே போல் தவெகவில் இணைந்தது அவர்களுக்கு லாபமாக அமைந்துள்ளது. இந்நிலையில் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கு மிகவும் மகிழ்ச்சியளித்த நிலையில், இது குறித்து விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசிய தவெக தலைவர் விஜய், 20 வயதிலேயே எம்எல்ஏ என்ற பெரிய பதவியை வகித்தவர் செங்கோட்டையன். 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனின் அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருடன் இணைந்து நம்புடன் பணியாற்ற கை கோர்த்த அனைவரையும் மக்களும் பணியாற்ற வரவேற்கிறேன் என்று பேசியுள்ளார். இவரின் இந்த வீடியோ தற்போது, பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும், கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் அரசியல் ரீதியாக விஜய் வெளியிட்ட முதல் வீடியோ இதுவே ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தவெகவால் இமேஜை கெடுத்து கொண்ட செங்கோட்டையன்.. விஜய்யால் சரியும் KAS கோட்டை!!

0

ADMK TVK: 2026 யில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் மெருகேற்றும் வகையில், பல்வேறு புதிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று தான் விஜய்யின் அரசியல் வருகை. கட்சி துவங்கிய ஒன்றரை வருடங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தவெக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. ஆனால் விஜய்க்கு அரசியல் அனுபவம் தேவை, முதல் தேர்தலிலேயே வெல்ல முடியாது, முதல்வர் வேட்பாளர் பதவிக்கு ஆசைப்படுவது பேராசை என பலரும் கூறி வந்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு காரணம், தவெகவில் அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் யாரும் இல்லையென்பது தான். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுகவில் 50ம் ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர் மட்டுமல்லாமல், அரசியல் களத்தில் தொடர் வெற்றிகளை பதவி செய்து வந்தவர் என்ற பெருமைக்கும் உரியவர். ஆனால் இவர் புதிய கட்சியான தவெகவில் சேர்ந்தது அவர் அரசியல் வாழ்க்கையை முடக்கும் வகையில் அமைந்துள்ளதாக, விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

ஏனென்றால் அதிமுக ஒருங்கிணைய வேண்டும், அப்போது தான் தேர்தலில் வெற்றி பெற முடியுமென கூறிய செங்கோட்டையன் அந்த பணியை விட்டு விட்டு தவெகவில் இணைந்தது அவரது சுயநலதிற்க்காகவே என்ற கருத்து வலுப்பெறுகிறது. அது மட்டுமல்லாமல், அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்டு அவரது கட்சியில் இணைந்ததால் செங்கோட்டையனின் மதிப்பு குறைந்து விடும் என்று மதிப்பிடப்படுகிறது.