Home Blog Page 57

தவெக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்படும்.. மறைமுகமாக கூறிய அதிமுக அமைச்சர்!!

0

ADMK TVK:சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் வழக்கம் போல போட்டி போட தொடங்கி விட்டன. இந்நிலையில் திமுகவிற்கு புதிய எதிரியாக உருவெடுத்துள்ளது தவெக. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே, திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று கூறியதால், இது அதிமுகவிற்கு சாதகமாகிவிட்டது. ஜெயலலிதா இறந்த பிறகு இபிஎஸ் அதிமுக தலைவராக பதவியேற்றதிலிருந்தே அக்கட்சி வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் விஜய் கூட்டணி அதிமுகவிற்கு பலம் சேர்க்கும் என்றுணர்ந்த இபிஎஸ் தவெகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்து விடலாமென திட்டம் தீட்டினார். ஆனால் இபிஎஸ்யின் எதிர்ப்பார்ப்பு அத்தனையும் ஏமாற்றத்தில் முடிந்தது.

விஜய் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்தும் அதிமுகவும், பாஜகவும் அவரை விடாமல் துரத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று தமிழக பாஜக மகளிரணி தலைவராக இருக்கும் வானதி ஸ்ரீநிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய் திமுக ஆட்சியை அகற்ற வேண்டுமென கூறுகிறார். அப்படி இருக்க அவரால் எவ்வாறு தனியாக அதனை செயல்படுத்த முடியும். ஒன்று சேர், ஒன்று சேர் என்று சொல்லும் விஜய், தவெக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை அவர் தான் சொல்ல வேண்டுமென கூறினார். இவரின் இந்த கருத்து பாஜக-அதிமுக, தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை ஓயாது என்பதை நிரூபித்தது.

தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஜனவரி மாதம் வரை பொறுமையாக இருங்கள் மெகா கூட்டணி அமையும், சட்டமன்ற தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக கூட்டணி அமைப்பதை ஊடகங்களிடம் கூற முடியாது, 2026 தேர்தலுக்கு முன் அதிமுக தலைமையிலான கூட்டணி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த கூற்று விஜய்யின் தவெகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாக தெரிகிறது என்று பலரும் சந்தேகிக்கின்றனர். மேலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை ஆர்.பி உதயகுமார் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். விஜய் அதிமுகவுடன் கூட்டணி இல்லையென்பதை மேடையில் அறிவித்தும் அதிமுக, விஜய்யை விடாமல் துரத்துவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள விட்டா வேற வழி தெரியல.. சரணடைந்த இபிஎஸ்!! ரீ என்ட்ரியில் சசிகலா OPS!?

0

ADMK: எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு தொடர்ந்து வந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தான் சந்தித்து வருகிறார். கட்டாயம் இந்த தேர்தலில் மாற்ற வேண்டும் என்று எண்ணி பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்துகிறார். அந்த வகையில் கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய நிர்வாகிகளை இணைக்கும் படி பலர் பரிந்துரை செய்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக விஜய், சீமான், பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியில் இணைவார்கள் என்று எதிர்பார்த்தார்.

அதிலும் இவர்களில் விஜய் மீது மட்டும் அசாத்திய நம்பிக்கை இருந்தது. அனால் இவர்களின் கூட்டணி பேச்சு வார்த்தையானது ஆரம்ப கட்டத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது விஜய் பிரச்சாரம் மேற்கொண்டதில் கரூரில் 41 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது போல அந்த சம்பவத்தில் இபிஎஸ் ஆதரவு தெரிவித்ததால் அனைவரது கவனமும் இவர்களது கூட்டணி குறித்து தான் இருந்தது. ஆனால் விஜய் ஒருபோதும் ஒத்துப்போகாமல் பழைய நிலைப்பாட்டில் தான் கட்சி செயல்படும் என்று தெரிவித்துவிட்டார்.

இதனால் வருத்தமடைந்த எடப்பாடி அதிமுக-வையே மீண்டும் வலுப்படுத்தலாம் என்ற நோக்கில் உள்ளார். அந்தவகையில் தினகரன் ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இவர்களுக்கு டம்மி பதவி வழங்கி ஓட்டுக்காக மட்டும் கட்சிக்குள் ஓரமாக உட்கார வைக்க திட்டமிடுகிறாராம். இதற்கெல்லாம் ஒத்து வரும் பட்சத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக கட்சிக்குள் சில முக்கிய தலைகள் பேசி வருகின்றனர். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் வெளியேறியவர்கள் தங்களுக்கு எந்த பதவி வழங்கப்படுகிறது என்பதை பார்த்து தான் தான் முடிவெடுப்பார்கள் என்று மற்றொருபுரம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் கொடுத்த டோஸ்.. கட்சியை விட்டு வெளியேறப்போகும் ஆதவ்!! பரபரப்பில் தவெக!!

0

TVK:தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலானது இம்முறை நான்கு முனை போட்டிகளை கடந்து நடைபெற இருக்கிறது. அதிமுக திமுக மட்டும் தான் என கால் பதித்து வந்த நிலையில் புதிய கட்சியாக உருவெடுத்த தவெக-வும் அமைந்துள்ளது. மற்ற புதிய கட்சியினருக்கு கிடைத்த வரவேற்பை விட இவருக்கு சற்று அதிகமே. இந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் ஆளும் கட்சி பல உள்வேலைகளை செய்தது. அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை கிளப்பியது.

கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆளும் கட்சி விஜய்-க்கு எதிராக போர் கொடி தூக்கியது. அதே சமயத்தில் தாவெக சார்பாக அனைத்து கட்சி பணிகளும் துவண்டு கிடந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து கூட்ட நெரிசலில் உயிரிழிந்த  அவர்களை நேரில் சந்தித்து பேசினார். மேற்கொண்டு இது ரீதியாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆதாவ் அர்ஜுனா பேசியது குறித்து விஜய் பெரும் கோபத்தில் உள்ளாராம்.

தமிழக வெற்றி கழகத்தின் கோட்பாடுகளை கடந்து பேசியுள்ளதால் இருவருக்கும் இடையே தனிப்பட்ட வாக்குவாதம் நடந்துள்ளதாம். மேற்கொண்டு இதே போல் மேடைகளில் பேசினால் கட்டாயம் கட்சியை விட்டு நீக்கப்படுவீர் என்று விஜய் எச்சரித்துள்ளாராம். இது ரீதியான தகவலானது தமிழக வெற்றி கழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் ஆதவ்வின் நடவடிக்கைகளை வைத்து விஜய் கொடுத்த வார்த்தைக்கு மதிப்புள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிமுக அமைச்சர்.. அடுத்த நீக்கம் இவர் தான்!!

0

ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், கட்சிகளனைத்தும், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும், அதிமுக, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும் தொடங்கி மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் இதனை சமாளிப்பதே இபிஎஸ்க்கு பெரும் பாடாக இருக்கிறது. இபிஎஸ் அதிமுக தலைவராக பதவி ஏற்றதிலிருந்தே கட்சி தொடர் தோல்விகளையும், முக்கிய தலைவர்களின் விலகளையும் சந்தித்து வருகிறது.

இதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்த நிகழ்வு  செங்கோட்டையனின் நீக்கம். கட்சியின் தலைமைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குவது இபிஎஸ் வழக்கம். அப்படி அமைந்தது தான் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, தினகரன், செங்கோட்டையனியன் நீக்கம். இவர்களை கட்சியிலிருந்தால் தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடுமென்ற பயத்தினால் தான் இபிஎஸ் இவர்களை கட்சியிலிருந்து நீக்கினார் என்ற கருத்தும் வலுபெறுகிறது. இதற்கு மேல் என்ன நடந்தாலும் மீண்டும் இவர்களை கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் இபிஎஸ் தெளிவாக உள்ளார்.

இப்படி இருக்கையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பிரிந்தவர்கள் மன்னிப்பு கேட்டால் மீண்டும்  கட்சியில் இணைப்பது குறித்து பொதுச் செயலாளரிடம் பரிந்துரைக்கப்படும் என்று கூறி இருக்கிறார். இவரின் இந்த கருத்து இபிஎஸ் மட்டும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இவ்வாறு பேசுவதால் இவரும் இபிஎஸ் எதிர்த்து போர்கொடி தூக்குகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காராணமாக ஓ.எஸ் மணியன் கூடிய விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்று அதிமுகவின் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

அதிமுகவின் அழிவு ஆரம்பம்.. தொண்டர்கள் எடுத்த திடீர் முடிவு!! அப்செட்டில் இபிஎஸ்!!

0

ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது. எந்த ஒரு சட்டமன்ற தேர்தலிலும் இல்லாத வேகம் 2026 தேர்தலில் இருக்கிறது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, அதிமுக, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவிலிருந்த முக்கிய தலைவர்கள் வெளியேற்றம், பாமகவில் ஏற்பட்டிருக்கும் தந்தை-மகன் பிரச்சனை போன்றவை அரசியல் களம் வேகமேடுதுள்ளதற்க்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

அதிலும் முக்கியமாக அதிமுகவில் ஏற்பட்ட பிரிவும், அவர்கள் நால்வர் அணியாக உருவானதும் தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. இபிஎஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென செங்கோட்டையன் கூறினார். கட்சியின் நலனுக்காக ஒருங்கிணைய வேண்டும் என்று கூறிய செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து நீக்கினார் இபிஎஸ். இதனால் இபிஎஸ் மீது கட்சியின் தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது தெரிகிறது.

எனவே அதிமுகவிலிருக்கும் தொண்டர்கள் பலரும், திமுகவில் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து 10 வது முறையும் தோல்வியை சந்திக்க அதிமுகவினர் தயாராக இல்லாத காரணத்தினால், நாம் திமுகவாக மாறிவிட்டால் அது வெற்றியாக மாறிவிடும் என்கிற எண்ணம் அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது என்று கூறி இதனை உறுதிப்படுத்தியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ். இவரின் இந்த கருத்து அதிமுகவின் அழிவிற்கு ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது. 

அதிரடி காட்டும் தவெக.. தேர்தல் சின்னத்தை OK செய்த விஜய்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் கரூர் அசாம்பாவிதத்திற்கு பிறகு அரசியல் பயணத்தில் முன்பை போல செயல்பட முடியவில்லை. குறிப்பாக ஆளும் கட்சி விஜய்யை முடக்கி உட்கார வைக்க வேண்டுமென்று பல முயற்சிகளை செய்தனர். ஆனால் தனது அரசியல் சார்ந்த வேலைகளை தொடர்ந்து விஜய் செய்து தான் வருகிறார்.

அதிலும், தமிழகத்தில் ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது கட்சிக்கான சின்னத்தை ஒதுக்க கோரி தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளது. அந்த வகையில் தேர்தல் ஆணையம் 181 சின்னங்களை வெளியிடும். இதில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு ஏற்ப 10 சின்னங்களை தேர்வு செய்து முன்கூட்டியே தரவேண்டும்.

அதிலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கும் சிறப்பு சலுகைகள் உண்டு. அப்படி இருக்கையில் தற்போது அந்த 181 சின்னங்களில் மக்களுக்குள் இணக்கமாகும் வகையில் மட்டைப்பந்து, ஆட்டோ, கடிகாரம் உள்ளிட்டவைகளை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மனுவை இணை பொதுசெயலாளரான சிடி ஆர் நிமல் குமார் மேலும் பல முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் இணைந்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளனர்.

மேற்கொண்டு அவர்கள் சின்னம் ஒதுக்குவது குறித்து ஆலோசனை செய்து தேர்ந்தெடுப்பர்.  இனி வரும் நாட்களில் இது ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டால் தான் இவர்களுக்கு ஒதுக்கிய சின்னம் உறுதி செய்யப்படும்.

ஒருங்கிணைப்பு குறித்து பாஜக மறைமுக பேச்சு வார்த்தை.. கலக்கத்தில் இபிஎஸ்!!

0

ADMK BJP: 2026 யில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பாமக, அதிமுக போன்ற கட்சிகளிடையே உட்கட்சி மோதல் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும், அதிமுகவில் இது உச்ச நிலையை எட்டியுள்ளது என்றே கூறலாம். இபிஎஸ்யின் தலைமையின் மேல் நம்பிக்கை இல்லாத பலர் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவது, இபிஎஸ்யின் தலைமைக்கு எதிராக கழக குரல் எழுப்புபவர்களை இபிஎஸ் கட்சியிலிருந்து அடியோடு நீக்குவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் அதிமுகவில் அரங்கேறி விட்டன.

இந்நிலையில், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என கட்சியின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், செங்கோட்டையனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பிறகு செங்கோட்டையன் டெல்லி சென்று மதிய அமைச்சர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு  நடவடிக்கைகள் குறித்து பேசியது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அதிமுகவின் உள்விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அமித்ஷா கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்த இக்கட்டான நிலையில், நால்வர் அணி உருவானது. இவர்கள் ஒரு அணியாக திரண்டு செயல்பட்டால், அதிமுகவின் வாக்கு வங்கி பாதிக்கும்.

இதன் காரணமாக அதிமுக கூட்டணியிலிருக்கும் பாஜகவிற்கு இது பின்னடைவை ஏற்படுத்தும். இந்நிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்திகாயினி அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால் தான் திமுகவை விரட்ட முடியும் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து, ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்காக பாஜக தீட்டிய திட்டமாக தெரிகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் அதிமுகவிடம் நேரடியாக ஒருங்கிணைப்பு குறித்து பேசாமல் இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறி வருகின்றன.

நால்வர் அணியின் குரலாக ஒலிக்கும் அதிமுக அமைச்சர்.. பதட்டத்தில் இபிஎஸ்!!

0

ADMK: தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக மக்கள் நல பணிகளை செய்தும், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்திய செயல்பாடுகளை பட்டியலிட்டும் அதனை மக்கள் மனதில் பதிய வைத்து, தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென போராடி வருகிறது. கூட்டணி கட்சிகளிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சிறிய கட்சிகளின் பரபரப்புக்கும் பஞ்சமில்லை. இப்படியான சூழலில், அதிமுகவில் மட்டும் உட்கட்சி மோதலும், தலைமை பிரச்சனையும் வெடித்து வருகிறது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதன் மீது கவனம் செலுத்தாமல், இவ்வாறான பிரச்சனையை தீர்ப்பதே இபிஎஸ்க்கு முழு நேர வேலையாகிவிட்டது. முதலில், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ் தற்போது, எம்ஜிஆர் காலம் முதல் தற்போது வரை அதிமுகவின் முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையனை கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அடுத்த எந்த வகையான நடவடிக்கையை எடுப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த சமயத்தில், அதிமுகவின் முக்கிய தலைவர்கள் என்னுடன் தொடர்பில் தான் உள்ளார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை எக்காரணம் கொண்டு மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என்று இபிஎஸ் தெளிவாக இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன், பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கேட்டால், அவர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து பொதுச்செயலாளரிடம் பரிந்துரைப்போம் என்று கூறியுள்ளார். இவரின் கருத்தால் இபிஎஸ் மிகவும் ஆத்திரத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் பிரிந்தவர்கள் மன்னிப்பு கேட்டால் மீண்டும் இணைத்து கொள்வேன் என்று இபிஎஸ் எந்த ஒரு இடத்திலும் கூறியதில்லை.

அப்படி இருக்க, இபிஎஸ் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று தெரியாமல் இந்த கருத்தை ஊடகங்களிடம் கூறியது தவறு என்று இபிஎஸ் ஆதரவாலர்கள் கூறுகின்றனர். மேலும் இவரின் இந்த கூற்று நால்வர் அணியின் குரலாக இவர் செயல்படுவதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், செங்கோட்டையன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் ஓ.எஸ் மணியனாக இருக்குமோ என்ற சந்தேகமும் பலருக்கும் எழுந்துள்ளது.

விஜய் கண்டிசனுக்கு ஓகே சொல்லிய இபிஎஸ்.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

0

ADMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு சுமார் 1 வருடத்திற்கு முன்பிருந்தே கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்றுப்பயணத்தையும் தொடங்கியுள்ளது. பாமக, தேமுதிக, நாதக போன்ற கட்சிகளும், கூட்டணி வியூகங்களிலும், தொகுதி பங்கீட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது தான் நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு.

விஜய் கட்சி ஆரம்பித்த நாள் முதல் இப்போது வரை அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற  கேள்வி அனைவரும் மனதிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் விஜய் அதிமுக உடன் தான் கூட்டணி வைப்பார் என்று இபிஎஸ் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், அண்மையில் நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த வதந்திக்கு தவெக தலைவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் காரணமாக ஏமாற்றமடைந்த இபிஎஸ் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சமயத்தில் விஜய்யிடம் ஒரு நிபந்தனையை முன் வைத்துள்ளாராம்.

அது என்னவென்றால், விஜய் முதல்வர் வேட்பாளராக நான் தான் இருப்பேன் என்று திட்டவட்டமாக கூறியிருந்த நிலையில், இதனை சரி பாதியாக பிரித்து கொள்ளலாம் என்று இபிஎஸ் கூறியுள்ளாராம். அதாவது முதல் இரண்டரை ஆண்டுகள் நீங்களும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் நானும் முதல்வர் பதவியை பிரித்து கொள்ளலாம் என்று கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. இது இன்னும் உறுதிப்படுத்தபடாத நிலையில், இந்த நிபந்தனைக்கு விஜய் சம்மதம் தெரிவித்து விட்டால், தமிழக அரசியல் களம் புதிய திருப்பத்தை சந்திக்கும் என்பது தெளிவாகிறது.

தவெக கூட்டணிக்காக அதிமுகவிற்கு தூதாக மாறிய கட்சி தலைவர்.. உண்மையை உடைத்த பிரபலம்!!

0

ADMK TVK TMC: தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பும் வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன், நடிகர் விஜய் தொடங்கிய புதிய கட்சி அதிமுக மற்றும் பாஜக ஆகியவற்றுடன் ஒரே கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவரது விருப்பத்தை தெரிவித்துள்ளார். வாசன் கூறியதாவது, தமிழ்நாட்டில் எதிர்கால அரசியல் சமநிலை மாறிக் கொண்டிருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வலுவான எதிர்க்கட்சியாக உருவாக முடியும்.

விஜய்யின் கட்சியும் அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய-மாநில கட்சிகளும் இணைந்தால், அது மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சக்தியாக மாறும் என்றார். மேலும் அவர், எடப்பாடி பழனிசாமியின் விருப்பம் திமுக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் அதிமுக கூட்டணி உருவாக வேண்டும் என்பதாகும் என்று கூறினார். இதன் மூலம், வாசன் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து, அரசியல் ஆர்வலர்கள் இது அதிமுகவிற்கு ஆதரவாக பேசப்படும் கருத்து என்றும் கூறி வருகின்றனர்.

ஏனெனில், இதற்கு முன் வாசன், அதிமுக தலைவரான எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. எனினும், வாசனின் இந்த கூற்று அதிமுக சார்பில் அவர் தூதாக செயல்படுகிறார் என்று பார்க்கப்படுகிறது. மக்களிடையே பிரபலமான விஜய்யின் அரசியல் நுழைவு ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வாசனின் கருத்து அந்த பரபரப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அரசியல் வல்லுநர்கள், இது வரவிருக்கும் தேர்தலுக்கான புதிய அரசியல் சிக்னல் என மதிப்பிடுகின்றனர்.