Home Blog Page 61

வைத்தியலிங்கத்திற்கு அதிகரிக்கும் டிமாண்ட்.. முன்னிலை பெறுவது இந்த கட்சியா!!

0

ADMK DMK: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை தங்களது வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக, இந்த முறை தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, விஜய்யின் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனைகள் போன்றவையாகும். விஜய்யின் வருகை அதிகளவில் பேசப்பட்டு வரும் நிலையில் அதனை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது அதிமுகவின் பிளவு.

ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் இபிஎஸ்கும், ஓபிஎஸ் இடையே சச்சரவு ஏற்பட்டு இவர்கள் இரு அணியாக பிரிந்த போது, ஓபிஎஸ் பக்கம் ஆதரவு தெரிவித்து நின்றவர் வைத்தியலிங்கம். இவர் தற்போது வரை ஓபிஎஸ் உடன் இருந்து வரும் நிலையில், கூடிய விரைவில் திமுகவில் இணைய போவதாக பலரும் கூறி வருகின்றனர். இதனை அறிந்த இபிஎஸ், இவரை அதிமுகவில் இணைப்பதற்கான வேலைப்பாடுகளை செய்து வருகிறாராம். மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா அடங்கிய நால்வர் அணியும் இவர் திமுகவில் இணையாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறுகின்றனர். ஆனால் திமுக இவர்களை விட இரு மடங்கு வேகமாக வைத்தியலிங்கத்தை திமுகவில் இணைக்க பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்து வருகிறது. 

அதிலும் முக்கியமாக, திமுகவின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வைத்தியலிங்கத்திற்கு நேரடி அழைப்பு விடுத்ததாகவும் தகவல் பரவி வருகிறது. மேலும் அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இருந்த மனோஜ் பாண்டியன் ஏற்கனவே திமுகவில் இணைந்தது நால்வர் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் வைத்தியலிங்கமும் திமுகவில் இணைந்து விட கூடாது என்பதில் இவர்கள் நால்வரும் கவனமாக உள்ளனர்.  அதிமுகவுடன் ஏற்பட்ட சச்சரவு காரணமாகவும், ஓபிஎஸ் செயல்பாடுகள் பிடிக்காததாலும் வைத்தியலிங்கம் திமுகவில் இணையும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஈரோட்டில் ஓங்கும் திமுக கை.. இபிஎஸ்க்கு ஷாக் மேல ஷாக்!! ஹேப்பி மோடில் ஸ்டாலின்!!

0

AIADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருக்கும் நிலையில், எப்போதும் போல அதிமுகவும், திமுகவும் தேர்தல் களத்தில் இறங்கி வெற்றி பெறும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, அதிமுகவில் பல பிரிவுகள் உருவாகி, கட்சியின் மூத்த தலைவர்களாக அறியப்பட்ட வருபவர்கள் ஒவ்வொருவராக இபிஎஸ்யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

இது மேலும் சூடுபிடித்து, எம்ஜிஆர் காலம் முதல் தற்போது வரை அதிமுகவின் முகமாக அறியப்பட்ட மூத்த அமைச்சர் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தது மட்டுமல்லாமல் அவரை கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார். செங்கோட்டையன் ஈரோட்டில் தனக்கென தனி செல்வாக்கை பெற்றிக்கும் நபர். இவரின் பதவிகள் பறிக்கப்பட்ட போதே அப்பகுதி மக்கள் கொந்தளித்தனர். இந்நிலையில், அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டது அவர்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமோ, அந்த அளவிற்கு திமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது. ஏனென்றால் திமுக சார்பாக ஈரோடு மாவட்டத்தில் முத்துசாமி களமிறங்கி உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. இவர் முதலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு ஈரோடு தொகுதியில் பல முறை வெற்றி பெற்றுள்ளார்.

பின்னர் 2010 யில் திமுகவில் இணைந்த இவர், 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றார். ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு அடுத்ததாக மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரே நபர் இவர் தான் என்பதால் செங்கோட்டையனின் நீக்கத்தை பயன்படுத்தி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக திட்டம் தீட்டி வருகிறது. இதற்கான ஆயத்த பணிகளை முத்துசாமி முழு வீச்சீல் மேற்கொண்டு வருகிறார்.

கவுண்டர் முதல் அருந்ததியினர் வரை.. ஸ்டாலின் போட்ட பெரிய பிளான்!! உதவும் செந்தில் பாலாஜி!!

0

DMK: கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாத திமுக, இந்த முறை அந்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என முடிவு செய்துள்ளது. 2021-ல் அதிமுக ஆதிக்கம் இருந்த கோவை, தற்போது திமுகவின் கவனப் புள்ளியாக மாறியுள்ளது. இதனால், கோவையை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக முன் வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் முதல் கட்ட பணிகளை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசியலுக்கு திரும்பி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் உள்ள குழு தொடங்கியுள்ளது.

தற்போது கோவையில் கொங்கு வெள்ளாள கவுண்டர், நாயுடு மற்றும் அருந்ததியினர் போன்ற முக்கிய சமூகங்களின் வாக்குகளை உறுதி செய்வதில் அவர் தீவிரமாக உள்ளார். சமூக பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து, திமுக மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணமான வேட்பாளர் தேர்வு போன்ற பல்வேறு அம்சங்களை பரிசீலித்து, அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் மக்கள் நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு முயற்சிகள், மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டங்கள் போன்றவை திமுக அரசால்  வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த தேர்தலில் கோவை மாவட்டம் திமுகவின் வசம்  மாறுமா என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.

ஒரத்தநாட்டில் ஓங்கும் திமுக கை.. கொண்டாட்டத்தில் ஸ்டாலின்!!

0

DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், திராவிட கட்சிகள் வெற்றி பெறுவதற்கான கணக்குகளையும், மூன்றாம் நிலை கட்சிகளும், சிறிய கட்சிகளும் எந்த திராவிட கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் தீவிர ஆலோசனையில் உள்ளது. 2021 முதல் 2026  வரை திமுக ஆட்சியில் மக்களுக்கு நிறைய அதிருப்திகள் வெளிப்பட்டிருகின்றன. அதனை சரி செய்து 7 வது முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென திமுக போராடி வரும் நிலையில், இபிஎஸ் பதவி ஏற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. இந்த இரு கட்சிகளுக்கு இடையேயான போட்டி எப்போதும் நிலவி வரும் ஒன்று.

தற்போது புதிதாக, தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சி உதயமாகி திமுகவை தோற்கடித்து தமிழகத்தில் வலுவான கட்சியாக உருமாற வேண்டுமென பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் அதிமுக உரிமை மீட்புக் குழு ஒன்றை ஆரம்பித்தார். இந்த குழுவில் இவருக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன், பெங்களூரு புகழேந்தி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலரும் இருந்தனர். இவர்களில் தற்போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருப்பது வைத்தியலிங்கம் மட்டும் தான். மனோஜ் பாண்டியன் இரு தினங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்து விட்டார். இவரை தொடர்ந்து வைத்தியலிங்கமும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதற்கு காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால்  2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானவர் வைத்தியலிங்கம். தற்போது இந்த பகுதியில், அதிமுகவில் பல்வேறு அணிகள் உருவாகி உள்ளதால் இவரின் மவுசு குறைந்துள்ளது என்பதை உணர்ந்த அவர் திமுக உடன் சேர முடிவெடுத்துள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை திமுக வசம் கொண்டு வர வேண்டுமென்று, ஸ்டாலின் திட்டம் தீட்டி கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவின் முக்கிய புள்ளி ஒரத்தநாடு தொகுதியுடன் வந்து இணைய போகும் செய்தி திமுகவை கொண்ட்டாடத்தில் ஆழ்த்தியுள்ளது.

நால்வர் அணியை தட்டி தூக்கிய கட்சி இது தானா.. உறுதியான கூட்டணி!! ட்விஸ்ட் வைத்து பேசிய தினகரன்!!

0

TVK AMMK: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தங்கள் வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. மக்களை சந்திக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என வலியுறுத்து வரும் வேளையில், அதிமுகவில் அதனை விட இரண்டு மடங்கு வேகமாக கட்சியே பல அணிகளாக  பிரிந்து இருக்கிறது. அதிலும் அதிமுகவின் முகமாக அறியப்பட்ட செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது பேசு பொருளானது. இதனை தொடர்ந்து, செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் சேர்ந்து பயணித்ததால் அவர் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அரங்கேறும் முன்பே டிடிவி தினகரன் ஒரு மாபெரும் கூட்டணியில் நாங்கள் இணைவோம் அது வெற்றிக் கூட்டணியாக மாறும் என்று தொடர்ந்து கூறி வந்தார். அது  விஜய் தலைமையிலான கூட்டணியா என்று சந்தேகம் எழுந்த போது அதனை பொறுத்திருந்து பார்க்குமாறு தினகரன் தெரிவித்தார். இது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தினகரன் கூறியது விஜய் உடனான கூட்டணி தான் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தற்போதைய நிலைமையை பார்த்தால் திமுகவிற்கு-தவெகவிற்கும் தான் போட்டி என்பது போல உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், யாரும் எதிர்பார்த்திராத கூட்டணி அமையும், தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் எந்த நேரத்தில் எப்படி வேண்டுமானலும் மாறலாம் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்து விஜய் உடனான கூட்டணியை மறைமுகமாக கூறியது போல உள்ளது என அனைவரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் விஜய் அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பதை பொதுக்குழு கூட்டத்தில் உறுதிப்படுத்திய பிறகு இத்தனை நாட்கள் கழித்து தினகரன் இந்த கருத்தை கூறியதால் பலருக்கும் இது விஜய் உடனான கூட்டணியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

நீங்களும் எம்ஜிஆர் போல மாறிடுங்க.. விஜய்க்கு அதிமுக அமைச்சர் அட்வைஸ்!!

0

ADMK TVK: தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவு பரபரப்பாக இந்த முறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியது தான். இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானதிலிருந்தே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மேலும், தவெகவிற்கும்-திமுகவிற்கும் தான் போட்டி என்று கூறியது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் திராவிட கட்சியான அதிமுகவுடன்  கூட்டணி அமைப்பார் என்று அனைவரும் எதிர் பார்த்தனர். அந்த எதிர் பார்ப்புக்கு ஏற்றவாறு அதிமுகவின் நகர்வும் இருந்தது. இதனை உடைத்தெறியும் விதமாக நேற்று நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைமையில் கூட்டணி, கூட்டணி முடிவு விஜய் கையில் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விஜய் அதிமுக கூட்டணிக்கு சிகப்பு கோடி காட்டியதால் அதிமுக தலைமை தொடங்கி தொண்டன் வரை ஏமாற்றத்தில் இருந்தனர்.

மேலும் அதிமுக அமைச்சர்களிடம் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது கூட அவர்கள் அதற்கு பதிலளிக்க மறுத்தனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து பேசியுள்ளார். விஜய் குறித்து கருத்து தெரிவித்த அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஜய் காணாமல் போய் விடுவார். அவரால் படம் கூட நடிக்க முடியாது. தியேட்டர்கள் எல்லாம் திமுக வசம் சென்று விடும் என்றும், எம்ஜிஆர் முடிவெடுத்து செயல்பட்டதை போல விஜய்யும் செயல்பட வேண்டுமென கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக கூட்டணிக்கு நோ சொல்லிய விஜய்யை மீண்டும் மீண்டும் கூட்டணிக்கு இழுக்க அதிமுக முயற்சி செய்வதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. 

இபிஎஸ் லிஸ்ட்லயே இல்ல.. விஜய் போட்ட வெடி!! எண்ணெயை ஊற்றிய டிடிவி தினகரன்!!

0

ADMK AMMK TVK: சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக, திமுக, தவெக, பாமக, தேமுதிக என கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி குறித்த வியூகங்களும் வகுக்கப்பட்டு வரும் நிலையில், தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி ஆளுங்கட்சி தொடங்கி சிறிய கட்சிகள் வரை பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று விஜய் தலைமையில் நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும், கூட்டணி குறித்த முழு அதிகாரமும் விஜய்யிடம் உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தவெக திமுகவுக்கு இடையேயான போட்டி இனிமேல் தான் தீவிரமடைய போகிறது என்று விஜய் கூறினார். இதற்கு முன் நடந்த தவெக பிரச்சாரம், மாநாடு என அனைத்திலும் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறியது அதிமுகவிற்கு சாதகமாக அமைந்தாலும், நேற்று கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு விஜய் அதிமுகவை கணக்கில் வைக்கவே இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த அறிவிப்பு அதிமுக தலைமைக்கு பேரிடியாக இருந்தது. இந்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரது கருத்தை கூறி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், நீங்கள் கணிக்க முடியாத அளவுக்கு வரும்  தேர்தலில் கூட்டணி உருவாகும். தமிழ் நாட்டில் எந்த கூட்டணி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எனக்கு தெரிந்த வரை திமுக கூட்டணிக்கும், தவெக தலைமையில் அமையும் கூட்டணிக்கும் தான் போட்டி நிலவும் என்பது என்னுடைய கருத்து என்று கூறி இருக்கிறார். விஜய் அதிமுக கூட்டணிக்கு நோ சொல்லி விட்டார் என்று ஏமாற்றத்தில் இருக்கும் இபிஎஸ்க்கு இது மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலும் கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவின் குரலாக ஒலித்த இபிஎஸ்யை விஜய் லிஸ்டில் வைக்கவே இல்லை என்பதையும் டிடிவி தினகரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

முதல்வர் எங்களை ஏமாற்றி விட்டார்.. மனம் திறந்த திமுக கூட்டணி கட்சி!!

0

DMK CONGRESS: 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மக்களிடம் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால் அதில் இதுவரை 66  வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாக திமுகவின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட மதிப்பீட்டின் படி, திமுக அரசு இதுவரை 66 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள 373 வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றாதவையாகவே உள்ளன. முக்கியமாக நிறைவேறாத வாக்குறுதிகளில், மாணவர்களுக்கு நீட் தேர்வு நீக்கம், ‘Right to Services Act’ சட்டம் அமல்படுத்தல், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் நிலைமையை சீரமைத்தல் போன்றவை அடங்கும்.

இவை அனைத்தும் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் உறுதியளித்த முக்கிய வாக்குறுதிகளாகும். மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல்கள், நிதி பற்றாக்குறை, மற்றும் நிர்வாக தாமதங்கள் ஆகியவை இந்த வாக்குறுதிகள் பலவும் நிறைவேறாததற்கு காரணமாக இருந்ததாக திமுக தலைமை கூறி வருகிறது. இதேவேளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று வலியுறுத்தி வருகிறது. எனினும், எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்து, திமுக மக்கள் நம்பிக்கையை புறக்கணித்து விட்டதாக குற்றஞ்சாட்டுகின்றன.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி திமுக மீது இது குறித்து கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளது. தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான  பழனி நாடார் செய்தியாளர் சந்திப்பில், இரட்டை குளம் கால்வாய் திட்டம் 50 ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வரும் நிலையில், அதனை நிறைவேற்றுவதாக திமுக அரசு தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்திருந்து. ஆனால் இது தொடர்பாக எவ்வளவு முயற்சி செய்தும் எந்த பயனும் இல்லை.

இதன் காரணமாக தென்காசியில் எங்கும் என்னால் செல்ல முடியவில்லை, நீயெல்லாம் ஒரு எம்.எல்.ஏ வா என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர். இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் நானே என் சொந்த செலவில் இதனை நிறைவேற்றி கொள்கிறேன் என்று கூறினார். மேலும் முதல்வர் வாக்குறுதிகளை அளித்துவிட்டு எங்களை ஏமாற்றுவது மிகவும் வேதனை அளிக்கிறது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். 

விஜய் சொல்றத கேட்டு தான் ஆகணும்.. அப்செட்டில் இபிஎஸ்!! குஷியில் விஜய்!!

0

ADMK TVK: தமிழக அரசியலில் புதிய புயலை கிழப்பியுள்ள நிகழ்வு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இதுவரை அதிமுக-திமுக என்று இருந்த தேர்தல் களம் தற்போது தவெக என்ற பெயரை உச்சரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்தது. கட்சி ஆரம்பித்த, தனது முதல் மாநாட்டிலேயே தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்று கூறிய விஜய் இப்போது வரை அந்த முடிவில் தெளிவாக உள்ளார்.

மேலும் கொள்கை எதிரி பாஜக என்றும் கூறியிருந்தார். இது மட்டுமல்லாமல், தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் தெளிவுப்படுத்தி இருந்தார். இதன் தொடர்ச்சியாக கரூரில் நடந்த சம்பவம் விஜய்யின் நம்பிக்கையை ஒட்டு மொத்தமாக முடக்கும் வகையில் அமைந்திருந்தது. இதனை பயன்படுத்த நினைத்த அதிமுக விஜய்யை கூட்டணியில் இழுத்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. இதற்காக சட்டசபையில் விஜய்யின் குரலாக ஒலித்தது, செய்தியாளர்களிடம் தவெகவிற்கு ஆதரவாக பேசியது போன்ற பல்வேறு முயற்சிகளை செய்தது.

இதன் காரணமாக விஜய் முதல்வர் வேட்பாளர் பதவியிலிருந்து இறங்கி, இபிஎஸ் தலைமையிலான கூட்டணிக்கு சம்மதம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதனை முறியடிக்கும் விதமாக நேற்று நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 12  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும், விஜய் தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரமும் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனால் இபிஎஸ் மிகவும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. இந்த தேர்தலில் அதிமுக எதிர்கட்சி அந்தஸ்த்தையாவது பெற வேண்டுமென்றால் அதற்கு விஜய் கூட்டணி அவசியம். இதனை உணர்ந்த இபிஎஸ், விஜய் நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்து விட்டார் என்ற தகவல் பரவி வருகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், விஜய் தலைமையில் அதிமுக கூட்டணி அமைத்து அதில், முதல்வர் வேட்பாளராக விஜய் நின்றால் அதிமுகவுக்கு மிக பெரிய அவமானத்தை தேடி தரும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 

பாமக பிரிவுக்கு இவர்கள் தான் காரணம்.. அன்புமணி பகீர்!!

0

PMK: அனைத்து கட்சிகளும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு செயல்படும் வேலையில் பாமகவில் மட்டும் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்குவது இது போன்ற செயல்பாடுகள் அரங்கேறிவிட்டன. அதுமட்டுமல்லாமல், பாமகவின் பிரிவுக்கு காரணமாக இருந்த செயல்பாடுகளை ராமதாஸ் மீண்டும் செய்ய துவங்கியுள்ளார். அந்த வகையில், குடும்ப அரசியலை முன்னிறுத்தும் விதமாக, தனது மூத்த மகள் காந்திமதிக்கு செயல் தலைவர் பதவி வழங்கியது பேசு பொருளானது.

இந்நிலையில் பென்னாகரம் பகுதியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி, ராமதாசிடமிருந்து என்னை பிரித்து வைத்துள்ளனர். ராமதாசை சுற்றி இருக்கும் துரோகிகள் விலகும் வரை நான் சேர மாட்டேன் என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும் எம்.எல்.ஏ அருள் இவர்கள் இருவரை தான் அன்புமணி துரோகிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று அன்புமணியின்  ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால் பாமகவின் பிரிவுக்கு காராணமாக இருந்த இளைஞர் அணி தலைவர் பதவி முதலில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இதில் அன்புமணிக்கு உடன் பாடில்லை என்பதை அறிந்த தமிழ்குமரன் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதன் பிறகு இந்த பதவி ராமதாசின் மூத்த மகளின் மகனான முகுந்தனுக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக பாமகவின் பிளவு மேடையிலேயே எதிரொலித்தது. இதனை தொடர்ந்து இந்த பதவி மீண்டும் தமிழ் குமரனுக்கே வழங்கப்பட்டது.

இவ்வாறு மீண்டும் மீண்டும் இந்த பதவி தமிழ் குமரன் கைக்கே சென்றடைவதை பார்த்தால் இது ஜி.கே. மணியின் சதியாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்தது. இவர் இவ்வாறு செய்வது அன்புமணியை மீண்டும் கட்சிக்குள் வர விடாமல் தடுப்பதர்கான செயலாகவே பார்க்கப்பட்டது. மேலும் அண்மையில் பாமக எம்.எல்.ஏ அருள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இதற்கு காரணம் அன்புமணி தான் என்று அவர் கூறியிருந்தார். இதனை வைத்து பார்த்தால் அன்புமணி கூறிய துரோகிகள் இவர்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.