உடல் எடை சீராக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.ஒருவர் தனது உடல் உயரத்திற்கு ஏற்ற எடையில் இருக்க வேண்டியது அவசியம்.அந்த அளவை தாண்டி உடல் எடை கூடிவிட்டால் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவித்துவிடும்.
உடல் எடை அதிகரித்தால் இரத்த சர்க்கரை,கொலஸ்ட்ரால்,உயர் இரத்த அழுத்தம்,இரத்த கொதிப்பு,இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.இன்று ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் பெருகிவிட்டாலும் மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது.
உடற்பயிற்சி,யோகா,நடைபயிற்சி போன்ற வழிகளில் உடல் எடையை குறிப்பவர்கள் கீழே சொல்லப்பட்டுள்ள பானங்களை குடித்து வந்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
1)மூலிகை டீ
இஞ்சி,அதிமதுரம் பயன்படுத்தி டீ செய்து குடித்து வந்தால் பசி உணர்வு கட்டுப்படுவதோடு உடல் எடை குறையும்.
2)எலுமிச்சை நீர்
ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு எலுமிச்சம் பழ சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் காணப்படும் தேவையற்ற கொலஸ்ட்ரால்கள் கரைந்துவிடும்.
3)மஞ்சள் பால்
ஒரு கிளாஸ் நாட்டு மாட்டு பால் அல்லது பசும் பாலை காய்ச்சி மஞ்சள் பொடி கலந்து குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
4)ஆப்பிள் சைடர் வினிகர்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
5)இஞ்சி டீ
ஒரு கிளாஸ் நீரில் தட்டிய இஞ்சி ஒரு துண்டு போட்டு கொதிக்க வைத்து வடித்து தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
6)புதினா பானம்
ஒரு கப் நீரில் ஐந்து அல்லது பத்து புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் தேங்கிய தேவையற்ற கொலஸ்ட்ரால் அனைத்தும் கரைந்துவிடும்.

