சிவகார்த்திகேயனை அவதூறாக பேசிய ப்ளூ சட்டை மாறன்!! கொந்தளித்த தமிழ் திரைப்பட நடிகர்!!

0
124
Blue Shirt Maran who defamed Sivakarthikeyan
Blue Shirt Maran who defamed Sivakarthikeyan

CINEMA: அமரன் திரைப்பட விமர்சனத்தில் சிவகார்த்திகேயனை தரக்குறைவாக பேசிய ப்ளூ சட்டை மாறன் கண்டித்துள்ளார் நடிகர் கலையரசன்.

சமீபத்தில் தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தினை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனை நடிகர் கலையரசன் கண்டித்துள்ளார்.

தமிழ் சினிமா மறைமுகமாகவும் நேரடியாகவும் லட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக சினிமா விமர்சகர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களால் ஏற்படும் தாக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு சினிமாவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விமர்சனம் கூறி வருகின்றனர்.

அதில் முக்கியமான விமர்சகர்களுள் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். அவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தினை விமர்சனம் தெரிவித்து விடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பாக சிவகார்த்திகேயனை தரக்குறைவாக விமர்சிப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனை நடிகர் கலையரசன் கண்டித்துள்ளார்.

Blue Shirt Maran who defamed Sivakarthikeyan

Blue Shirt Maran who defamed Sivakarthikeyan

ப்ளூ சட்டை மாறன் பொதுவாக தனது விமர்சனத்தை ஒரு திரைப்படத்தினை கடுமையான வார்த்தைகளால், நக்கல் நையாண்டி தனமாகவும் விமர்சனம் செய்வது வழக்கம். இது பலரையும் கவர்ந்தது. இவர் நன்றாக கூறினால் அந்த திரைப்படத்திற்கு செல்லலாம் இல்லை என்றால் அது வீண் செலவு என்று கருதிக்கொண்டு அவருக்கென்று ஒரு கூட்டமே உள்ளது.

ப்ளூ சட்டையின் விமர்சனத்துக்கு நடிகர் கலையரசன் தனது x பதிவில்  ஒரு திரைப்படத்தினை விமர்சிப்பதும் அதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதை கண்டிப்பதும் அவரது உரிமை. ஆனால் விமர்சனம் என்னும் பெயரில் தனிமனிதனை முழு வெறுப்போடு அருவருப்பாக தாகி பேசுவது வன்மையாக கண்டிக்க தக்கது என்று கூறியிருந்தார்

Previous articleநடிகர் தனுஷ் விவாகரத்து வழக்கில் விருப்பம் இருக்கா இல்லையா!! குடும்ப நல நீதிமன்றம் கடும் கேள்வி!!
Next articleசேலத்தில் டாஸ்மாக் கடையில் சந்து வியாபாரம் “படுஜோர்”!!