BODY WEIGHT ஒரே வாரத்தில் கடகடன்னு குறைய.. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Gayathri

இக்காலத்தில் பெரியவர்கள்,சிறியவர்கள் அனைவரும் உடல் பருமனால்  வருகின்றனர்.உடலில் சேரும் அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நவீன டயட் முறைகளை பலரும் பாலோ செய்கின்றனர்.டயட் என்ற பெயரில் உணவு உட்கொள்ளாமல் உடலை வருத்தி எடுக்கின்றனர்.

 

ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உட்கொண்டாலே உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும்.ஆனால் சிலர் உடல் ஆரோக்கியம் பற்றி கவலை கொள்ளாமல்  ஜங்க் புட்,பாஸ்ட் புட்,பதப்படுத்திய உணவுகளை அதிகளவு உட்கொள்வதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து பல நோய்கள் உருவாகி விடுகிறது.

 

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நாம் சில விஷயங்களை பாலோ செய்தால் போதும்.முதலில் சர்க்கரை உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

 

காலை நேரத்தில் எளிய உடற்பயிற்சிகளை செய்து எடையை குறைக்கலாம்.தினமும் காலையில் 15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம்.

 

அதிக கலோரி நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.எண்ணெய்குறைவாக பயன்படுத்தி உணவு சமைக்கவும்.கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்த்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேர்வது கட்டுப்படும்.

 

ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் பச்சை காய்கறிகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.சீஸ்,பட்டர்,நெய் போன்ற பால் பொருட்களை குறைவாக எடுத்துக் கொள்ளவும்.தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீர் அருந்தவும்.மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளவும்.இவற்றை முறையாக பாலோ செய்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.