ஜெயலலிதா மரண தேதி மாற்றம்…சசிகால முன்விரோதம்! அறுவைசிகிச்சை பின் உள்ள ரகசியம்!ஆறுமுகசாமி விசாரணையின் அறிக்கையின் பகீர் தகவல்!

0
93
Jayalalitha's death date change...Sasikala precedent! The secret behind the surgery! The report of Arumugasamy investigation!
Jayalalitha's death date change...Sasikala precedent! The secret behind the surgery! The report of Arumugasamy investigation!

ஜெயலலிதா மரண தேதி மாற்றம்…சசிகால முன்விரோதம்! அறுவைசிகிச்சை பின் உள்ள ரகசியம்!ஆறுமுகசாமி விசாரணையின் அறிக்கையின் பகீர் தகவல்!

இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அதிமுக ஆட்சியில் அரங்கேறிய ஜெயலலிதா அவர்களின் மரணம் மற்றும் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.மேலும் அதிமுக எதிர்கட்சி துணைதலைவராக ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இவ்வாறு இருக்கையில் இந்த துணை தலைவர் குறித்து இபிஎஸ் எம்.எல்.ஏ க்கள் அமளியில் ஈடுபட்டனர்.சபாநாயக்கர் அப்பாவு அவர்களை வெளியேறும்படி உத்தரவிட்டார்.உங்களுக்கான கேள்வி நேரம் வரும்பொழுது தக்க பதில் அளிப்பதாகவும் கூறினார்.

அதனையடுத்து ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து ஆறுமுகசாமியின் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது.அதில் பல குழப்பங்கள் எழுந்துள்ளது.அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்திருந்த ஜெயலலிதா அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை வந்த போதிலும் ஜெயலலிதா அவர்களுக்கு முறையான சிகிச்சை கொடுக்கவில்லை. அதேபோல சசிகலா மற்றும் ஜெயலலிதா அவர்களுக்கு இடையே சுமுகமான உறவும் அச்சமயத்தில் இல்லை.

அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர், ஜெயலலிதாவிற்கு இதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்குப் பின்னால் பல ரகசியங்கள் சசிகலாவால் மறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு இடையே சுமுகமான உறவு இல்லாததாலும் தனது சுயநலத்திற்காகவும் ஜெயலலிதா அவர்களுக்கு நடக்க இருந்த அறுவை சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என்று ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஜெயலலிதா அவர்களின் மரணத்திற்கு முக்கிய குற்றவாளிகளாக சசிகலா, டாக்டர் கே எஸ் சிவகுமார், முந்தைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,அதிமுக  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்வதற்கு பரிந்துரைப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.அதில்,ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில் இறந்ததாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது.

ஆனால் தற்பொழுது விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சாட்சிகளோடு இதனை அறிக்கையில் கூறியுள்ளனர். ஏன் இவ்வாறு மருத்துவமனை தெரிவித்தது என்று பல குழப்பங்கள் எழுந்துள்ளது.