Home Blog Page 37

தவெகவில் செங்கோட்டையனால் வெடிக்க போகும் பூகம்பம்.. திக்குமுக்காடும் விஜய்!!

0

TVK: திராவிட கட்சிகளுக்கு இணையாக தமிழகத்தில் ஒரு கட்சி பேசப்படுகிறது என்றால் அது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான். பெருமளவில் ஆதரவை பெற்ற இந்த கட்சி கரூர் சம்பவத்திற்கு பின் சற்று தொய்வடைந்தது. இதனையடுத்து 1 மாதத்திற்கு பிறகு தவெக சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. மேலும் SIR க்கு எதிரான போராட்டங்கள், உள்ளரங்கு மக்கள் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கரூர் சம்பவத்திற்கு 1 மாதத்திற்கு பின் பழைய நிலைக்கு திரும்பிய தவெகவுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அது தான் மூத்த தலைவர் செங்கோட்டையனின் இணைவு.

இவர் சுமார் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்தவர் மட்டுமல்லாது 8 முறை எம்.எல்.ஏ பதவியையும் வகித்திருக்கிறார். இப்படி இருக்க இவர் புதிய கட்சியான தவெகவில் இணைந்தது தவெகவுக்கு நல் வாய்ப்பாக அமைந்தது. ஏனென்றால் தவெகவுக்கு அரசியல் அனுபவம் இல்லை என பலரும் விமர்சித்து வந்தனர். இதனால் இவரின் வருகை அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது. தவெகவில் அவருக்கு உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இவர் மிகவும் மூத்த அரசியல் வாதியாக இருப்பதால், இவரின் ஆலோசனைக்கு விஜய் மற்றும் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உடன்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்மாறாக சில செயல்கள் நடந்து வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இவர் விஜய் கட்சியில் சேர்ந்து முழுமையாக 1 வாரம் கூட நிறைவு பெறாத நிலையில் இவரின் கருத்துக்கு எதிராக சில குரல்கள் எழுந்து வருவது தவெக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என பலரும் கூறுகின்றனர். 

அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாது.. திமுக கூட்டணி கட்சி தலைவர் உறுதி!!

0

ADMK DMK CONGRESS: 2026 யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் புதிய புதிய திருப்பங்களால், நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது. இந்த பரபரப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அதிமுகவில் பல அணிகள் உருவாகி உள்ளன. இந்நிலையில் அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றபட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், மற்றும் அண்மையில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் போன்றோர் ஒன்றிணைந்து நால்வர் அணியாக உருவெடுத்தனர்.

இவர்கள் நால்வரும் அதிமுகவின் முக்கிய முகம் மட்டுமல்லாது, இவர்களின் ஆதரவாளர்கள் அதிமுகவில் நிறைய பேர் உள்ளனர். இப்படி இருக்கும் பட்சத்தில், இவர்கள் ஒரு அணியாக உருவெடுத்தது, அதிமுகவிற்கு தேர்தல் முடிவில் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டது. இதன் காரணமாக விஜய் உடன் கூட்டணி அமைக்க இபிஎஸ் முயன்றார். ஆனால் இது தோல்வியிலேயே முடிந்தது. இதனை தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இபிஎஸ்யை பழிவாங்க வேண்டுமென்ற நோக்கில் யாரும் எதிர் பாராத சமயத்தில் தவெகவில் இணைந்தார்.

50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன், மிகப்பெரிய திராவிட கட்சியிலிருந்து விலகி, புதிய கட்சியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கார்த்தி சிதம்பரம் ஒரு கருத்தை கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றது எந்த வித மறுபாட்டையும் ஏற்படுத்தாது.

அதிமுகவிற்கு வாடிக்கையாக வரும் வாக்குகள் அவர்களுக்கு வந்து விடும். என்று கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில காலமாகவே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர், அதிமுகவின் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் ஏற்படாது. அவர்களின் வாக்கு சிதறாது என்பது போன்ற கருத்தை கூறியிருப்பது அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமல்லாமல், அதிமுக முதன்மை கட்சி என்பதையும் உணர்த்தியுள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தவெகவிற்கு ஷிஃப்ட் ஆன அதிமுகவின் டாப் தலை.. ஆட்டத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்!!

0

ADMK TVK: இன்னும் 5, 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் தீவிரமாக உள்ளது என்றே கூறலாம். இதற்கான முக்கிய காரணம் விஜய்யின் வருகை என்றே பார்க்கப்படுகிறது. கட்சி ஆரம்பித்து இன்னும் 2 வருடங்கள் கூட முழுமை பெறாத நிலையில், தவெகவுக்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு அதிகரித்து உள்ளது. புதிய கட்சிக்கு இவ்வளவு ஆதரவு பெருகியுள்ளதை பலரும் விமர்ச்சித்தனர்.

அதோடு தவெகவின் தலைவருக்கு அரசியல் அனுபவம் இல்லை, தொண்டர்கள் அரசியலை பற்றி அறியாதவர்கள், தற்குறிகள் என பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார்கள். மேலும் கரூரில் நடைபெற்ற நிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், தவெகவுக்கு அரசியல் அனுபவம் வாய்ந்த நபர் தேவை என விஜய் உணர்ந்தார். இந்நிலையில் தான் அதிமுகவிலிருந்து, செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் அடுத்து என்ன செய்ய போகிறார் என அரசியல் களமே உற்று நோக்கி கொண்டிருந்தது.

இதன் பின்னர் நால்வர் அணியில் இணைந்த இவர், திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில், விஜய் தலைமையில் தவெகவில் இணைந்தார். தவெகவில் சேர்ந்த கையுடன் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து இன்னும் பலர் தவெகவில் இணைய போகிறார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுகவின் கடலூர் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர், S.அபித் பத்மாவதி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். செங்கோட்டையனை தொடர்ந்து இவர் தவெகவில் இணைந்துள்ளது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஸ்டாலினுக்கு அடித்த ஜாக்பாட்.. திமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி!!

0

DMK PDK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில், அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் பேசப்பட்டு வரும் தருவாயில், பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தில் நடைபெறும்  சட்டமன்ற தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். அதனை மிஞ்சும் வகையில் அமைந்தது தான் விஜய்யின் வருகை. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் திராவிட கட்சிகள் தங்களது கூட்டணி கணக்குகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

அதிமுக, தேசிய கட்சியான பாஜக உடனும், தமாக உடன் மட்டுமே கூட்டணியில் உள்ள நிலையில், திமுக உடன், விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் நீண்ட காலமாக கூட்டணியில் உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் வெளி வராதா சில சச்சரவுகள் இருந்தாலும், திமுக கூட்டணியில் அது வெளி படையாகவே தெரிகிறது. காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் கேட்டு வலியுறுத்தி வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது.

அது மட்டுமல்லாது, மதிமுக கட்சி இந்த தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என வலியுறுத்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் புதிய திராவிட கழகம் என்னும் கட்சி சேர்ந்திருப்பது திமுக தலைமைக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீக்ரெட் டீலிங்.. OK சொல்லும் பிரேமலதா.. எடப்பாடிக்கு கட்டம் கட்டும்  செங்கோட்டையன்!! குஷியில் தவெக!!

0

TVK: அதிமுகவிலிருந்து முக்கிய மற்றும் மூத்த தலைவரான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது ரீதியாக தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். அதிமுகவில் அவருக்கான முக்கிய இடம் ஒதுக்காதது தான் இதற்கு காரணம். மேலும்  எடப்பாடி செங்கோட்டையனிடம் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டிருந்தார். தற்சமயம் உன்னை நான் எதிர்த்து வெற்றியடைந்து காட்டுகிறேன் என சபதம் போட்டு செங்கோட்டையன் கட்சி மாறியுள்ளார்.

இந்த சமயத்தில் எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்தும் அனைவரையும் ஒன்று திரட்ட நினைக்கிறார். அதிலும் அதிமுகவிற்கு கூட்டணி என்று யாரும் இருக்கக் கூடாது அவர்கள் அனைவரும் தங்கள் பக்கம் வரவேண்டும் என எண்ணுகிறார். இதனால் பிரேமலதாவை உடனடியாக தொடர்பு கொண்டு தனியாக ஆலோசனை செய்ய அனுமதி கேட்டுள்ளாராம். குறிப்பாக எடப்பாடி கொடுப்பதை விட அதிகப்படியான தொகுதிகளை கொடுப்பதாக பேசப்பட்டு கூட்டணி ஒப்புதல் வழங்கப்படுமாம்.

பாசிச பாஜகவை தவிர வேறு யாரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம். அதற்கான வேலையை அடுத்தடுத்து தீவிரமாக செயல்படுத்துவதாக கூறியுள்ளனர். ஆரம்ப கட்டத்திலிருந்து அதிமுகவில் செங்கோட்டை இருப்பதால் எந்த இடத்தில் அவர்களுக்கு அடி விலும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருப்பார்.

அதனையெல்லாம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாக அமைத்து கொடுப்பதுதான் தனது தலையாய கடமை என கூறுகிறார். பிரேமலதா விடம் டீலிங் பேசி அவர்களையும் தாவெக-வில் இணைக்கும் முயற்சிதான் அடுத்தது என செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய்யுடன் கூட்டணி.. கட்டாயம் இது நடப்பது உறுதி!! அன்புமணி ராமதாஸ் அதிரடி!!

0

PMK: பாமக வின் அன்புமணி ராமதாஸ் கடந்த 25 ஆம் தேதி திருப்பூரில் தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற பயணத்தை ஆரம்பித்து தர்மபுரியில் நிறைவு செய்தார். இந்த மக்கள் உரிமை மீட்பு பயணத்தில் பல தரப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இது ரீதியாக அவர் கூறுகையில், மக்கள் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி முடிவு பெற்று தர வேண்டும். இலையென்றால் போராட்டம் நடக்கும்.

குப்பை எரி உலை திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் இதனால் பல நோய்கள் வர வழி வகுக்கும். நான் தமிழகத்திற்கு வந்திருக்கும் முதலீடுகளைக் குறித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளேன். இது ரீதியாக முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை என்னுடன் நேரடி விவாதம் செய்ய மேடை அமைக்கலாம். மேற்கொண்டு செய்தியாளர்கள் நீங்கள் யாருடன் கூட்டணி வைத்தீர்கள் விஜய்யுடனா என கேள்வி எழுப்பினர்??

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்க்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம். அந்தவகையில் கூட்டணி  மந்திரி சபை அமைமா என்பது ரீதியாக  தற்போது எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்துவிட்டார். அதிமுகவிலிருந்து செங்கோட்டை விஜய்யுடன் இணைந்திருக்கும் பட்சத்தில், அன்புமணி பதிலும் அது சார்ந்து சூசகமாக அமைந்துள்ளது என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். செங்கோட்டையனை போலவே இவரும் வலுவான ஆதரவை தேடி தான் உள்ளாராம். அந்தவகையில் விஜய் போன்று திமுகவை எதிர்க்கும் கட்சியுடன் இணையலாம் என்பதில் உறுதியாக உள்ளாராம்.

தினகரன் சசிகலாவுக்கு முக்கிய பதவி.. கண்டிஷன் போட்ட செங்கோட்டை!! தலையசைத்த விஜய்!!

0

TVK ADMK: விஜய் அரசியலுக்கு இணைந்து கட்சி வேலைகளை ஆரம்பித்தாலும் அவருக்கு சரியான வழிகாட்டுதல் கொடுக்க யாரும் இல்லை. பல ஆண்டுகளாக தமிழகத்தில் வேரூன்றி இருக்கும் கட்சிகள் அனைத்தும் அதன் தலைவர்கள் வழியையே கடைப்பிடித்து வந்தனர். ஆனால் விஜய்க்கு எங்கிருந்து ஆரம்பித்து எப்படி செல்ல வேண்டும் என வழிகாட்டி சொல்ல யாரும் இல்லை.

தக்க சமயத்தில் தான் எடப்பாடி கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை வெளியேற்றினார். பல ஆண்டு இருந்து வரும் திமுக அதிமுகவிற்கு கூட கிடைக்காத வரவேற்பு தற்போது அரசியல் ஆரம்பித்த விஜய்க்கு கிடைத்தது எண்ணி அவர் கட்சியிலேயே இணைந்து விட்டார். இதனால் விஜய்க்கு மிகவும் பக்க பலமாக இருக்கும். எப்படி பிரச்சார மேடை இருக்க வேண்டும் என ஆரம்பித்து, மக்களிடம் நடத்தும் பேச்சு வரை இணை விஜய்யின் வலது கையாக அவர்தான் இருக்கப் போகிறார்.

கட்சியில் இணைவதற்கு முன் அதிமுகவில் இருந்தபோது சசிகலா, தினகரன் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். ஆனால் எடப்பாடி அதற்கு ஒத்துவரவில்லை. தற்போது விஜய் கட்சியில் அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை வைத்துள்ளாராம். இதனை மறுக்க முடியாமல் விஜய்யும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் விஜய்யுடன் தினகரன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இணைவது ரீதியான செய்திகள் வெளியாகும். திமுகவை தாண்டி அதிமுகவிற்கு பெரும் எதிரியாக  தமிழக வெற்றிக்கழகம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

கொங்கு மண்டலத்தில் பெரும் அடி.. மவுசு போன எடப்பாடி!! விஜய்க்கு வந்த புதிய பவர்!!

0

TVK ADMK: தமிழக அரசியல் களத்தில் திருப்பி போடும் அளவிற்கு செங்கோட்டையன் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதிமுகவின் நான்கு முதலமைச்சர்களை பார்த்த செங்கோட்டையனுக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்து வந்தனர். எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் அவரது பெயர் ஏதேனும் ஓரங்களில் இருக்கப்படுவது பெரிதாக பேசப்பட்டது.

இது ரீதியாக எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. அதிலும் கட்சியிலிருந்து நீக்கவர்களை ஒன்றினைத்து கொள்ள வேண்டும் என்று சசிகலா பன்னீர்செல்வத்திற்கு செங்கோட்டையன் கொடி அசைத்ததும், அவரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கி எடப்பாடி உத்தரவிட்டார். இதனிடையே ஆளும் கட்சி மாற்ற கட்சியினர் என பலரும் அவருடன் நெருங்கி தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ந்து தங்களது காட்சிகளில் இணைத்துக்கொள்ளும்படி அழுத்தமும் தந்தனர். ஆனால் பாஜக சுதாரித்துக் கொண்டு, மூத்த நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது தற்போது சரி கிடையாது. மீண்டும் கட்சியில் இணையும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் எடப்பாடி ஒருபோதும் அதற்கு தலை அசைக்கவில்லை. இதனால் ஆட்சியில் பங்கு தரும் விஜய்யுடன் கூட்டு வைத்து திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

எம்ஜிஆர் காலத்திலிருந்தவரை கட்சியை விட்டு நீக்காமல் வைத்திருப்பது ஒரு வித யுக்தி. எடுத்துக்காட்டாக திமுகவின் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் பல சச்சரவுகளில் சிக்கினாலும் கட்சியை விட்டு நீக்காமல் திமுக முட்டுக் கொடுத்து கட்டி காத்து வைத்து வருகின்றனர். அந்த சிந்தனை போக்கு எடப்பாடியிடமில்லை.

இருந்த அனைத்து வாய்ப்புகளையும் தவற விட்டு வருகிறார் என கூறுகின்றனர். இப்போது செங்கோட்டையன் விஜய்யுடன் இணைந்திருப்பது அதிமுகவிற்கு பெரும் அடி. அந்த வகையில் கொங்கு மண்டல வாக்குகள் சிதறுவது உறுதியாகியுள்ளது.

உற்பத்தித் துறையின் வளர்ச்சியால் இந்திய பொருளாதாரம் ஆறு காலாண்டுகளில் மிக உயர்ந்த 8.2% வளர்ச்சி!

0

2025–26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு (Q2 FY26) ஜிடிபி (GDP) விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதில், இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்ப்புகளை மீறி 8.2% வளர்ச்சி கண்டுள்ளது — இது கடந்த ஆறு காலாண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பு

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட அறிக்கையின்படி:

  • உண்மை ஜிடிபி (Real GDP) – 2025–26 நிதியாண்டின் Q2 காலாண்டில் ₹48.63 லட்சம் கோடி.

  • கடந்த ஆண்டு இதே காலாண்டில் (Q2 FY25) இது ₹44.94 லட்சம் கோடி.

  • இதன் அடிப்படையில் வளர்ச்சி வீதம் 8.2% என கணக்கிடப்பட்டுள்ளது.

Nominal GDP (பணவீக்கம் சேர்த்த மதிப்பு) 8.7% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
Real GVA (மொத்த மதிப்பு சேர்க்கை) ₹44.77 லட்சம் கோடியாக உயர்ந்து, 8.1% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

துறைவாரியாக வளர்ச்சி

  • உற்பத்தித் துறை (Manufacturing): 9.1%

  • விவசாயம் மற்றும் இணைந்த துறைகள்: 3.5%

  • வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு: 7.4%

  • நிதி, நிலபரப்பியல் மற்றும் தொழில் சேவைகள்: 10.2%

  • மின்சாரம், எரிவாயு, நீர்வழங்கல்: 4.4%

மொத்தத்தில், இரண்டாம் (Secondary) மற்றும் மூன்றாம் (Tertiary) துறைகளின் வலுவான வளர்ச்சி ஜிடிபி உயர்விற்கு முக்கிய காரணமாக இருந்தது.

செலவினங்கள் மற்றும் முதலீடு

  • அரசு செலவினம் (GFCE): 2.7% குறைந்துள்ளது (முன்னர் 4.3%).

  • தனியார் நுகர்வு செலவினம் (PFCE): 7.9% வளர்ச்சி (முன்னர் 6.4%).

  • நிலையான மூலதன உருவாக்கம் (GFCF): 7.3% உயர்வு (முன்னர் 6.7%).

பிரதமர் நரேந்திர மோடி கருத்து

பிரதமர் நரேந்திர மோடி, இந்த வளர்ச்சியை “மிக ஊக்கமளிக்கும் முன்னேற்றம்” என வரவேற்றார்.

அவர் கூறியதாவது:

“இந்த 8.2% வளர்ச்சி எங்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகளின் விளைவாகும்.இது இந்திய மக்களின் கடின உழைப்பையும் தொழில் மனப்பாங்கையும் வெளிப்படுத்துகிறது.எங்கள் அரசு தொடர்ந்தும் சீர்திருத்தங்களை முன்னெடுத்து, ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கை எளிதாகும் வகையில் செயல்படும்.”

உலகின் அதிவேகமாக வளர்கின்ற பொருளாதாரம்

இந்த வளர்ச்சியுடன், இந்தியா உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்ற தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

2024 செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.6% மட்டுமே இருந்தது.
அதன்பின் Q1 FY26-இல் 7.8% ஆக உயர்ந்தது, இப்போது 8.2% என்ற உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டுகளின் வளர்ச்சி

நிதியாண்டு உண்மையான வளர்ச்சி வீதம்
2021–22 8.7%
2022–23 7.2%
2023–24 9.2%
2024–25 6.5%
2025–26 (Q2) 8.2%

“விக்சித் பாரத் 2047” நோக்கில்

உலக வங்கியின் மதிப்பீட்டுப்படி, இந்தியா 2047க்குள் “விக்சித் பாரத்” (முன்னேற்ற நாடு) இலக்கை அடைய,
அடுத்த 20 ஆண்டுகள் சராசரியாக 7.8–8% வளர்ச்சி வீதத்தில் நீடிக்க வேண்டும்.

அதை அடைய, சீர்திருத்தங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிக்கை கூறுகிறது.

இந்திய பொருளாதாரம் தற்போது வலுவான அடித்தளத்தில் உள்ளது.
உற்பத்தி, சேவை, தொழில்நுட்ப துறைகளின் வளர்ச்சி தொடர்ந்தால்,
இந்தியாவின் ஜிடிபி 8% மேல் நீடித்திருக்கும் என்ற நம்பிக்கை வல்லுநர்களிடையே நிலவுகிறது.

இந்திய பொருளாதாரம் மீண்டும் ஒரு வளர்ச்சி வேகத்தை எட்டியுள்ளது —
‘வளர்ச்சி பாதையில் இந்தியா!’

தவெகவில் இணையும் திமுக கூட்டணி கட்சி.. அதிருப்தியில் ஸ்டாலின்!! குஷியில் விஜய்!!

0

DMK TVK VCK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர் பார்த்திராத உச்சத்தை எட்டியுள்ளது. 2 மாபெரும் மாநாடுகளையும், 5 பிரச்சார கூட்டத்தையும் நடத்திய விஜய், 6 வதாக கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தவெகவின் எதிர் காலத்தை அடியோடு சறுக்கும் வகையில் அமைந்திருந்தது.

இதனால் விஜய்க்கான ஆதரவு குறையும் என்று நினைத்த சமயத்தில் தான் இது எதிர் மறையாகவே அமைந்து விட்டது. அப்போதும் கூட விஜய்யை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதிமுக, பாஜக போன்ற பல கட்சிகளும் முயன்று வந்தன. ஆனால் விஜய் அவரது முடிவில் தெளிவாக இருந்தார். இதன் காரணமாக தவெக உடன் எந்த கட்சி இணைய போகிறது என்ற கேள்வி மேலோங்கி இருந்தது. இந்நிலையில் தவெக உடன் இணைய திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆர்வம் காட்டி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து திமுக கூட்டணியில் நீண்ட காலமாக இருந்து வரும், விசிகவின் தலைவர் திருமாவளவனிடம் கேட்ட போது, தவெகவில் ஏற்கனவே சங்கிகள் ஊடுருவி வருவதாக கூறுகின்றனர். இதனால் விஜய் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அக்கறையாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியல் நகர்வுகளில் பாஜகவின் தலையீடு அதிகரித்துள்ளது. தவெக, பாஜக உடன் இணக்கமான தோற்றத்தை உருவாக்கினால் மக்கள் தவெகவை எதிரியாக தான் பார்ப்பார்கள்.

விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறினார். விஜய் திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு முன் திருமாவளவன் ஒரு முறை திமுக கூட்டணியில் தொடர்விர்களா என்ற கேள்விக்கு பார்க்கலாம் என்று பதிலளித்ததும், தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதும்  இவர் திமுகவை விட்டு விலகி தவெகவிற்கு செல்வதற்க்கான சாத்திய கூறுகளாக பார்க்கப்படுகிறது.