BODY NUMBNESS: உங்களுக்கு கை கால் மரத்து போகும் பிரச்சனை தொடர்கிறதா? இந்த நோய்க்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்!!

Photo of author

By Divya

BODY NUMBNESS: உங்களுக்கு கை கால் மரத்து போகும் பிரச்சனை தொடர்கிறதா? இந்த நோய்க்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்!!

உங்களில் பலருக்கு கை,கால் பகுதி மரத்து போவது அடிக்கடி நிகழக் கூடிய ஒன்றாக இருக்கலாம்.இது இரத்த ஓட்டம் தடைபடுவதால் தான் ஏற்படுகிறது.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது,கை கால்களை தொங்க விட்ட நிலையில் இருப்பது போன்ற காரணங்களால் கை,கால் மரத்து போகிறது.இதனால் சில நிமிடங்கள் உடலை அசைக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவீர்கள்.

அது மட்டுமின்றி சர்க்கரை,மரபணு கோளாறு,தைராய்டு,நரம்புகளில் அழுத்தம்,உடல் பருமன்,வைட்டமின் பி12 குறைபாடு போன்ற பல காரணங்களால் மரத்து போதல் ஏற்படுகிறது.குறிப்பாக குடி பழக்கம் இருப்பவர்கள் பெரும்பாலானோர் கை கால் மரத்து போதல் பாதிப்பை அடிக்கடி சந்தித்து வருவார்கள்.

கை கால் மரத்து போதலை குணமாக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்:

1)தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு அருந்தி வந்தால் கை கால் மரத்து போதல் சரியாகும்.

2)ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகும்.

3)ஊறவைத்த பாதாம்,வால்நட்,முந்திரி ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.இதனால் கை,கால் மரத்து போதல் ஏற்படாது.

4)ஒரு கிளாஸ் சூடான நீரில் 25 மில்லி ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் கை,கால் மறுத்து போதல் பிரச்சனை சரியாகும்.

5)ஒரு கிளாஸ் அளவு நீரில் இடித்த சின்ன வெங்காயம் ஒன்று சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

5)தினமும் ஒரு பல் பூண்டை சுட்டு சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.கை கால் மரத்து போதல் குணமாகும்.