Blood Donation: இந்த விஷயம் தெரிந்தால் சர்க்கரை நோயாளிகளும் இரத்த தானம் செய்யலாம்!!

Photo of author

By Divya

உலகிலேயே சிறந்த தானமாக இரத்த தானம் உள்ளது.இந்த இரத்த தானம் மூலம் லட்சக்கணக்கான மனித உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.நீங்கள் செய்யும் இரத்த தானத்தால் சரியான நேரத்தில் ஓர் உயிரை காப்பற்ற முடியும்.இதனால் இரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருக்கு இருக்க வேண்டும்.

மேலும் அனைவராலும் இரத்த தானம் குடுக்க முடியுமா என்றால் அதற்கு சில கட்டுப்பாடுகள்இருக்கின்றது.இரத்தம் தொடர்பான நோய் பாதிப்புகள் இல்லாதவர்கள் ஆரோக்கியமான உடல் தகுதி உள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாம்.

ஒருவேளை இரத்த தானம் செய்ய விரும்புபவருக்கு சர்க்கரை நோய் அல்லது இரத்தம் தொடர்பான பாதிப்புகள் இருந்தால் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.உலகில் நீரிழிவு நோய்கள் அதிகம் இருக்கின்றனர்.இதில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இரத்த தானம் செய்யலாம்.

இரத்தத்தில் சர்க்கரை நோயின் அளவு கட்டுக்குள் இருந்தால் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இரத்த தானம் செய்யலாம்.ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இதயப் பிரச்சனை பிற நோய் பாதிப்புகள் இருந்தால் இரத்த தானம் செய்ய வேண்டாம்.

இரத்த தானம் செய்வதற்கு முன்னர் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.மருந்து எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் மருந்து கலந்துள்ளதா என்பதை உறுதி செய்து அவசியமாகும்.

இரத்த குழாய் அடைப்பு,இதயம் சார்ந்த பிரச்சனை இருக்கும் நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்யக் கூடாது.இரத்த தானம் செய்ய இருப்பவர்கள் உடல் எடையை பராமரிக்க வேண்டியது அவசியம்.