வியாழக்கிழமை, ஆகஸ்ட் 28, 2025
Home Blog Page 47

2026 தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி; சூடு பிடிக்கும் அரசியல் களம்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக முன்கூட்டியே தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மாதத்திலேயே அவர் மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த மாதம் விஜயின் பிறந்தநாள் வருவதால் மக்கள் நலத்திட்டங்களையும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி என அண்மையில் தொலைக்காட்சிகளில் செய்தி பரவியது.

அந்த வகையில் எம்ஜிஆரை போல விஜய்யும் மதுரை தொகுதியை குறி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் விஜய் மீனவ மக்கள் அதிகம் இருக்கக்கூடிய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தவெக வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விஜய்க்கு செல்வாக்கு அதிகம் உள்ள நிலையில் நாகையில் விஜய் தனது ரசிகர்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் விஜய் நாகை தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விஜய் அரசியல் களத்தில் தனது கவனத்தை தென்மாவட்ட பக்கம் திருப்பினால் பலன் அதிகரிக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.  

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டணி அமைக்கும் தவெக; ஆட்டம் காணும் திராவிட கட்சிகள்!!

0

நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் நிலையில் தனது குறிக்கோளாக 2026 தேர்தலை நோக்கி தற்போது தனது கட்சியை தயார்படுத்தி வருகின்றார்.

தவெக தலைவர் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே கூறியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவர் சீமானின் பேச்சு விஜயின் வீச்சு ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழகத்தில் இதுவரை யாரும் காணாத அளவில் மூன்றாவது அணியை மக்கள் பார்ப்பார்கள் எனவும் இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியிருக்கின்றார்.

2026 ஆம் தேர்தலுக்கு அதிமுக மற்றும் திமுக கூட்டணி தயாராக உள்ள நிலையில் திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியே போகாது. அதேபோல் வேறு புதிய கட்சி வர வாய்ப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேர வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மூன்றாவதாக விஜயின் நிலைப்பாடு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் அவர் இணைந்தால் அவருக்கான தனித்துவம் போய்விடும். அதனால் அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் விஜய், சரத்குமார் மற்றும் கமலஹாசன் உள்ளிட்டோர் தனித்தன்மையுடன் கட்சியை தொடங்கிய பொழுது திராவிட கட்சிகளுடன் இணைந்து விட்டார்கள்.

ஆனால் அவர்களுடைய கட்சிகள் காணாமல் போனது. அந்த தவறை விஜய் செய்யக்கூடாது என உறுதியாக இருக்கின்றார். விஜய் போலவே சீமானும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ள நிலையில் விஜய் மற்றும் சீமான் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்க வாய்ப்புள்ளது. மேலும் விஜய்க்கு 22 சதவீதம் வாக்குகள் , சீமானிடம் 8 சதவீதம் வாக்குகள் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறப்படும் நிலையில் இவை இரண்டும் சேர்ந்தால் 30 சதவீதத்திற்கும் மேலாக வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது . அதனால் இந்த இரண்டு கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

வாயை விட்டு மாட்டி கொண்ட வேல்முருகன்; இறுதியாக எச்சரித்த தவெக!!

0

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வருகின்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பரிசு வழங்கும் விழா மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதற்கட்டமாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாமல்லபுரத்தில் ஹோட்டல் ஒன்றில் இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வேல்முருகன் பேசியதை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என தமிழக வெற்றிக் கழகத்தின் இணைச் செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டார். தவெக தலைவர் விஜய் மாணவிகளை பரிசு வழங்கும்போது அரவணைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தொடர்பாக சர்ச்சைக்குரிய பேச்சை முன் வைத்துள்ளார்.

இது குறித்து தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வீரமங்கை வேலு நாச்சியாரையும் மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களாக ஏற்று பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் தலைவரைப் பார்த்து அநாகரீக பேச்சை வேல்முருகன் முன் வைத்துள்ளார்.

இந்த பேச்சுக்கு திமுக சார்பாக கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். மேலும் தான் பேசியது தவறு என்பதை உணர்ந்து வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏவுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை என தவெக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மு.க ஸ்டாலின்..முழு விவரம் இங்கே!!

0

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த வாரத்தில் இருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இன்றி ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு போன்ற அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்காக சுமார் 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் ஒன்றாக ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை காலம் முன்பணம் 4000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத்தொகை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசு மாநில சிவில் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகை காலம் முன்பணம் 4000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணி அமைப்பு உள்பட சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அரசால் வழங்கப்படும் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகை முன்பணம் 10 மாதங்களுக்கு சமமான தவணைகளில் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பு; பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

0

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நிலையில் தடுப்பூசி போடப்பட்டு படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பில் ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தனர். அதன் பிறகு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்தியாவில் 3000 மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 215 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் ஜூன் இரண்டாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் பள்ளிகளில் மாஸ்க் அணிய உத்தரவிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகம் காணப்படவில்லை என்றாலும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் மாஸ் கனிந்து வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதினால் தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை வழங்குவதில் திடீர் மாற்றம்; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!!

0

தமிழகத்தில் கடந்த தேர்தலின் பொழுது திமுக மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. திமுக தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.14 கோடி மகளிர்களுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் தகுதி வாய்ந்த ஒரு சில மகளிர் களுக்கு இத்திட்டம் கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார் வந்த நிலையில் புதிய பயனாளிகளை சேர்க்க தமிழகம் முழுவதும் 9000 இடங்களில் சிறப்பு முகங்கள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திலிருந்து சுமார் 15000 பெண்கள் நீக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. இறந்த பயனாளிகள், அரசு வேலைகளில் சேர்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி மற்றும் யூபிஎஸ்சி உள்ளிட்ட அரசுத்துறை தேர்வுகளில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அரசு பணியில் சேர உள்ளனர்.

அதனால் இவர்களின் பெயர்களையும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்திருந்தால் நீக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் அட்டையில் இருக்கும் பெயர்களில் யாராவது ஒருவர் அரசு வேலையில் இருந்தால் அந்த ரேஷன் அட்டையில் இருக்கும் குடும்ப தலைவிக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. அதனால் அவர்களுடைய பெயர் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதனால் தற்போது 15 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட உள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்றீங்களா.. இனி இது கட்டாயம்; ரயில்வே துறை அதிரடி!!

0

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரயில் பயணத்தை அதிகளவு விரும்புகின்றனர்.

மேலும் பண்டிகை காலம், விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படுவதினால் கூட்ட நெரிசல் ஏற்படுகின்றது. அதனால் தட்கல் மூலம் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில் அதில் ஏராளமான முறைகேடு நடப்பதாக ரயில்வே துறைக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.

அதனால் தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலிகணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கி உள்ளது. மேலும் இது குறித்து ரயில்வே துறை தீவிர ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தட்கல் முன்பதிவு தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம். மேலும் இதன் மூலம் உண்மையான பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஆதார் எண் இணைத்து வெரிஃபிகேஷன் எனப்படும் சரிபார்ப்பு நடத்தப்படும். அவர்களுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட் ஆன்லைனில் புக் செய்ய முடியும். ஆதார் மூலம் வரும் ஓடிபி எண்னை பதிவு செய்த பிறகு டிக்கெட் புக் செய்யும் வகையில் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இம்மாதம் இறுதியில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

ராமதாஸ் போட்ட 3 கண்டிஷன்.. முகுந்தனுக்கு பெரிய பதவி!! OK சொன்ன அன்புமணி!!

0

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே கட்சி மோதல் தீவிரமடைந்து காணப்பட்டது. இதனின் அடுத்த கட்டம் கட்சி இரண்டாக பிரிய போவதாக தகவல் வெளியானது. அதிலும் ராமதாஸ் நான் தான் இனி தலைவர் என கூறி ஒரு சில நிர்வாகிகளை நீக்கம் செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, உடனே பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட நான்தான் தலைவர் ராமதாஸ் அவர்கள் நீக்கியது செல்லாது என அறிவித்தார். இப்படியே இருவரும் கட்சிக்குள்ளேயே முரண்பட்டு செயல்படுவது நல்லதல்ல என எண்ணிய நிர்வாகிகள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

அதன் முதல் படியாக இன்று தைலபுர தோட்டத்தில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்த இருவரின் சந்திப்பானது அப்பா மகனின் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முக்கிய மூன்று கட்டுப்பாடுகளை ராமதாஸ் விதித்துள்ளாராம். அதில் முதலாவதாக கட்சித் தலைவராக நான் தான் செயல்படுவேன் எனக் கூறியுள்ளாராம். மேற்கொண்டு கட்சியிலிருந்து தானாக விலகிக் கொண்ட மகள் வழி பேரனான முகுந்தனுக்கு மீண்டும் கட்சிக்குள் முக்கிய பொறுப்பு வழங்கப்படும்.

அதில் ஏதும் அன்புமணி தலையிடக்கூடாது. மேற்கொண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதையும் நான்தான் முடிவு செய்வேன் என கூறியுள்ளாராம். இதில் எதற்கும் அன்புமணி ஒத்து வரவில்லை என்றால் கட்சியிலிருந்து நீக்கம் செய்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அன்புமணி இந்த மூன்று ஒப்பந்தங்களுக்கும் சரி என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு; உடனே விண்ணப்பியங்கள்!!

0

பெண்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பெண்களுக்காக இலவச தையல் இயந்திரம், மானிய கடன் திட்டம், மகளிர் சொந்த தொழில் செய்ய கடனுதவி என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கின்றனர்.

பெரும்பாலும் கைம்பெண்கள், மற்றும் ஆதரவற்ற மகளிர்கள், உதவி இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு தமிழக அரசு திட்டங்கள் அதிகளவு இருக்கின்றது. அந்த திட்டங்களில் பயன்பெற நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வது அவசியம். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எட்டாவது தளத்தில் வரும் 12ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள வரும் பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அலைபேசி ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

அதன் பிறகு உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் உறுப்பினராக பதிவு செய்யும் பெண்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இத்திறன் பயிற்சி மேற்கொள்வதால் சுயதொழில் புரிய மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் செயல்படுத்தப்படும் சுயதொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்படுவாரா..ராமதாஸ் எடுக்க போகும் முடிவு என்ன?

0

பாமக நிறுவனர் ராமதாஸ் பாமகவில் அடுத்தடுத்த நிர்வாகிகளை நீக்கி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அன்புமணி நீக்கம், பாமக பொதுக்குழு தொடர்பாக ராமதாஸ் பதில் கூறுவதாக தெரிவித்த நிலையில் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சியை யார் உரிமை கொண்டாடுவது என பல்வேறு போட்டி நிலவி வருகின்றது. ராமதாஸ் நீக்கம் செய்யும் நிர்வாகிகளை அன்புமணி உடனடியாக நியமனம் செய்து போட்டிக்கு போட்டி அரசியல் செய்து வருகின்றனர் இந்நிலையில் தைலபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை ராமதாஸ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார். மேலும் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, வன்னியர் சங்க மாநில மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் சுஜாதா, வன்னியர் சங்க மாநில மகளிர் அணி செயலாளர் மற்றும் பாமக மாநிலத் துணைத் தலைவர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ராமதாஸை சந்தித்து பேசினார்கள்.

பாமகவில் 27 மாவட்ட செயலாளர், ஆறு மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாமகவில் நிர்வாகிகள் நியமனம் மற்றும் மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா பாமக பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என இன்று பதிலளிப்பதாக ராமதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் மாநிலங்களவை எம்பி சீட்டு அன்புமணிக்கு கிடைக்கவில்லை. தற்போது 2026 ஆம் ஆண்டு வரும் தேர்தலில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.