இரண்டு நிமிடம் போதும் உடல் சூடு காணாமல் போகும்! உடனே ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Rupa

இரண்டு நிமிடம் போதும் உடல் சூடு காணாமல் போகும்! உடனே ட்ரை பண்ணுங்க!

நமது உடலில் உடல் சூடு அதிகரித்தால் வயிற்று வலி வயிறு எரிச்சல் கண் வலி போன்றவை உண்டாகும். சிலருக்கு உடல் சூட்டினால் கொப்பளங்கள் கூட தோன்றும். அவரவர் உடல் அமைப்பு பொருத்து உடல் சூட்டினால் பல உபாதைகள் தோன்றும்.

விளக்கெண்ணெய்:

விளக்கெண்ணையை தினம்தோறும் கால் கட்டை விரலில் மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு கால் கட்டை விரல்களிலும் விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்து வர வேண்டும். இரண்டு நிமிடம் மட்டும் இவ்வாறு மசாஜ் செய்து வர உங்களின் உடல் சூடு அனைத்தும் குறைந்து விடும். ஏனென்றால் கால் கட்டைவிரல் நரம்பு மண்டலத்தின் மூலம் நமது உடல் உஷ்ணம் குறையும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த தண்ணீர் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இதற்கு மாறாக வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம். அது நமது உடலில் நல்ல ஆற்றலை ஏற்படுத்தி நல்ல பலனை அளிக்கும். அதேபோல உடல் உஷ்ணம் அதிகம் இருப்பவர்கள் டீ காபி சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளலாம். மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் நாளடைவில் அப்பழக்கத்தை கைவிட வேண்டும். இதற்கு மாறாக தர்பூசணி முலாம்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.