சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு!

0
214
Body recovery of drowned youth near Salem! Flooding in Sarabanga River!
Body recovery of drowned youth near Salem! Flooding in Sarabanga River!

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு!

கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றது அதே போல் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைபகுதியில் உருவாகி ஓமலூர் ,தாரமங்கலம் வழியாக எடப்பாடி பகுதியில் சரபங்கா நதி பாய்ந்து வருகின்றது.மேலும் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பகுதியில் பாய்ந்து வரும் சரபங்கா நதிக்கரைக்கு தினந்தோறும் பொதுமக்கள் மீன் பிடிக்கவும் ,குளிக்கவும் ,கரை பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்ளவும் வருகின்றனர்.இதனையடுத்து  நேற்று முன்தினம் விடுமுறை நாளாக  இருந்ததால் நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்கள் ஐயப்பன்(22) மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர் அவர்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து சரபங்கா நதியில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது தண்ணீரின் வேகம் அதிகரித்தது.அப்போது ஐயப்பன் மற்றும் கெளதம் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.மேலும் அவர்களுடைய நண்பர்கள் எடப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு குழு மற்றும் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இரவு சரபங்கா ஆற்றில் சடலம் மிதந்து வந்தது.அதனை மீட்ட தீயணைப்பு வீரர்கள் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் ,நண்பர்கள் என அனைவரும் மருத்துவமனையின் முன்பு குவிந்துள்ளனர்.

Previous articleஜெயலலிதா மரண தேதி மாற்றம்…சசிகால முன்விரோதம்! அறுவைசிகிச்சை பின் உள்ள ரகசியம்!ஆறுமுகசாமி விசாரணையின் அறிக்கையின் பகீர் தகவல்!
Next articleபதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!!