Home Blog Page 46

சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!

0

சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!

தீராத சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.

உடலில் அதிகப்படியான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதன் காரணமாக தீராத சளி இருமல் ஏற்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி மண்டலங்கள் வலு இழப்பதன் காரணமாகவும் காய்ச்சல், இருமல், சளி இவை ஏற்படும்.

இருமல் வருவதற்கான காரணம் நுரையீரல் பகுதியில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் படிவது மற்றும் தொண்டைகளின் வறட்சி ஆகியவை இருமல் வருவதற்கான காரணமாகும்.

தீராத சளி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்த வெங்காயம்,பூண்டு இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

உடல் பகுதியில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற இவை உதவுகிறது. வெங்காயத்தில் உள்ள சல்பர் அதிக சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாட்டிக்காக செயல்படுகிறது. இவை உடலில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது.

வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள மூலப்பொருட்கள் சளி, இருமலை குணப்படுத்துவதோடு சுவாசம் மண்டலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குணப்படுத்தும். தீராத சளி, இருமல் குணமடைய தேவையான செய்முறைகள்.

இரண்டு வெங்காயம் இரண்டு பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கி ஒரு கப் நீரில் இதனை நன்றாக வேக வைத்து அதன் பிறகு இதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகி வருவதன் காரணமாக நம் நுரையீரல் உள்ள பாக்டீரியாக்களை அளித்து சுவாசப் பாதையில் உள்ள பாக்டீரியாக்களை அளிக்கும்.

நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து சளி இருமல் ஆகியவற்றை முழுமையாக குணப்படுத்த உதவுகிறது.

நரம்பில் உள்ள அடைப்புகளை நீக்கி பலப்படுத்தி நரம்பு பலவீனத்தை போக்கும் அற்புத பானம்! 

0

நரம்பில் உள்ள அடைப்புகளை நீக்கி பலப்படுத்தி நரம்பு பலவீனத்தை போக்கும் அற்புத பானம்!  

நரம்பு மண்டலம் தான் நமது உடலில் இயக்கம், ஐம்புலன்களின் செயல்பாடு இவற்றை கட்டுப்படுத்தக் கூடியது. சில காரணங்களினால் கடுமையான நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இதை கண்டறிந்தால் எளிமையான முறையில் குணமாக்கலாம். நரம்பு மண்டலத்தில் சில பகுதிகளில் நரம்புகள் சரியாக செயல்படாமல் இருக்கும். இதுவே நரம்பு பலவீனமாகும். சிலருக்கு இது தற்காலிகமானதாக இருக்கும். அதுவே சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்கும் எளிய வீட்டு வைத்து முறையை தற்போது பார்ப்போம்.

1. இதற்கு முதலில் இரண்டு கிராம்பை எடுத்துக் கொள்ளவும். இது மன அழுத்தத்தை போக்கக்கூடியது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது. பார்க்கின்சன் எனப்படும் நடுக்குவாதத்தை சரி செய்யக்கூடியது.

2. அடுத்து எடுத்துக் கொள்ளக்கூடிய பொருள் இலவங்கப்பட்டை. பிராணவாயுவை அதிகரிக்கிறது.  மூளையில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்கிறது. நரம்பில் உள்ள திசுக்கள் சேதமாகாமல் இருப்பதற்கும், செயலிழக்காமல் இருப்பதற்கும் உதவுகிறது.

3. அடுத்து எடுக்கப் போகும் பொருள் ஏலக்காய். இதில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ, பி, சி என நிறைய சத்துக்கள் உள்ளன. இது நமது உடலில் உள்ள பித்தத்தை நீக்கி, நரம்பு தளர்ச்சியை போக்கும்.

இடிக்கிற கல்லில் 2 கிராம்பு, ஒரு துண்டு பட்டை,2 ஏலக்காய் ஆகியவற்றை போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும். நன்றாக பவுடர் போல் இடித்ததும் , அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 200ml தண்ணீரை ஊற்றவும். அதில் இடித்த கலவையை போடவும்.

200மிலி தண்ணீர் 150 மிலி யாக மற்றும் வரை கொதிக்க விடவும். தசைப்பிடிப்பு,  தசைகளில் வலி, சோர்வு, சிலருக்கு கூச்ச உணர்வு இருக்கும். சிலருக்கு உணர்வே இருக்காது. தசைகளில் வலு குறைதல் காலின் முன் பகுதியை உயர்த்த முடியாமை, பார்வை குறைபாடு,பொருட்களின் வாசனையை உணர முடியாமை, நடுக்கம், அடிக்கடி தலைவலி ஏற்படுதல், போன்ற காரணங்களினால் நமக்கு நரம்பு பலவீனம் ஏற்பட்டு இருப்பதை உணரலாம்.

தண்ணீர் நன்றாக கொதிந்ததும் அதில் சுவைக்காக ஒரு ஸ்பூன் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னர் ஓரளவு சூடு ஆறியதும் ஒரு டம்ளரில் வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை அருந்தலாம்.

பொதுவாக இந்த பானத்தை இரவு உணவு முடிந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம். ஒரு 15 நாள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வர நரம்புகளில் உள்ள சிறு சிறு பிரச்சனைகள் அடைப்புகள் நீங்கி பலவீனமான நரம்புகள் நன்றாக வலுவாகும்.

 

 

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மஞ்சள் டீ! அவசியம் என்பதற்கான காரணங்கள்! 

0

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மஞ்சள் டீ! அவசியம் என்பதற்கான காரணங்கள்! 

மஞ்சள் மங்களகரமான பொருள் மட்டுமல்ல. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள ஒரு கிருமி நாசினி. உடலில் எங்காவது வீக்கம், காயமோ, இருந்தால் அதை போக்கும்.

இதில் உள்ள குர்க்குுமின் என்ற பொருள் உடலில் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கும். மேலும் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதையும் தடுக்கும்.

இந்த மஞ்சள் டீயை தயாரிக்கும் முறையை பார்ப்போம்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். பிறகு ஒரு சிறிய துண்டு இஞ்சி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக கட் பண்ணி போடவும். இஞ்சியானது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.

அடுத்து இதில் 5 மிளகு சேர்க்கவும். இந்த மிளகானது மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருளை ஈர்க்க செய்கிறது. அடுப்பில் உள்ள தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை நன்றாக கொதிக்க விட்டு வெதுவெதுப்பான சூட்டில் வடிகட்டிக் கொள்ளவும்.  பிறகு இதில் அரை மூடி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும்.

இதில் உள்ள நன்மைகள்;

1. இதை தினமும் குடித்து வர மூட்டு வலி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

2. பித்தப்பையில் பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடிக்கு குடிக்க வேண்டும். பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கும், இந்தப் பித்த நீரானது கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்கும். உடல் எடையையும் குறைக்கும்.

3. புற்றுநோய் வருவதை தவிர்க்கும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது இதயத்தை பாதுகாக்கிறது.

4. ஆஸ்துமா மட்டுமில்லை நுரையீரலில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை இந்த பானம் சரி செய்யும்.

5. வயதான காலத்தில் வரும் அல்சைமர் என்ற வியாதியையும் தவிர்க்கும். கல்லீரல் பாதிப்பை சரி செய்கிறது. கல்லீரலில் வீக்கம் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அதை குணமாக்கி கல்லீரலை பலமாக்க உதவுகிறது.

6. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதில் தேன் கலக்காமல் இந்த பானத்தை அருந்தலாம். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றும்.

7. செரிமான பிரச்சனை உடையவர்களும் சளி இருமல் உடையவர்களும் இந்த டீயை குடிப்பதால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

 

மார்பு சளி மற்றும் இருமல் குணமாக வேண்டுமா? இதோ இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

0

குளிர்காலங்களில் வரக்கூடிய மார்புச்சளி, இருமல், தொண்டையில் கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்த வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம்.

மாறிவரும் கால சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை சளி, இருமல், மார்பு சளி, தொண்டை கரகரப்பு போன்றவை உண்டாகும்.

இதனை எவ்வித செலவும் இன்றி வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் மற்றும் அதன் செய்முறைகள் பற்றி விரிவாக காணலாம்.மார்புச் சளி, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் பண்புகளை பூண்டில் அதிகப்படியாக சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினசரி நம் சமையலுக்கு இதனை உபயோகப்படுத்துகிறோம். பூண்டில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், விட்டமின் பி1, விட்டமின் பி2, கால்சியம்,அயன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

வரட்டு இருமலை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. மிளகின் காரத்தன்மை ஆனது தொண்டைப் பகுதியில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நெஞ்சில் கரைத்து வறட்டு இருமல் வராதவாறு பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மிளகில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய தன்மை உள்ளது.

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக மார்புச் சளி,இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவை உண்டாக்குகிறது இதனை குணப்படுத்தும் சத்துகள் கிராம்பில் அதிகமாக நிறைந்துள்ளது. இதிலுள்ள அயன், கால்சியம் மற்றும் விட்டமின் ஏ சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

மார்புச்சளி இருமல் தொண்டை கரகரப்பு ஆகியவற்ற குணப்படுத்தும் செய்முறைகளை காணலாம். 500 மிலி நீரில் இரண்டு வெள்ளை பூண்டு, நான்கு மிளகு, இரண்டு கிராம்பு, சிறிதளவு தோல் நீக்கிய இஞ்சி துண்டு, ஒரு ஸ்பூன் மஞ்சத்தூள் ஆகியவற்றை நன்றாக கொதிக்க வைத்து அதன் பிறகு வடிகட்டி தினசரி காலையில் பருகி வருவதன் காரணமாக மார்பு சளி, வரட்டு இருமல் ஆகியவை முற்றிலும் குணமடையும்.

முகப்பரு தொந்தரவா? பருக்கள் தழும்பை மறைக்க இப்படி ஒரு வழியா! 

0

முகப்பரு தொந்தரவா? பருக்கள் தழும்பை மறைக்க இப்படி ஒரு வழியா!

இன்றைய டீன்ஏஜ் பருவத்தினரை பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனை தான் முகப்பரு. வெயில் காலங்களில் சில பேருக்கு மிக அதிகமான முகப்பருக்கள் வரக்கூடும். பல்வேறு வகையான கிரீம்கள், சோப்புகள் பயன்படுத்தினாலும் எவ்வித தீர்வும் கிடைக்காது.

இதனால் அதிக தாழ்வு மனப்பான்மையும் மன உளைச்சலும் தான் ஏற்படும். வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதும், போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் பொழுதும், சங்கடத்தை உருவாக்கும். முகப்பரு மறைந்தாலும் அதனால் ஏற்படும் தழும்புகள் சீக்கிரம் மறைவதில்லை.

முகப்பருவை போக்கி அதனால் ஏற்படும் வடுக்களையும் போக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

1. இதற்கு நாம் முதலில் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் வேப்பிலை. வேப்பிலை முகப்பருவை போக்கி முகச்சுருக்கத்தையும் குறைக்கிறது. சரும அழற்சியை போக்குகிறது. உடல் ஆரோக்கியத்தைப் போல் சரும ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். ஐந்து கொத்து வேப்பிலையை தண்ணீரில் நன்றாக அலசி மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஸ்பூன் மட்டும் நீர் விட்டு அரைத்து தனியாக ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.

2. இரண்டாவதாக நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் கற்றாழை. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கி இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

ஒரு மடல் கற்றாழையில் ஒரு சிறிய துண்டை நறுக்கி தனியாக வைக்கவும். மீதமுள்ள மடலில் இருந்து கற்றாழை ஜெல் எடுக்கவும்.

ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், மற்றும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்கவும்.

தனியாக கட் பண்ணி வைத்த கற்றாழை தூண்டில் ஒரு பக்க தோலை மட்டும் எடுத்து விடவும். கடலைமாவு ஒரு ஸ்பூன் எடுத்து ஜெல் உள்ள பகுதியில் தடவி முகப்பரு உள்ள இடத்தில் நன்றாக தேய்க்கவும். இதனால் அந்த பகுதியில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து சுத்தமாகும்.

பிறகு  சுத்தமான நீரால் முகத்தை கழுவி விட்டு அந்த இடத்தில் வேப்பிலை கலவையை பூசவும். சுமார் ஒரு மணி நேரம் ஊற விட்டு பின்பு நீரால் கழுவும். ஒரு நான்கு நாட்கள் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். அதன் பிறகு வாரத்திற்கு ஒரு நாள் என செய்து வரலாம்.

 

மரு தானாக கீழே விழ வேண்டுமா? அரை டீஸ்பூன் டூத் பேஸ்ட் இருந்தால் போதும்!

0

தற்போதுள்ள சூழலில் அதிகளவு நாம் வெளியே சென்று வருவதினால் மாசு ஏற்பட்டு நம் முகத்தில் பருக்கள் உருவாகின்றது. அதுபோலவே நம் உடலில் உள்ள கழிவுகள் தேங்கி மரு உருவாகிறது.

பெரும்பாலும் முகம் மற்றும் உடல் பகுதிகளில் மருகள் காணப்படும். அதனை எவ்வாறு தானாகவே உதிர வைப்பது என்று எந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் ஒரு பல் பூண்டை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் வெங்காயம், டூத் பேஸ்ட், எலுமிச்சை பழம், முதலில் வெங்காயத்தை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதனை தொடர்ந்து பூண்டு மற்றும் வெங்காயத்தை நான்கு கலந்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு நன்கு கலக்க வேண்டும். அதனுடன் இரண்டு சொட்டு சுண்ணாம்பை சேர்க்க வேண்டும்.

அரை டீஸ்பூன் அளவிற்கு டூத் பேஸ் சேர்க்க வேண்டும்.அந்த பொருட்கள் அனைத்தையும் நன்கு கலக்க வேண்டும். இதனை நம் உடலில் எந்தப் பகுதிகளில் மருக்கள் இருக்கின்றதோ அந்த மருக்கலின் மீது தேய்க்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் மருக்கள் தானாகவே கீழே விழுந்து விடும்.

 

குதிகால் வலி மற்றும் பாத எரிச்சல் குணமாக வேண்டுமா? ஒரு வெற்றிலை போதும்!

0

குதிகால் வலி வீக்கம், பாத வலி எரிச்சல் சரியாக இதனை செய்தால் போதும்.பொதுவாக குதிகால் வலி ஏற்படுவதற்கு காரணம் அதிக உடல் பருமம், கடினமான வேலைகள் மற்றும் உடலில் கால்சியம் சத்து குறைவுதான்.

குதிகால் வலி ஏற்படும் இதனை எவ்வித செலவுமின்றி குணப்படுத்தும் செய்முறைகளை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம்.

இதனை வெற்றிலை வைத்தியம் என கூறலாம். இதில் உள்ள மூலப்பொருட்கள் குதிகால் வலி, வீக்கம், பாத வெடிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது.

ஒரு வெற்றிலை சிறிதளவு கசகசா மற்றும் சிறிதளவு வெந்தயம், சிறிதளவு சீரகம் ஆகியவற்றை சேர்த்து வாய்ப்பகுதியில் வைத்து சிறிது நேரம் மெல்ல வேண்டும் முதலில் வரக்கூடிய உமிழ் நீரை கீழே துப்பி விட வேண்டும். அதன் பிறகு வரக்கூடிய சாற்றினை விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் காரணமாக குதிகால் வலி, குதிகால் எரிச்சல், பாத வெடிப்பு ஆகியவை வராமல் தடுக்க உதவும்.

 

தினம் ஒரு செம்பருத்தி பூ! உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது!

0

செம்பருத்தி பூவை பச்சையாக சாப்பிடுவதில் உள்ள ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூ பொதுவாக பெண்கள் தலைகளின் வைப்பதற்கு உபயோகமாக உள்ளது. ஆனால் இதில் உள்ள இலைகள் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது அதனை என்னவென்று இந்த பதிவின் மூலம் விரிவாக காணலாம்.

செம்பருத்தி பூ அதில் உள்ள மகரந்தத் தோலை நீக்கிவிட்டு அதன் பிறகு நீரில் நன்றாக தூய்மைப்படுத்தி தினசரி காலையில் பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதில் உடல் சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியாக வைத்திருக்க மிகவும் உதவுகிறது.

ரத்தத்தில் உள்ள கொழுப்புத் தன்மை அதிகரிப்பதன் காரணமாக இருதய அடைப்பு ஏற்படும் இதனை தடுக்க பச்சையாக செம்பருத்திப்பூவின் இதழ்களை சாப்பிடுவதால் இவ்வித பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும். மேலும் உடலில் அதிகப்படியான பதட்டம் படபடப்பு மற்றும் ரத்த அடைப்பு போன்றவற்றிலிருந்து குணமாக உதவுகிறது.

நம் உடல் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக வாய்ப்புண் வயிற்று புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் இதனை தடுக்க செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாக காய வைத்து அதனை பொடி செய்து தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு கப் பாலில் கலந்து குடித்து வருவதன் காரணமாக இவ்வித பிரச்சனைகள் முற்றிலும் குணமாக உதவும்.

நம் தோல் பகுதியில் உள்ள ஈரப்பதம் குறைவதன் காரணமாக தோலில் பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. இதனை குணப்படுத்த பச்சையாக செம்பருத்தி இதழ்களை உண்பதன் காரணமாக தோலில் உள்ள இரப்பதத்தை அதிகரிக்கும். இவ்வித பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும்.

இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்! 

0

இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்! 

இந்த பதிவில் எலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்து பானம் தயாரிப்பது எப்படி அதில் என்னவெல்லாம் நன்மைகள் அடங்கியுள்ளன என பார்ப்போம்.

எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி உள்ளது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் தோலில் தான் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

அடுத்து ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சையை கழுவி சிறு சிறு துண்டுகளாக தோலுடன் நறுக்கிக் கொள்ளவும். இந்த பானமானது ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒரு நல்ல அருமருந்தாக செயல்படும். அவர்களின் ரத்த ஓட்டம் சீராகி சுவாச பிரச்சனை சரியாகும்.

சிலருக்கு அடிக்கடி காய்ச்சல் சளி இருமல் உடல் சோர்வு போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பானம் உதவும். வயிற்றில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து தொப்பையை குறைக்க உதவும்.

இந்த பானம் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நச்சுக்களை வெளியேற்றுகிறது. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புற்றுநோய் எதுவும் வராமல் தடுக்கிறது. மேலும் பல்வேறு வயிற்றுப் பிரச்சினைகளையும் தீர்க்கும். இந்தப் பானத்தின் முக்கிய பயன்பாடு இதய அடைப்பை நீக்குவது தான். இதனால் ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்படாது.

அடுத்து இஞ்சியை சிறு துண்டுகளாகவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் துண்டுகளாக்கிய இஞ்சி மற்றும் எலுமிச்சை போடவும். ஓரளவு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். அதிக நேரம் கொதிக்க கூடாது.

இது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகலாம். இதை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காலை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை குறையும். மேலும் சுவாசப் பிரச்சினைகள், இதய அடைப்பு செரிமான பிரச்சனைகள் போன்றவை நீங்கும்.

 

திமுகவில் மறைந்து போன காங்கிரஸ். உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்!!

0

DMK CONGRESS: பீகாரில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது எந்த அளவிற்கு பேசப்பட்டதோ, அந்த அளவிற்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததும் பேசப்பட்டது. 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் பீகாரில் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது பீகாரில் மட்டுமல்ல அனைத்து மாநிலத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிலும் முக்கியமாக தமிழகத்தில் திமுக கூட்டணியில் அதன் மதிப்பு குறைந்து விட்டதாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் பீகார் தேர்தலுக்கு முன்பு வரை திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சி அதிகாரம் போன்றவற்றை வலியுறுத்தி வந்தன.

ஆனால்  தேர்தல் முடிவுக்கு பின்னர் காங்கிரஸ் அமைதியாகிவிட்டது. இந்நிலையில் காங்கிரஸின் தோல்வி குறித்தும், திமுக கூட்டணியில் அதன் நிலை குறித்தும் பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, விஜய் காங்கிரஸுக்கு ஒன்னும் புதுசு இல்ல என்று கூறும் காங்கிரஸ், விஜய்யை காரணம் காட்டி திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்பதை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறினார். மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்றும் திட்ட வட்டமாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் பீகாரில் தோற்றத்தை அதிமுகவை விட அதிகம் விமர்சித்தது திமுக தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக தான் காங்கிரஸை அதிகம் விமர்சித்துள்ளது என்ற இவரது கூற்று, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு மதிப்பு குறைந்து விட்டது என்பதை நிரூபித்திருக்கிறது. பீகாரில் தோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழக சட்டமன்ற தேர்தலை நம்பி இருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் மதிப்பு குறைந்தால், அதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது இருக்கும் நிலைமையில் விஜய்யுடனும் கூட்டணி சேர காங்கிரஸ் யோசிப்பதால், தமிழக தேர்தலிலும் அதன் நிலை கேள்விக்குறியாகும் என்றே பலரும் கூறுகின்றனர்.