BLOOD CLEAN TIPS: இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற காலையில் எழுந்ததும் இதை ஒரு டம்ளர் குடியுங்கள்!!

0
160
BLOOD CLEAN TIPS: Drink a glass of this when you wake up in the morning to remove toxins from the blood!!
BLOOD CLEAN TIPS: Drink a glass of this when you wake up in the morning to remove toxins from the blood!!

BLOOD CLEAN TIPS: இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற காலையில் எழுந்ததும் இதை ஒரு டம்ளர் குடியுங்கள்!!

உடல் இயக்கத்திற்கு இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்று.இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இரத்தத்தில் அதிகளவு கழிவுகள் தேங்கி கிடந்தால் மாரடைப்பு வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.எனவே இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

1)பூண்டு

ஒரு கிளாஸ் நீரில் இடித்த பூண்டு சாறு ஒரு தேக்கரண்டி அளவு கலந்து குடித்து வந்தால் இரத்தத்தில் படிந்து கிடக்கும் தேவையற்ற நச்சுக் கழிவுகள் வெளியேறி விடும்.

2)கேரட் + பீட்ரூட்

1/4 கப் கேரட் மற்றும் 1/4 கப் பீட்ரூட்டை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்குவதோடு இரத்த உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.

3)முருங்கை கீரை

தினமும் ஒரு கிளாஸ் முருங்கை கீரை சாறு அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

4)பெரிய நெல்லிக்காய்

ஒரு கிளாஸ் பெரிய நெல்லிக்காய் சாறு அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

5)நாவல் + ஆப்பிள்

ஒரு கப் விதை நீக்கப்பட்ட நாவல் மற்றும் 1/4 கப் ஆப்பிள் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு ஜூஸாக அரைத்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி விடும்.

6)கீழாநெல்லி

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான பாலில் சிறிது கீழாநெல்லி சாறு கலந்து குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

7)மஞ்சள்

ஒரு கிளாஸ் பாலில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் இரத்தத்தில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.