Home Blog Page 59

மதிமுகவை அட்டாக் செய்யும் இபிஎஸ்.. அப்செட்டில் வைகோ!! குஷியில் அதிமுக!!

0

MDMK ADMK: அடுத்த ஆண்டு நடைபெற போகும், சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகளனைத்தும் முழு ஈடுபாட்டில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணமும், திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணமும் நடைபெற்று வருகிறது. மேலும் மூன்றாம் நிலை கட்சிகளாக அறியப்படும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளும் மக்களை சந்திக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருவது மட்டுமல்லாமல் இம்முறை நான்கு முனை போட்டியும் நிலவக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிளவுகள் நடைபெற்று வரும் சமயத்தில், இபிஎஸ் தவெக கூட்டணியை மட்டுமே தான் நம்பி இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில், விஜய்யும் கைவிரித்து விட்டார். இதனால் ஏமாற்றமடைந்த இபிஎஸ் அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று யோசித்து வந்தார். ஆனால் இப்போது விஜய் கூட்டணிக்கு நோ சொல்லி விட்டால் என்ன மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைவது இபிஎஸ்க்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது  என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தேர்தலையொட்டி கட்சிகள் அனைத்தும், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் மும்முரமாக உள்ளனர். அதில் முதலிடம் பிடிப்பது அதிமுக என்றே சொல்லலாம். இம்முறை அதிகளவு வாக்காளர்கள் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை வேறு கட்சியிலிருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்துள்ளனர். அந்த வகையில் தற்போது புதிதாக, மதிமுகவின் மாணவரணி துணை செயலாளர் சிவநாதன் அதிமுகவில் இணைந்தது பேசுபொருளாகியுள்ளது. இது வைகோவிற்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் போட்ட பிளான்.. கூட்டணிக்கு ஓகே சொன்ன விஜய்!!

0

TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அதற்கான வேலைபாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறிய கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை தக்க வைத்து கொள்ள எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று ஆலோசித்து வரும் வேளையில், திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையையும், தொகுதி பங்கீட்டையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தற்போது வரை புரியாத புதிராகவே உள்ளது.

திமுக தவெகவின் அரசியல் எதிரி என்பதால் அதனுடன் கூட்டணி அமைக்காது என்பது தெரிந்த விஷயம். அதனால் அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். இதன் காரணமாக விஜய்யின் கூட்டணி யாருடன் என்ற கேள்வி தற்போது வரை அனைத்து ஊடகங்களிலும் காரசார விவாதமாக உள்ளது. இந்நிலையில், விஜய், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, தவாக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 80% வாய்ப்புகள் உள்ளது என தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்யிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக விசிகவிற்கு திமுக உடன் தொகுதி பங்கீட்டில் உள்ள பிரச்சனையை பயன்படுத்தி கூட்டணிக்கு வர வைப்பதற்கான வேலைப்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. மதிமுகவிடம் திமுகவின் கொள்கை அரசியலை மையப்படுத்திய பேச்சு நடத்தப்படுவதாக பலரும் கூறி  வருகின்றனர். மற்றபடி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தவாக போன்ற கட்சிகள் தானாக வந்துவிடுமென்ற எண்ணம் தவெகவிற்கு உள்ளது என தவெகவின் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆளுங்கட்சியின் தவறுகளை பட்டியலிட்ட தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்.. ஷாக்கில் சிஎம்!!

0

DMK TVK: 6 வது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென தீவிரமாக போராடி வருகிறது. திமுகவை எதிர்க்கும் ஒரே பெரிய திராவிட கட்சி அதிமுக தான். திமுகவிலிருந்து பிரிந்து, அதிமுக உருவான நாள் முதல் தற்போது வரை அந்த நிலை தான் தொடர்கிறது. ஆனால் தற்போது அதனை உடைத்தெரியும் வகையில் உதித்துள்ள புதிய கட்சி தமிழக வெற்றிக் கழகம். அதிமுக தனது அனைத்து கூட்டத்திலும், திமுக அரசு செய்த தவறுகளை சுட்டி கட்டி பேசி வருவதை தவெகவும் கையில் எடுத்துள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 2026 வரை மக்களுக்கு பல நன்மைகளை செய்திருந்தாலும், அவர்கள் துன்ப காலத்தில் மக்களுடன் இல்லையென்பதே மக்களின் கோபம். கரூர் சம்பவம் நடந்த போது, உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் நடந்த சாராய பலிக்கு மட்டும் ஏன் செல்லவில்லை என்ற கேள்வி அனைத்து மக்களின் மனதிலும் உள்ளது.  மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக மற்ற நாடுகளில் உள்ளது போல கடுமையான சட்டம் தமிழகத்திலும்  இயற்ற வேண்டுமென பல போராட்டங்கள் நடத்தியும் அதற்கான ஏற்பாடுகள் இதுவரை எட்டப்படவில்லை.

இது மட்டுமல்லாமல், ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டுமென, திமுக கூட்டணி கட்சிகளே பல முறை கோரிக்கை வைத்தும், 2026 இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து சட்டசபையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020 உடன் ஒப்பிடும் போது 2021 முதல் 2026 வரை திமுக அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிறைய அதிகரித்துள்ளது என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், தவெகவின் கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் ஒரு கருத்தை கூறியுள்ளார். முதலில் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். அடிப்படையான சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதை செய்தால் தான் வாக்களிப்பார்களே தவிர, கட்டமைப்பு இருந்தால் மட்டும் யாரும் வாக்களிக்க மாட்டார்கள். திமுக மீது மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று கூறினார். 

உங்கள சேத்துகிட்ட எங்க பவர் போய்டும்.. கரார் காட்டும் விஜய்!! கடும் கோபத்தில் கட்சி தலைவர்கள்!!

0

TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளார். தவெகவிற்கு கிடைத்த ஆதரவை கண்ட கட்சிகள் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்த்திருந்தனர். திமுக, பாஜகவை எதிரி என்று கூறியதால் அவர்களுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் அதிமுக உடன் சேர்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதிமுகவிற்கான கதவும் மூடப்பட்டு விட்டது.

இதனை தொடர்ந்து அதிமுகவிலிருந்து பிரிந்த செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோருடன் சேர்வார் என்று அனைத்து ஊடகங்களும் செய்தியை வெளியிட்ட நிலையில் தற்போது விஜய் அதற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.  ஏனென்றால் விஜய் கட்சி ஆரம்பித்த பொழுதே திராவிட கட்சிகளுக்கு மாற்று என்றும் புதிய அரசியலை கையில் எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இப்படி இருக்க அதிமுகவிலிருந்து பிரிந்த திராவிட வாடை உள்ளவர்களை தவெகவில் சேர்த்தால் விஜய் உருவாக்கி வைத்திக்கும் அரசியல் அடையாளம் காணாமல் போய்விடும் என்று விஜய் நினைப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் நால்வர் அணி விஜய் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். கரூர் சம்பவத்தில் விஜய் மீது பல்வேறு புகார்கள் வைக்கப்பட்ட போதும் இவர்கள் நால்வரும் விஜய்க்கு மறைமுகமாக ஆதரவை தெரிவித்து வந்தனர். இப்படி இருக்கையில் அதனை கண்டு கொள்ளாத விஜய் தன்னுடைய அடுத்த அரசியல் நகர்வை எப்படி திட்டமிட போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டபுள் கேம் ஆடும் வைத்தியலிங்கம்.. முக்கிய தலைவருடன் தொடரும் பேச்சுவார்த்தை!!

0

ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மூன்றாம் நிலை கட்சிகளிடையே நடைபெற்று வருகிறது. இவ்வாறான பரபரப்பான சூழலில் அதிமுகவில் பல்வேறு பிரிவினைகளும், தலைமை போட்டியும் நிலவி வருகிறது. இபிஎஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதிலிருந்தே இந்த பிரிவினைகள் தொடர்கிறது.

இதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்தது தான் நால்வர் அணி. ஏற்கனவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நால்வர் அணி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், வைத்தியலிங்கமும் கூடிய விரைவில் திமுகவில் இணைய இருக்கிறார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் அதில் புதிய திருப்பமாக ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

வைத்தியலிங்கம் இபிஎஸ்யிடம் இன்னுமும் தொடர்பில் தான் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிமுகவில் தான் மீண்டும் இணைய வேண்டுமென்றால் ஓபிஎஸ்யும் சேர்த்து கொள்ள வேண்டுமென்று நிபந்தனை விதித்துள்ளாராம். இதனால் இவர், டபுள் கேம் ஆடுகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக திமுகவில் இணைவது போல அனைவரிடமும் காட்டி விட்டு, கடைசி நேரத்தில் ஓபிஎஸ்யை விட்டு விலகி அதிமுகவில் வைத்தியலிங்கம் இணையும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இளைஞர்களின் ஆதரவை இழந்த உதயநிதி.. இதற்கு காரணம் இந்த கட்சியா!!

0

DMK TVK: புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கும், 70 வருடங்களுக்கு மேலாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போட்டியில் தான் தற்போது தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலே தவெகவிற்க்கான ஆதரவு அதிகளவில் இருந்தது. தவெகவிற்கும் திமுகவின் துணை முதல்வர் உதயநிதிக்கும் உள்ள உள்ள ஒரு ஒற்றுமை இளைஞர்கள் ஆதரவு தான்.

திமுகவிற்கான இளைஞரணியின் பலம் உதயநிதியை நம்பி தான் இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு உதயநிதி இளைஞர்களின் பலத்தை தன் வசம் வைத்துள்ளார். அதனை முறியடிக்கும் விதமாக உருவானது தான் தவெக. விஜய்க்கு மற்ற அனைத்து தரப்பினரின் ஆதரவை விட இளைஞர்களின் ஆதரவு தான் அதிகம். விஜயின் வருகையால், திமுகவின் இளைஞர்களின் ஆதரவு குறைந்துள்ளது என்று கணிக்கப்படுகிறது. அதற்க்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுவது, விஜய்யின் பிரச்சாரத்திற்கு கூடும் கூட்டத்தை உதயநிதி, பல இடங்களில் விமர்சித்தது தான்.

தவெகவில் உள்ள கூட்டம் கொள்கையற்ற கூட்டம் எனவும், வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் கண்காட்சியை பார்க்க கூட தான் கூட்டம் கூடும் என்று கூறியுள்ளார். விஜய்யின் பிரச்சாரத்திற்கு இளைஞர்கள் கூட்டம் தான் அதிகளவில் கூடும். இதன் காரணமாக உதயநிதி கூறியது விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் இளைஞர்களை தான் என்பது தெளிவாகிறது. உதயநிதி விஜய்யின் ஆதரவாளர்களை மறைமுகமாக விமர்சிப்பதும், விஜய்யின் வருகையும் திமுகவின் இளைஞர்களின் ஆதரவை குறைத்துள்ளது என்று பலரும் கூறுகின்றனர். 

விஜய்க்கு எதிராக களமிறங்க போகும் அமமுக.. சுழற்றி அடிக்கும் கட்சிகள்!!

0

TVK AMMK: தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியது தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட கட்சிகளனைத்தும் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்ததன.

விஜய் திமுகவை அரசியல் எதிர் என்று கூறியதால், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் திராவிட கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று அனைவரும் கூறி வந்தனர். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விஜய் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தவெக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனால் இபிஎஸ்யின் எதிர்பார்ப்பு அத்தனையும் ஏமாற்றத்தில் முடிந்தது. இதற்கு பிறகு அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணியாக உருமாறியவர்களுடன் விஜய் கூட்டணி அமைப்பார் என்று யூகிக்கப்பட்டது.

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெக உடனான கூட்டணி குறித்து பல்வேறு இடங்களில் மறைமுகமாக சம்மதம் தெரிவித்தும் விஜய் இதனை பற்றி எதுவும் பேசாமல் உள்ளார். இதனால் டிடிவி தினகரன் விஜய் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்று அமமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன. விஜய் ஏற்கனவே திமுகவையும், பாஜகவையும் எதிரி என்று கூறிய நிலையில், அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாக கூறியதால் அதிமுகவும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது. தற்போது அதில் புதிதாக அமமுகவும் இணைந்துள்ளதாக தெரிகிறது என பலரும் கூறி வருகின்றனர்.

இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தினகரனும் தவெகவின் எதிரி பட்டியலில் இடம் பிடித்தால் விஜய் அதனை எவ்வாறு எதிர்கொள்வார் என்று பலரும் வினவி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில், முதல் முறை அரசியலில் குதித்திருக்கும் விஜய் இத்தனை எதிர்ப்புகளை எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. 

விஜய் முடங்கி கிடந்ததை மறைமுகமாக விமர்சித்த திமுக தலைவர்.. அடித்தளமே இல்லாத கட்சி!!

0

DMK TVK: சமீப காலமாக தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. இவர் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே, தவெகவிற்கான ஆதரவு யாரும் எதிர்ப்பார்த்திராத அளவு அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், தவெகவில் பல்வேறு இளைஞர்கள் தங்களை இணைத்து கொண்டனர். இதனை கண்ட திராவிட கட்சிகள் தவெகவை கண்டு அஞ்சு அஞ்சுகின்றன என்று பலரும் கூறி வந்தனர்.

இதனை அடியோடு சருக்கும் வகையில் அமைந்தது தான் கரூர் சம்பவம். இந்த நிகழ்விற்கு பின் விஜய் சுமார் 38 நாட்கள் முடங்கி இருந்தார். விஜய்யின் இந்த செயலை பலரும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது தவெகவின் எதிர்க்கட்சி துணை முதல்வரான உதயநிதியும் இதனை மறைமுகமாக விமர்சித்துள்ளார். தவெக தலைவர் விஜய் திமுக அரசை நேரடியாக விமர்சித்து வரும் நிலையில், திமுக கட்சியை சேர்ந்தவர்களோ விஜய் பெயரை சொல்வதற்கு கூட யோசிக்கிறார்கள்.

அந்த வகையில் அமைந்த நிகழ்வு தான் உதயநிதியின் பேச்சு. உதயநிதி பேசுகையில், வழக்கம் போல அதிமுகவையும், பாஜகவையும் விமர்சித்து விட்டு, விஜய் கரூர் சம்பவத்திற்கு பின் முடங்கி கிடந்ததை விமர்சித்துள்ளார். கரூர் சம்பவத்தை மையமாக வைத்து பேசிய உதயநிதி, சும்மா தட்டினால் போதும் சிறு காற்று அடித்தால் கூட கீழே விழுந்து விடும். அப்படி பட்ட அடித்தளமே சரியாக இல்லாத கட்சி தான் இது என்று கூறினார். இவரின் இந்த பேச்சு, விஜய்யை மேலும் பலவீனமாக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. 

மீண்டும் நீரில் மூழ்கிய சென்னை — திமுக அரசின் “மழைக்கு தயாரான நகரம்” வாக்குறுதி என்னாச்சு 

0

தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், சென்னை நகரத்தின் அரசு அமைப்புகளின் செயல்பாடு மீண்டும் சரிந்துவிட்டன என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது. “மழைக்கு முழுமையாக தயாரானது” என்று தமிழ்நாடு அரசு பலமுறை அறிவித்திருந்தாலும், நகர் முழுவதும் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சேதமான சாலைகள், நின்று போன போக்குவரத்து, மற்றும் கடும் அவலத்தில் இருக்கும் பொதுமக்கள் — ₹4,000 கோடி செலவிட்டதாக கூறப்படும் புயல் நீர் வடிகால் திட்டங்கள் எவ்வளவு பலனளித்தன என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் “97% வடிகால் பணிகள் முடிந்துவிட்டன, சென்னை மழைக்கு தயாராக உள்ளது” என்று கூறியிருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்த மழையால் மாநகரமே செயலிழந்து போயுள்ளது. இதனால் மீண்டும் திட்டமின்மை, நிர்வாகத் தவறுகள் குறித்து விவாதங்கள் கிளம்பியுள்ளன.

சேதமடைந்த முக்கிய சாலைகள்

அண்ணா சாலை, ஆற்காடு சாலை, சர்தார் பட்டேல் சாலை, பழைய மாமல்லபுரம் சாலை (OMR) உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் பெரிய குழிகளால் சேதமடைந்துள்ளன.

சாதாரணமாக 30 நிமிடத்தில் சென்று சேரும் கிண்டி–க்ரீம்ஸ் ரோடு பயணம் இப்போது இரண்டு மணி நேரம் ஆகிறது என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். “இது குழி இல்ல, குழியிலேயே ஒரு பள்ளம்,” என ஒருவர் கூறினார். இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இது உயிருக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது.

கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள்

  • OMR: மூன்று கிலோமீட்டர் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குழிகள் பதிவாகியுள்ளன.

  • தாம்பரம்–பல்லாவரம்: சாலையின் மேற்பரப்பு கரைந்ததால் இருசக்கர விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.

  • அம்பத்தூர், மதவரம்: பேருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன.

  • கோடம்பாக்கம், வடபழனி, டி.நகர்: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளும் மழையால் சேதமடைந்துள்ளன.

புதியதாக அமைக்கப்பட்ட சாலைகளே சில மாதங்களிலேயே கரைந்திருப்பது, அரசின் பணித் தரம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

போலீஸார் குழி நிரப்பும் நிலை

மிகவும் அபூர்வமாக, போக்குவரத்து போலீஸார் சாலைக் குழிகளை மணல் மற்றும் சிறு கற்களால் நிரப்பி வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.“சாலைகளை சரி செய்யவேண்டியது போலீஸா?” என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மனித & சுற்றுச்சூழல் பாதிப்புகள்

மழையால் பாதிக்கப்பட்டது மனிதர்களே அல்ல. கடந்த மாதம் வடசென்னையில் ஒரு 2 வயது குழந்தை நீர்குழியில் விழுந்து உயிரிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது.மேலும் மெரினா கடற்கரையில் காணப்பட்ட நச்சு நுரை, மழைநீர் மற்றும் கழிவு நீர் கலந்து உருவானது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம்

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளன.

பா.ஜ.க. மாநில பேச்சாளர் வினோஜ் செல்வம் கூறியுள்ளதாவது:

“எங்களுக்கு சிங்கப்பூர் மாதிரி நகரம் வேண்டாம்;
சாலைகளில் ஓட்டுவதற்கு பாதுகாப்பான அடிப்படை வசதிகள் மட்டும் போதும்.”

அ.தி.மு.க. தலைவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாவது:

  • 97% வடிகால் பணிகள் முடிந்தது என்றால் ஏன் இன்னும் சாலைகள் நீரில்?

  • புதிதாக அமைக்கப்பட்ட ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலைகள் ஏன் சில மாதங்களில் சிதறின?

  • அவசர மீட்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் எங்கே?

₹4,000 கோடி செலவின் மர்மம்

திமுக ஆட்சியில் தொடர்ந்து நான்காவது மழைக்காலம் இது — ஆனால் நிலைமை மாறவில்லை. நகர் வடிவமைப்பு நிபுணர்கள் இதை “இயற்கை பேரழிவு அல்ல, நிர்வாகக் குறைபாடு” என குறிப்பிடுகின்றனர்.

மேலும், சென்னை மாநகராட்சி சாலை தோண்டுதல் பணிகளை செப்டம்பர் 15க்கு பிறகும் அக்டோபர் 15 வரை அனுமதித்தது மழை நீர் தேக்கம் அதிகரிக்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இப்போது அவசர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டாலும், இது மக்கள் கோபத்துக்குப் பிறகான நடவடிக்கை, முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்றல்ல என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திரும்பத் திரும்பும் அதே காட்சி

ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போதும் — அதே கதையே.சென்னை இன்னும் “சிங்கார சென்னை” ஆகவில்லை; மாறாக, நீரில் மூழ்கும் சாலைகள், உடைந்த வடிகால்கள், நின்று போன போக்குவரத்து என ₹4,000 கோடியின் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தண்ணீரில் கரைந்துவிட்டன.

மழை வந்தால் சென்னை நின்றுவிடும் என பேசிக்கொள்வது இன்றும் உண்மையாகவே தொடர்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் மாணவர் தற்கொலை முயற்சி – முதல்வரின் சர்ச்சை பேச்சு அதிர்ச்சி

0

உத்தரப் பிரதேசத்தில் மாணவர் தற்கொலை முயற்சி – பள்ளி முதல்வரின் சர்ச்சை பேச்சு அதிர்ச்சி

முதானா (உத்தரப் பிரதேசம்):
24 வயதான மாணவர் உஜ்ஜுவல் ராணா, ₹7,000 கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் தேர்வில் அமர அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி கல்லூரிக்குள் தன்னைத் தானே தீயிட்டு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டு:
இந்த சம்பவத்திற்கு முன், மாணவர் ஒரு கையெழுத்து குறிப்பு மற்றும் வீடியோ பதிவு விட்டுச் சென்றுள்ளார். அதில் கல்லூரி முதல்வர் பிரதீப் குமார் தன்னை உடல்ரீதியாக தாக்கி, வார்த்தை அவமதிப்பு செய்ததாகக் கூறியுள்ளார். மேலும், தன்னிடம் நீதி கேட்டு சென்றபோது போலீஸார் கூட கல்லூரி நிர்வாகத்தையே ஆதரித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவரின் குறிப்பில், மூன்று போலீஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன.

முதல்வரின் சர்ச்சைக்குரிய விளக்கம்

கல்லூரி முதல்வர் பிரதீப் குமார் சிங், ஊடகங்களிடம் கூறியதாவது:

“அந்த மாணவர் ₹1,750 மட்டும் கட்டணம் செலுத்தியுள்ளார். ஒவ்வொரு செமஸ்டருக்கும் பாதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவர் அடிக்கடி வகுப்புகளுக்கும் வருவதில்லை. ₹25,000 மதிப்புள்ள மொபைல் போன் வைத்திருக்கிறார். ₹1 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளில் தினமும் கல்லூரி வருகிறார். இப்படி இருக்கும் ஒருவர் ஏழை அல்லது தலித் மாணவர் என எப்படி கூறலாம்? உண்மையில் கட்ட முடியாத நிலை என்றால் அரசு புலமைப்பரிசில், உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. ஏழை என்றால் ஏன் அவற்றுக்கு விண்ணப்பிக்கவில்லை?”

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

சம்பவம் மற்றும் எதிர்வினைகள்

சாட்சி கூறியதாவது — மாணவர் தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தபோது, ஆசிரியர்கள் உடனடியாக தலையிடவில்லை; சக மாணவர்கள்தான் ஓடி வந்து தீ அணைத்தனர்.

உஜ்ஜுவல் ராணா கடுமையான தீக்காயங்களுடன் முதானா மருத்துவ மையத்திலிருந்து மீரட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் மற்றும் வழக்கு பதிவு

மாணவர் சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் கடும் போராட்டத்துக்கு பின்,
போலீசார் முதல்வர் மீது BNS பிரிவு 351(3) மற்றும் 352 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாணவர் குறிப்பில் பெயர் குறிப்பிடப்பட்ட மூன்று போலீஸ் அதிகாரிகளின் பங்களிப்பும் விசாரணையில் உள்ளது.

போராட்டக்காரர்கள் நீதித்துறை விசாரணை கோரி கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் மாணவர் மீதான துன்புறுத்தலையும் எதிர்த்து முழக்கமிட்டனர்.

கல்வி அமைப்பின் மீதான கேள்விகள்

இந்தச் சம்பவம், உத்தரப் பிரதேசம் முழுவதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தம் மற்றும் அமைப்புசார்ந்த அவமதிப்பு குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

மாணவர் இயக்கங்கள் கல்வி நிறுவனங்களில்

நிதி வெளிப்படைத்தன்மை,

மாணவர் உரிமை பாதுகாப்பு,

உளவியல் ஆலோசனை வசதி போன்றவற்றை
அவசியமாக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஒரு மாணவனின் துயரக் கதையாக மட்டுமல்ல —
கல்வி அமைப்பில் உள்ள பிழைகளை வெளிக்கொணரும் கடுமையான எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.