Home Blog Page 62

இபிஎஸ்யை நம்பி கட்சி செயல்படவில்லை.. அதிமுக அமைச்சர் பர பர பேட்டி!!

0

ADMK: தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை எப்போதும் இல்லாத அளவிற்கு, மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டுமென்றும், 6 வது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் திமுக தொடர்ந்து இந்த முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென்றும், புதிதாக உதயமாகியுள்ள, தவெக திமுகவை எதிர்த்து புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டுமென்றும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இவ்வாறு கட்சிகளனைத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில், அதிமுகவில் தலைமை போட்டி மற்றும் பல்வேறு அணிகள் உருவாகி வருகின்றன. மேலும் அதிமுக தலைமையில் வெற்றிடம் நிலவுவதாக அதிமுக உள்வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து வெளிப்படையாக பேசிய அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக எப்போதும் தொண்டர்களை நம்பி செயல்படும் இயக்கம், தலைவனை நம்பி செயல்படாது. எந்த தலைவன் வந்தாலும், போனாலும் அதிமுக நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்று கூறியிருக்கிறார்.

இவரின் இந்த கருத்து அதிமுகவில் தலைமை வெற்றிடம் நிலவுவதை தெளிவுபடுத்தியுள்ளது. சி.வி.சண்முகம் ஏற்கனவே ஒரு முறை பெண்கள் குறித்து இழிவாக பேசியதற்காக பல்வேறு தரப்பினரின் கண்டத்திற்கும் ஆளானார். இதனை தொடர்ந்து தற்போது அதிமுக பொதுச் செயலாளரின் தலைமை சரியில்லை என்பது போன்று இருக்கும் அவரது கூற்று அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், இபிஎஸ்யின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அதற்கு ஆதரவு தெரிவிக்காமல், இபிஎஸ்க்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதை பலரும் கண்டித்து வருகின்றனர். 

திமுகவில் இணையும் முன்னாள் முதல்வர்!! குஷியில் ஸ்டாலின்!!

0

DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், பல்வேறு முக்கிய அமைச்சர்களும், கட்சியின் தொண்டர்களும் கட்சி மாறி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாக அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் பக்கம் நின்ற மனோஜ் பாண்டியன் அதிமுகவின் அரசியல் எதிரியான திமுகவில் இணைந்துள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது எல்லாம் நன்மைக்கே என்று பதிலளித்தார்.

இவரின் இந்த பதில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது, ஓபிஎஸ்யின் ஒப்புதலுடன் தான் என்பது தெளிவாகியுள்ளது. மேலும் இதனை வேறு கோணத்தில் இருந்து பார்த்தால் ஓபிஎஸ்யும் கூடிய விரைவில் திமுகவில் இணைவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் அவரது மகனுடன் சென்று மூன்று முறை சந்தித்துள்ளார். மேலும் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், திமுக வெற்றி பெறும் என்றும் உறுதியளித்தார். இது மட்டுமல்லாமல், அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருப்பதால், இது திமுகவிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையை பயன்ப்படுத்தி திமுக ஜெயிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார். இதனை தொடர்ந்து நடந்த தேவர் ஜெயந்தியில், டிடிவி தினகரன் திமுகவை வீழ்த்துவோம் என்று கூறிய போது கூட ஓபிஎஸ் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சமீப காலமாகவே திமுகவிற்கு சாதகமாக பேசாவிட்டாலும், அதற்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார். இதன் காரணமாக கூடிய விரைவில் ஓபிஎஸ்யும் திமுக பக்கம் சாயும் வாய்ப்பு உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.

விஜய்யின் முடிவு.. பாஜகவிற்கு மறைமுக நன்மை!! கலக்கத்தில் திமுக தலைமை!!

0

TVK BJP DMK: தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அவர் தனியாகவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்த முடிவு, திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கும் சூழலை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. முந்தைய தேர்தல்களில், திமுகவுக்கு எதிரான வாக்குகள் பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கு சென்றன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அதிமுகவின் உட்கட்சி பிளவு, ஓபிஎஸ், இபிஎஸ் பிரிவு, டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் போன்ற தலைவர்களின் தனி அணிகள் ஆகியவை எதிர்ப்பு வாக்குகளை பலவீனப்படுத்தி ள்ளன. இந்நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேரடியாக தேர்தலில் இறங்கினால், அந்த வாக்குகளை அவரும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், இது பாஜகவுக்கு மறைமுகமாக நன்மை தரக்கூடியதாக கருதப்படுகிறது.

காரணம், திமுக எதிர்ப்பு வாக்குகள் பல திசைகளில் பிளந்தால், பாஜக தனது வாக்கு வங்கியை உறுதிப்படுத்தி சில முக்கிய தொகுதிகளில் முன்னிலை பெறலாம் என்ற நம்பிக்கை அக்கட்சியில் நிலவுகிறது. மேலும், பாஜக ஏற்கனவே மூன்றாவது சக்தி என தன்னை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் விஜய் தனித்து நிற்பது அந்த அரசியல் யோசனைக்கு இணங்கும் வகையில் இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். அதனால், விஜய்யின் தனித்துப் போட்டியிடும் தீர்மானம், திமுக, அதிமுகவுக்கு சவாலாகவும், பாஜகவிற்கு மறைமுக ஆதரவாகவும் மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இபிஎஸ்க்கு எதிராக திரும்பும் 2 முக்கிய அமைச்சர்கள்.. அதிமுகவில் தொடரும் பிளவு!!

0

ADMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளது. ஆனால் அதிமுகவில் தலைமை போட்டியே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இவர்கள் மூவரையும் கட்சியிலிருந்து நீக்கினார். இவர்கள் கட்சியிலிருந்தால் தலைமை பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தினால் இபிஎஸ் இந்த செயலை செய்துள்ளார் என்று பலரும் கூறி வந்தனர்.

இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக கட்சியின் மூத்த அமைச்சராக அறியப்பட்ட செங்கோட்டையனின் பதவிகளை பறித்தது மட்டுமல்லாமல் அவரை கட்சியிலிருந்து அடியோடு நீக்கிவிட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிமுகவிலுள்ள முக்கிய அமைச்சர்கள் சிலர் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். கட்சியின் விதிப்படி, அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுபவர்கள் மற்றும் கட்சியிலிருந்து நீக்க பட்டவர்களுடன் தற்போது கட்சியிலிருப்பவர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது.

செங்கோட்டையனின் நீக்கத்தின் போதும் இது தெளிவாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் செங்கோட்டையனுடன் தொடர்பில் உள்ள அமைச்சர்கள் யார் என்று வினவும் போது, சி.வி. சண்முகம், அன்பழகன், ஜெயக்குமார் என்பது தெரியவந்துள்ளது. ஏனென்றால் அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென்று கோரிக்கை வைக்க இபிஎஸ் வீட்டிற்கு செங்கோட்டையன் சென்ற போது, சி.வி.சண்முகம், அன்பழகன், உடனிருந்தனர். மேலும் ஜெயகுமார் அதிமுக-பாஜக கூட்டணியில் விருப்பமில்லாமல் இருப்பதால், இவரும் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். 

முதல் தனித்த தேர்தலிலேயே எதிர்க்கட்சி.. புதிய கட்சியின் அரசியல் பிரவேசம்!!

0

TVK: தமிழக அரசியலில் தற்போது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி  தனது முதல் சட்டமன்ற தேர்தலிலேயே எதிர்க் கட்சியாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுவதும் விஜய்யின் கூட்டங்களில் காணப்படும் மக்கள் திரள், அவரின் அரசியல் பிரச்சாரம் எதிர்பார்த்ததை விட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய், நேற்று தவெக சார்பில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தவெக தனித்து களம் காண போகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். விஜய் தனித்து நிற்பது திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் என சிலர் கூறினாலும், பல்வேறு கருத்துக்கணிப்புகள் இதை மாறுபட்ட கோணத்தில் காட்டுகின்றன. அதாவது, மக்கள் விருப்பம் தவெகவை ஒரு மாற்று அரசியல் கட்சியாக பார்க்கத் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. இதுவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்த சூழலில், விஜய்யின் புதிய அரசியல் முயற்சி அந்த இரட்டையாட்சிக்கும் சவாலாக மாறியுள்ளது.

அதிமுகவும் பாஜகவும் இதனை மிகுந்த கவனத்துடன் நோக்கி வருகின்றன. குறிப்பாக, பாஜக-திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க தவெக ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இதேவேளை, திமுகவின் கூட்டணி கட்சிகள், விஜய்யின் வேகமான எழுச்சியால் தேர்தல் முடிவுகளில் ஏற்படும் விளைவுகளை மதிப்பீடு செய்து வருகின்றன. மொத்தத்தில், முதல் தனித்துப் போட்டியிலேயே எதிர்க்கட்சிப் பட்டியலில் தவெகவின் பெயர் சேர வாய்ப்புள்ளது என்ற கருத்து நிலவுகிறது. இந்த அரசியல் திருப்பம், தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் நெரிசல் விபத்து — திமுக ஆட்சியில் நிர்வாகத் தோல்விக்கான ஆதாரம்

0

கரூர் நெரிசல் விபத்து — திமுக ஆட்சியில் நிர்வாகத் தோல்விக்கான ஆதாரம்

கரூரில் நடிகர் விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட பரிதாபகரமான நெரிசல் விபத்து, சமீபத்திய தமிழக அரசியல் வரலாற்றில் மிகக் கறுப்பு நாளாகக் கருதப்படுகிறது.
சரியான திட்டமிடலுடன் நடைபெற வேண்டிய பொதுக் கூட்டம் அமைப்புச் சீர்கேடு மற்றும் நிர்வாக அலட்சியம் காரணமாக பெரும் துயரமாக மாறியது.இந்த நிகழ்வு மக்கள் உயிரைப் பறித்ததுடன், மாநில அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் கடுமையாகக் குலைத்துள்ளது.

மரணமடைந்தோரின் குடும்பத்தினர் இன்னும் நீதி கோரிக் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இதன் விளைவாக, திமுக அரசு மட்டுமல்ல, நடிகர் விஜய் தலைமையிலான “தமிழக வெற்றி கழகம் (TVK)” மீதான நம்பிக்கையும் குறைந்துவருகிறது.

நிர்வாக அலட்சியம் – முன்னோக்கிய சிந்தனைக்குறைபாடு

இந்த சம்பவம், திமுக அரசு பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு கையாளுகிறது என்பது குறித்து கடும் விவாதத்தை தூண்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கூறுவதாவது:

கூட்டத்தில் அதிகமான மக்கள் வருவதை முன்பே எச்சரித்தும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

சரியான இடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

காவல் துறையினர் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை.

இது ஒரு சாதாரண விபத்து அல்ல — நிர்வாகம் திட்டமிடத் தவறியதற்கும் அலட்சியத்திற்கும் நேரடி விளைவு என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திமுக ஆட்சியில் தொடரும் அவலங்கள்

கரூர் நெரிசல் விபத்து தனி சம்பவமல்ல.
சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் பல இதேபோன்ற தவறுகள் நடந்துள்ளன —
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை, சென்னை விமான கண்காட்சி கூட்ட நெரிசல், ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி குழப்பம் உள்ளிட்டவை அதற்குச் சாட்சி.

ஒவ்வொரு முறையும் ஒரே காரணம் தான் தெரிகிறது —
அரசு பாடம் கற்க மறுக்கிறது, பொறுப்பேற்கவில்லை, மீண்டும் மீண்டும் தவறுகள் நிகழ்கின்றன.

நிர்வாகத்தில் அலட்சியம், அகங்காரம், மற்றும் பொறுப்பின்மை தான் இன்றைய தமிழகத்தின் மிகப் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

காவல் துறை மீதான கேள்விகள்

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சம்பவம் நடந்த நேரத்தில் திடலில் இல்லை என்ற தகவல் வெளிவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு,

காவல்துறையினர் பதட்டத்தில் இருந்த மக்களிடம் லாத்திச்சார்ஜ் செய்ததாகவும்,

சம்பவத்தை வீடியோ எடுத்த பொதுமக்கள்மீது FIR பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சிகளும் இதை “பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறை ஆளும் அரசின் கருவியாக கைப்பாவையாக மாறிவிட்டது” என கண்டித்துள்ளனர்.

மறைப்புச் செயல் குற்றச்சாட்டு

நெரிசல் விபத்துக்குப் பின் நடந்த சில நிகழ்வுகள் —

உடனடி பிரேத பரிசோதனை,

அவசரமாக நடந்த இறுதிச்சடங்குகள்,

நிகழ்விடத்தில் ஏற்பட்ட மின்தடை —
இவை அனைத்தும் மறைப்புச் செயல் நடந்ததா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன.

திமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.
ஆனால் எதிர்க்கட்சிகள் கூறுவதாவது — இது CBI விசாரணையைத் தடுக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

அரசு அமைச்சர்கள் ‘பொறுப்பிலிருந்து தப்பும்’ முயற்சி

சம்பவத்திற்குப் பிறகு திமுக அமைச்சர்கள் மருத்துவமனைகள் சென்று,
மீடியா முன்னிலையில் பேட்டி அளித்தனர்.
ஆனால் அவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதைவிட,
பொறுப்பை தங்கள்மீது வராமல் தடுக்க முயன்றன என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம்,
TVK மீது குற்றத்தைச் சுமத்தும் முயற்சி “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் நாடகம்” என்று பலரும் விமர்சித்தனர்.

TVK-வின் குழப்பமான பதில்

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK),
இந்த சம்பவத்தில் தெளிவான பதிலை வழங்க தவறியது.
அவர்களின் அறிக்கைகள் குழப்பமாகவும்,
பொறுப்பை ஏற்காமல் பிறரை குற்றம் சொல்லும் போக்கிலும் இருந்தன.

இதனால்,
பொது மக்களின் நம்பிக்கை குறைந்ததோடு,
TVK-வின் நிர்வாகத் திறமை மற்றும் நம்பகத்தன்மை மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

NDA – நிலையான மாற்று என தன்னை முன்வைக்கிறது

இந்த குழப்ப சூழலில்,
பாஜக (BJP) மற்றும் அ.தி.மு.க (AIADMK) இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA),
தன்னை ஒரு நிலையான, ஒழுங்கான மாற்றாக முன்வைக்கிறது.

அதன் தலைவர்கள் கூறுவதாவது —

“எங்கள் ஆட்சிக் காலங்களில் சட்ட ஒழுங்கு உறுதியானது, நிர்வாகம் திறம்பட்டது,
ஆனால் தற்போதைய அரசு குழப்பத்திலும் பொறுப்பின்மையிலும் மூழ்கியுள்ளது.”

கரூர் நெரிசல் விபத்து ஒரு துயரமான சம்பவமாக இருந்தாலும்,
அது ஒரு உறுதியான எச்சரிக்கை —
தமிழகத்தில் நிர்வாகம் சிதைந்தால், அதன் விலை உயிர்களாக மாறும் என்பதற்கானது.

அரசு பொறுப்பை ஏற்று, பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தாவிட்டால்,
இது தமிழகத்தின் அடுத்த தலைமுறைக்கே ஆபத்தான எடுத்துக்காட்டாக மாறும்.

பொன்முடிக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி.. தீவிர தேர்தல் வேட்டையில் திமுக!!

0

DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும், ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓரணியில் தமிழ்நாடு, என்ற பிரச்சார பயணத்தையும், மண்டலம் வாரியாக திமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் நியமித்து அந்த பகுதிகளை திமுக வசம் கொண்டு வரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளை மேற்கொள்ளும் திமுகவை எதிர்க்க இத்தனை வருடங்களாக அதிமுக மட்டுமே பிரதான எதிரியாக இருந்து வந்தது.

ஆனால் தற்போது புதிதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் இணைந்துள்ளது. இந்த சவாலை எதிர் கொண்டிருக்கும் திமுக தற்போது புதிதாக 2 துணை பொதுச் செயலாளர்களை நியமித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. திமுகவில் ஏற்கனவே கனிமொழி, ஆ ராசா, திருச்சி சிவா, அமைச்சர் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ்  ஆகிய 5 துணை பொதுச்செயலாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக  திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தற்போதைய அமைச்சர் சாமிநாதன் நியமிக்கபட்டுள்ளனர்.

புதிதாக  2 பொதுச் செயலாளர்கள் தலைதுக்கி இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொன்முடி இதற்கு முன் நடந்த திமுக நிகழ்ச்சியில் பெண்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவர் மீது கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பொன்முடியின் துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கபட்டது. ஆனால் தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைமை இவருக்கு மீண்டும் இந்த பதவியை வழங்கி இருப்பது பேசுபொருளாகியுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்காக திமுக மேற்கொள்ளும் வியூகங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பாமக எம்எல்ஏ மீது கடும் தாக்கு.. கோபத்தின் உச்சத்தில் நிர்வாகிகள்!! இதற்கு இவர் தான் காரணமா!!

0

PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனால் தனது மகன் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியை செயல் தலைவர் பதவியில் அமர்த்தினார். தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரிவால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. மேலும் கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் செல்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர். பாமக ஒன்றிணைந்தால் தான் சட்டமன்ற தேர்தலில் வெல்ல முடியும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி பதவியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் பதவியிலிருந்து நீக்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அந்த நிலை மேலும் வலுப்பெற்று ராமதாசின் தீவிர ஆதரவாளரான சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், ஆத்தூர் அடுத்த வடுகம்பாடி பகுதியில் துக்க நிகழ்விற்காக சென்று விட்டு வீடு திரும்பிய போது, அவரது காரை வழி மறைத்து, சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு காரணம் அன்புமணியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. அதனை உறுதி செய்யும் விதமாக, எம்எல்ஏ அருள் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு காரணம் அன்புமணியின் ஆதரவாளர்கள் தான் என்றும், பாமக பிரிந்து, முதல் பொதுக்குழு கூட்டியதிலிருந்தே, அன்புமணி ஆதரவாளர்கள் என்னை மிரட்டி வருகின்றனர் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே பாமகவில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், இது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. 

ராமதாஸை சந்தித்து பேசும் பாண்டா.. எம்எல்ஏ அருள் கூறிய ஒரே கூட்டணி இது தானா!!

0

PMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு, அதிமுகவில் ஏற்பட்ட முக்கிய தலைவர்களின் பிரிவு, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் நால்வர் அணியாக உருவெடுத்தது ஆகியவை தேர்தல் களம் பரபரப்பாக இருப்பதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தான் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.  இதனை தொடர்ந்து, ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கியது, இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது போன்ற பல்வேறு விஷயங்கள் அரங்கேறி விட்டன.

இது மட்டுமல்லாமல், தனது மகள் காந்திமதியை செயல் தலைவர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார் ராமதாஸ். இது அன்புமணிக்கு மேலும் பகையுணர்வை தூண்டியது என்றே சொல்லலாம். இந்த இக்கட்டான நிலையில், கூட்டணி குறித்தும் பாமக தலைகள் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், சுமார் 2 வாரங்களுக்கு முன்பு, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜந்த் பாண்டா தமிழகம் வருகை புரிந்து, இபிஎஸ்யுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணியுடனும் ஆலோசனை நடத்தியதால், பாமகவின் ஒரு தரப்பு அதிமுக-பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து விட்டது என்று அனைவரும் கூறி வந்தனர்.

இந்நிலையில், பைஜந்த் பாண்டா இன்று மீண்டும் தமிழகம் வருகை புரிய போவதாக தகவல் கிடைத்துள்ளது. இவரின் இந்த வருகை பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து கூட்டணி குறித்து விவாதிக்க தான் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றனர். நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக எம்எல்ஏ அருள், அன்புமணியும், ராமதாசும் ஒரே கூட்டணியில் இணையும் வாய்ப்பும் உள்ளது, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பொடி வைத்து பேசினார். அதனால் தற்போது பைஜந்த் பாண்டாவின் தமிழக வருகை அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.

திமுக எதிர்ப்பின் புதிய முகம்.. அதிமுக மட்டுமல்ல விஜய்யும் தான்!! பரபரக்கும் தேர்தல் களம்!!

0

DMK TVK: தமிழக அரசியலில் தற்போது ஒரு புதிய அரசியல் சக்தி  உருவாகியுள்ளது. திமுக அதிமுக என திராவிட கட்சிகள் பிரிந்நதிலிருந்தே திமுகவின் ஆட்சியை எதிர்க்கும் வலிமையான அமைப்பு அதிமுகவாகவே இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பும், மக்கள் மனதில் அதன் தாக்கமும் சற்றே மங்கியிருந்தது. இந்நிலையில் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் அமைப்பாக மாற்றியிருப்பது, மாநில அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்க வாக்காளர்களிடையே அவருக்கு உள்ள தாக்கம் திமுகவிற்கு நேரடி சவாலாக மாறி வருகிறது. இதுவரை திமுகவிற்கான எதிர்ப்பாக அதிமுக மட்டுமே இருந்த நிலையில், தற்போது அதனை விஜய்யும் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. முன்னதாக, திமுகவின் மீது அதிருப்தி கொண்ட வாக்காளர்கள் பெரும்பாலானோர் அதிமுகவையே தேர்வு செய்தனர். ஆனால் தற்போது, அதே வாக்காளர்கள் விஜய்யின் புதிய அரசியல் இயக்கத்தை மாற்று சக்தியாக காண்கிறார்கள்.

இதனால், திமுகவை எதிர்ப்பதற்க்கான பலம் அதிமுகவிற்கு மட்டுமல்ல, விஜய்க்கும் சொந்தமானது என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சமிக்ஞைகள் உருவாகும் நிலையில், விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகள் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சமமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும். விஜய்யின் இந்த அசுர வளர்ச்சி திமுகவிற்கு எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.