Home Blog Page 49

திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பாமக.. இதெல்லாம் ரொம்ப ராங்!! அச்சத்தில் ஸ்டாலின்!!

0

DMK PMK: அடுத்த வருடம் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. இது திராவிட கட்சிகளுக்கு பொருந்தும். அதனால் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து வருவதால், மூன்றாம் நிலை கட்சிகளிடம் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.

அந்த வகையில் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு காரசார விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் திமுக தங்களது கூட்டணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்து வருகிறது. ஒரு வேலை இப்போது இருக்கும் கூட்டணி பிரிந்தாலும், தேமுதிக, பாமக கூட்டணியை வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று திமுக திட்டம் தீட்டிய நிலையில் அந்த ஆசையும் தற்போது நிறைவேறாமல் போய் விட்டது.

முதலில் பாமகவிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுகவிற்கு அப்பா-மகன் சண்டை பெரும் தடையாக உள்ளது. இதனால் ராமதாஸ், திமுக பக்கமும், அன்புமணி அதிமுக பக்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். இதனை காரணமாக பாமக கூட்டணி உறுதியாகாமலே இருந்தது. ஆனால் நேற்று நடந்த தூய்மை பணியாளர் போராட்டத்தில் அதற்கு முடிவு கிடைத்துவிட்டது. தனியார்மயத்தை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு  நேரில் சென்று ஆறுதல் அளித்த பாமக பொருளாளர் திலகபாமா, பொது மக்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். தேர்தல் சமயத்தில் மட்டும், அப்பா-மகன் வேடம் போடும் ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கூறியிருந்தார். திமுகவை கடுமையாக எதிர்த்திருக்கும் இவரின் கருத்து, பாமக, திமுக உடன் கூட்டணியில் சேர போவதில்லை என்பதை தெளிவாக கூறியிருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. இந்த தொகுதி தான் வேண்டும்!! இதனால் அதிமுகவுக்கு தான் பாதிப்பு!!

0

ADMK BJP: பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று பலரும் கூறுகின்றனர். பீகாரில் NDA கூட்டணி யாரும் எதிர்பார்த்திராத அளவு மாபெரும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி தற்போது தமிழகத்தில் நடைபெற போகும் தேர்தலுக்காக திராவிட கட்சியான அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் தேர்தலை நோக்கி இருவரும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.  இந்நிலையில் பீகாரில் வெற்றி பெற்ற பாஜக தற்போது தமிழக தேர்தலில் முனைப்பை காட்ட தொடங்கியுள்ளது.

அந்த வகையில், அதிமுகவிடம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதிலும் முக்கியமாக கொங்கு மண்டலத்தை அதிமுகவிடம் கேட்டு பெற வேண்டுமென பாஜக உறுதியாக உள்ளதாம். என்னதான் பீகாரில் பெரியளவில் பாஜக வெற்றி பெற்றாலும் அதற்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. இப்படி இருக்க பாஜகவிற்கு அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொண்டு மண்டலத்தை கொடுத்தால் அந்த பகுதியில் அதிமுக தோல்வியை தான் சந்திக்கும்.

அதிமுகவின் வாக்கு வாங்கி தற்சமயம் பிரிய தொடங்கியுள்ளதால், அது கொங்கு மண்டலத்தில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த சூழலில் கொங்கு மண்டலத்தை பாஜகவிற்கு ஒதுக்குவது சரியான முடிவு அல்ல என்று இபிஎஸ் யோசிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பீகாரில் வெற்றி பெற்றதை பகடை காயாக வைத்து பாஜக அதிமுகவிடம் சில நிபந்தனைகளை முன் வைத்து வருகிறது. இந்த நிபந்தனைகளுக்கு இபிஎஸ் சம்மதிக்கவில்லை என்றால் அதிமுக-பாஜக கூட்டணி பிரிய நேரிடலாம் என்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதுக்கெல்லாம் காரணம் விஜய் தான்.. டென்ஷன் ஆனா ஸ்டாலின்!!

0

DMK TVK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் மூழ்கியுள்ளன. ஆளுங்கட்சியாக உள்ள திமுக இம்முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று முயற்சித்து வருகிறது. அதற்காக கடந்த  சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெற வேண்டுமென்று அந்த பகுதிகளில் இரண்டாம் கட்ட தலைவர்களை இறங்கியுள்ளது. தோல்வியுற்ற இடங்களில் மக்களை கவரும் பணி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

திமுகவை அதிமுக கடுமையாக எதிர்த்து வரும் சுழலில் தற்போது திமுகவை எதிர்க்க தமிழக வெற்றிக் கழகம் என்னும் ஒரு புதிய சக்தியும் உருவெடுத்துள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே தனது அரசியல் எதிரி திமுக தான் என்று கூறி வருகிறார். மேலும் விஜய்க்கு யாரும் எதிர்பார்த்திடாத அளவு ஆதரவு இருந்ததால், இதனை பகடை காயாக பயன்படுத்த நினைத்தது திமுகவின் கூட்டணி கட்சிகள். அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் தராவிட்டால் நாங்கள் தவெக கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்று திமுக கூட்டணிகள் மறைமுகமாக கூறி வந்தன.

அது மட்டுமல்லாமல், இதனை நாட்களாக அமைதியாக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும், சாதிய வன்கொடுமைகள் அதிகரித்தது விட்டது என்பது போன்ற கருத்துக்களை பகிர்வது திமுகவிற்கு எதிராகவே பார்க்கப்படுகிறது. இவர்களின் இந்த தொடர் கருத்தும், திமுகவிருக்கு எதிரான நடவடிக்கைகளும், ஸ்டலினுக்கு விஜய்யின் மேல் கோபத்தை அதிகரித்திருக்கிறது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தவெகவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் பாஜக.. அடிபணிவாரா விஜய்!!

0

TVK BJP: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், தேர்தல் களம் புதிய வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் வருகை. விஜய் புதிய கட்சி துவங்கியதிலிருந்தே அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இவரின் வருகை திராவிட கட்சிகளுக்கே சவால் விடும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென அதிமுக-பாஜக பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்தது. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது, கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்தது மட்டுமல்லாமல், கரூர் விவகாரத்தை விசாரிக்க பாஜக சார்பில் தனி நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது.

இவை எதற்கும் அடிபணியாத விஜய், கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்பதை தெளிவாக கூறிவிட்டார். ஆனாலும் பாஜக விஜய் உடனான கூட்டணி பேச்சு வார்த்தையை கை விடுவதாக தெரியவில்லை. திமுக சார்பில் நடத்தப்பட்ட  அறிவு திருவிழாவில், கலந்து கொண்ட தலைவர்கள் அனைவரும் விஜய்யை பற்றியே விமர்சனத்தை முன் வைத்தனர். இதற்கு பதிலடியாக பேசிய விஜய் இது அறிவு திருவிழா இல்லை, அவதூறு திருவிழா என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த திமுகவின் துணை முதல்வர் உதயநிதி அறிவு இருக்கவன் அறிவு திருவிழா நடத்துறான் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது உதயநிதியின் கருத்து குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இவர்களுக்கு மட்டும் தான் அறிவு இருக்கிறதா? மற்றவர்களுக்கு அறிவு இல்லை என்பது போல இவர்கள் பேசுகிறார்கள். அறிவாலயம் என்று பெயர் வைத்து கொண்டால் உங்கள் எல்லோருக்கும் அறிவு இருக்கிறது என்று அர்த்தம் ஆகி விடாது என்று அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். உதயநிதியின் கருத்து விஜய்யை விமர்சித்து இருக்கும் பட்சத்தில், தமிழிசை சௌந்தரராஜன் விஜய்க்கு ஆதரவாக பேசி இருப்பது, பாஜக மீண்டும் மீண்டும் விஜய் கூட்டணியில் இணைக்க முயற்சிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஓபிஎஸ் போட்டியிட போகும் தொகுதி இதுவா.. காங்கிரஸுக்கு ஆப்பு வைக்க போகும் முடிவு!!

0

ADMK CONGRESS: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில், கட்சிகளனைத்தும் விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளும் அதன் செயல்பாட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு இந்த தேர்தலில் அதனை எதிர்க்கட்சியாக கூட வர விடாது என்ற கருத்து நிலவுகிறது. 

அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலா போன்றோர் நால்வர் அணியாக உருவெடுத்துள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவர்கள் எந்த அணியில் இணைவார்கள் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வர, அதற்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில், ஓபிஎஸ் திமுக பக்கம் சாய்வதாகவும் தகவல் வந்தது.

ஆனால், போடி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஓபிஎஸ்யை இந்த முறை திமுக வீழ்த்தும் என்று ஸ்டாலின் கூறியதற்கு பதிலடியாக ஓபிஎஸ் அவரது கருத்தை கூறியிருந்தார். போடி தொகுதியில் வெற்றி பெற்று வரும் ஓபிஎஸ் இந்த முறை திருவாடானை தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. திருவாடானை தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்றது. தற்போது அதனை பறிக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஓபிஎஸ்யின் இந்த வியூகம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மல்லை சத்யா இணைய போகும் கட்சி இது தான்.. வெளியான தகவல்!! ஷாக்கில் வைகோ!!

0

DMK DVK MDMK: அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழக கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதற்காக தங்களது கூட்டணியை பலப்படுத்த கட்சிகளனைத்தும் முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். ஆனால் அதில் புதிய திருப்பமாக தோன்றியது தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இவரின் வருகை அனைத்து கட்சிகளுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

இந்த கணிப்பு கிட்ட தட்ட உறுதியாவது போலுள்ளது என்றே சொல்லலாம். விஜய்யின் அரசியல் வருகையிலிருந்தே மீள முடியாமல் தவிக்கும் அரசியல் களம், தற்போது மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் புதிய கட்சியை நோக்கி திரும்பியுள்ளது. திராவிட வெற்றிக் கழகம் என்னும் தனது கட்சி பெயரை இன்று அறிவித்த மல்லை சத்யா, அடுத்த கட்டமாக எந்த கட்சியுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

இது குறித்து விவாதம் எழுந்த போது, அவர் திமுகவில் இணைய போவதாக தங்கள் வந்துள்ளது. மதிமுக பல வருடங்களாக திமுக கூட்டணியில் பயணித்து வரும் நிலையில், மதிமுகவிலிருந்து பிரிந்தாலும் திமுக கூட்டணியில் தான் தொடருவோம் என்பதை இவரது முடிவு உறுதிப்படுத்தியிருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மல்லை சத்யா திமுக உடன் தான் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி வைகோவிற்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

திமுக-அதிமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய பிரேமலதா.. இவ்வளவு தைரியம் இவரால தானா!!

0

DMDK TVK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், மாநில கட்சிகளனைத்தும் தேர்தல் பணியில் முனைப்பை காட்டி வருகின்றன. அதே சமயம் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. தற்சமயம், அதிமுக-பாஜக கூட்டணி, திமுக உடன் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே உறுதியாக உள்ளது. அதிலும் திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் மூன்றாம் நிலை கட்சிகளான தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை.

பாமக மெல்ல மெல்ல அதிமுக பக்கம் செல்வது போல் தெரிகிறது. ஆனால் தேமுதிகவோ இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளது. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அதிமுக, திமுக கட்சிகளை நேரடியாக விமர்சித்திருப்பது விவாதமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பரப்புரை  நடைபெற்றது. அதில் பேசிய பிரேமலதா, ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் சவால் விடும் வகையில் தமிழகத்தில் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ளோம் என்று கூறியிருந்தார். பிரேமலதா அதிமுக, திமுகவை ஒருசேர விமர்சித்தது இதுவே முதல் முறை.

பிரேமலதாவும், ஆர்.பி. உதயகுமாரும் சந்தித்து பேசியதால் அதிமுக-தேமுதிக கூட்டணி உருவாகும் என்று நினைத்த சமயத்தில் அதிமுகவை பிரேமலதா விமர்சித்து பேசியிருப்பது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மேலும் ஸ்டாலினையும் பிரேமலதா பலமுறை சந்தித்து பேசியிருக்கிறார். தற்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் திராவிடக் கட்சிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம் என நினைத்த பிரேமலதா தற்போது இரு கட்சிகளையும் விமர்சித்தது விஜய் இருக்கும் தைரியத்தில் தான் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் தேமுதிக-தவெக கூட்டணி உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோவையில் இம்முறையும் கோட்டை விட்ட திமுக.. செந்தில் பாலாஜி இருந்தும் பிரயோஜனம் இல்லை!!

0

DMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை தங்களது தேர்தல் வேட்டையில் மூழ்கியுள்ளன. அதே போல் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும் தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று முயற்சித்து வருகிறது. ஆனால் தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுகவின் கூட்டணி கட்சிகளும் சரி, வேறு எல்லா பிரச்சனைகளும் திமுகவிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

இந்நிலையில் சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்ற இடங்களை பட்டியலிட்டு அங்கு திமுகவின் முக்கியமான இரண்டாம் கட்ட தலைவர்களை  இறக்கி இந்த முறை அங்கு மாபெரும் வெற்றி பெற உழைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் தோல்வியுற்ற திமுக இம்முறை அங்கு வெற்றி பெற வேண்டுமென செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளது. கோவையில் மக்களை கவரும் பணிகளை செந்தில் பாலாஜி முழுவீச்சில் நடத்தி வருகிறார்.

கோவையில் அதிமுகவும், பாஜகவும் மாறி மாறி வெற்றி பெற்றாலும் இந்த முறை அது திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டுமென திமுக அரசு முயற்சித்த சமயத்தில் அதற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்டுள்ளார். இந்த நிகழ்வு திமுக அரசு மீது மக்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இம்முறையும் திமுகவின் ஆசை நிராசையாக மாறும் என்பதில் எந்த ஐயமுமில்லை என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இபிஎஸ்யிடம் ராஜினாமா கடிதம்.. திமுகவில் இணையும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 6 மாத காலமே உள்ளது. அதற்காக தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் இபிஎஸ் அதிமுகவின் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் இபிஎஸ்யின் தலைமையில் நம்பிக்கையில்லாத பல்வேறு முக்கிய பொறுப்பாளர்களும் அதிமுகவிலிருந்து பிரிந்து வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். இவையெல்லாம் பல வருடங்களாக ஆட்சியில் இருந்த அதிமுகவின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இழக்க காரணமாக அமைந்து விட்டது.

இதுவே அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியை பலவீனப்படுத்தும் வகையில் நால்வர் அணி உருவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய திருப்பமாக புதுச்சேரி முதலியார் பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கரன் அதிமுகவிலிருந்து திடீரென விலகியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய அவர், இனி கட்சி பணிகளை தொடர முடியாத காரணத்தினால், அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் கைவிடுவதாக அறிவித்திருக்கிறார்.

இவரின் இந்த ராஜினாமா கடிதம் ஒரு அரசியல் சமிக்கையாகவே பார்க்கபடுகிறது. இவரின் இந்த விலகளுக்கு அதிமுக தலைமையின் மேல் உள்ள அதிருப்தியே காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். எம்.ஜி. ஆர். ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக தற்போது இல்லையென்று கூறி பலரும் திமுக இணைந்ததால், அடிப்படை உறுப்பினர் பதவியையும் துறந்த பாஸ்கரனும் கூடிய விரைவில் திமுகவில் இணைவார் என்று யூகிக்கப்படுகிறது. இவரின் இந்த திடீர் முடிவு அரசியல் அரங்கில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திமுக அரசை எதிர்த்து கேள்வி கேட்ட வைகோ.. செம்ம ஷாக்கில் ஸ்டாலின்!!

0

DMK MDMK: 2026 ல் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதி தான் திமுகவில் நிலவும் தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரமாகும்.

காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கேட்பது ஸ்டாலினுக்கு பெரும் பாடாக இருக்கும் சமயத்தில் தற்போது புதிதாக திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து புதிய கட்சி துவங்கி, பின்னர் திமுக கூட்டணியிலேயே இணைந்த வைகோ திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி வருவது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசின் செயல்பாடுகளில் உள்ள தவறை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது தமிழகத்திற்கு பேராபத்து என்றும், போதையின் உச்சமான டாஸ்மாக்கை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். மேலும் மாணவர்களிடையே சாதிய மோதல் ஏற்படுவது வேதனையின் உச்சம் என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

வைகோவின் இந்த கருத்து, ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் திமுகவிற்கு எதிராக இருக்கும் இவரது பேச்சு, மதிமுகவிலிருந்து வெளியேறிய மல்லை சத்யா வைகோவிற்கு மத்திய அரசுடன் இணையும் ஆர்வம் இருக்கிறது என்று கூறியதை உறுதிப்படுத்தியுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அண்மை காலமாக திமுகவில் நிறைய குழப்பங்கள் நிலவு வரும் காரணத்தால் தற்போது இந்த பிரச்சனையையும் திமுக தலைமை எப்படி சமாளிக்கும் என்பது கேள்வி குறியாக உள்ளது.