உடலில் படிந்துள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற டீடாக்ஸ் பானம் செய்து பருகலாம்.இந்த பானத்தை பருகி வந்தால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ள இந்த பானத்தை பருகலாம்.
1)ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்
2)இரண்டு கிளாஸ் தண்ணீர்
**அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
**இரண்டு கிளாஸ் தண்ணீர் சுண்டி ஒரு கிளாஸாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை வடிகட்டி காலைவேளையில் பருகி வந்தால் உடலில் தேக்கமடைந்த கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.
1)ஒரு தேக்கரண்டி மரமஞ்சள் சூரணம்
2)ஒன்றரை கிளாஸ் தண்ணீர்
**நாட்டு மருந்து கடையில் மரமஞ்சள் சூரணம் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளவும்.
**அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு மரமஞ்சள் சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு அதில் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
**இந்த பானத்தை ஆறவைத்து பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.
1)நான்கு புதினா இலைகள்
2)ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
3)ஒரு தேக்கரண்டி தேன்
4)ஒரு கப் தண்ணீர்
**ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை போட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
**பிறகு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை புதினா நீரில் பிழிந்துவிட வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்து குடித்தால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்.