உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையை மருந்து மாத்திரை இன்றி குணப்படுத்திக் கொள்வதற்கான வழிகள் இங்கு தரப்பட்டுள்ளது.உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முருங்கை கீரையில் சூப் செய்து சாப்பிடலாம்.
முருங்கை கீரை – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு
வெங்காயம் – இரண்டு
சீரகம் – கால் தேக்கரண்டி
மிளகு – நான்கு
மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
முருங்கை கீரையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும்.அதன் பிறகு கடுகு சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை போட வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.பிறகு சீரகம்,மிளகு மற்றும் பூண்டு பற்களை உரலில் இடித்து வதக்கி கொண்டிருக்கும் கலவையில் போட வேண்டும்.
அடுத்து சுத்தப்படுத்தி இருக்கும் முருங்கை கீரையை போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒருமுறை வதக்கிவிட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த முருங்கை கீரை பானம் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.அதன் பிறகு இந்த பானத்தை கிண்ணம் ஒன்றிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி அளவிற்கு எலுமிச்சை சாறை மிக்ஸ் செய்ய வேண்டும்.
இந்த பானத்தை தினமும் காலைவேளையில் செய்து பருகி வந்தால் உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.