Body Whitening Cream: மொத்த உடலும் பால் போல் வெள்ளையாக இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்!!

Body Whitening Cream: மொத்த உடலும் பால் போல் வெள்ளையாக இந்த க்ரீமை பயன்படுத்துங்கள்!!

ஆண்,பெண் அனைவரும் உடலை வெள்ளையாக வைத்துக் கொள்ள சந்தையில் கிடைக்க கூடிய இராசயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் தோலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகிறது.

சிலருக்கு கெமிக்கல் க்ரீம் ஒற்றுக் கொள்ளாமல் போய்விடுவதால் உடல் முழுவதும் வெண்புள்ளி நோய் உருவாகி விடுகிறது.எனவே இது போன்ற செயற்கை பொருட்களுக்கு பதில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு ஆர்கானிக் க்ரீம் தயாரித்து பயன்படுத்தி வந்தால் இயற்கையான முறையில் உடல் வெள்ளையாகும்.

தீர்வு 01:

1)அரிசி
2)பால்
3)கற்றாழை ஜெல்
4)தேங்காய் எண்ணெய்
5)பன்னீர்

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அரிசி போட்டு 1/2 டம்ளர் காய்ச்சிய பால் ஊற்றி 2 மணி நேரம் ஊற விடவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்,1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்,1 தேக்கரண்டி பன்னீர் மற்றும் அரைத்த அரிசி பேஸ்டை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இந்த க்ரீமை உடல் முழுதுவம் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால் விரைவில் வெள்ளையாக மாறும்.

தீர்வு 02:

1)பீட்ரூட்
2)கற்றாழை ஜெல்
3)வைட்டமின் ஈ மாத்திரை

மீடியம் சைஸ் பீட்ரூட் எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த க்ரீமை உடல் முழுதுவம் தடவி வந்தால் விரைவில் தோல் வெள்ளையாக மாறும்.

தீர்வு 03:

1)தக்காளி
2)கற்றாழை ஜெல்
3)வைட்டமின் ஈ மாத்திரை

ஒரு தக்காளி எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த க்ரீமை உடல் முழுதுவம் தடவி வந்தால் விரைவில் தோல் வெள்ளையாகும்.

தீர்வு 04:

1)பச்சை பயறு மாவு
2)கடலை மாவு
3)கற்றாழை ஜெல்
4)வைட்டமின் ஈ மாத்திரை

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி பச்சை பயறு மாவு,2 தேக்கரண்டி கடலை மாவு,2 தேக்கரண்டி,2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த க்ரீமை உடல் முழுதுவம் தடவி வந்தால் சில வாரங்களில் மேனி வெள்ளையாகும்.

தீர்வு 05:

1)கற்றாழை ஜெல்
2)மஞ்சள் தூள்
3)தேங்காய் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து க்ரீம் பதத்திற்கு நன்கு கலந்து விடவும்.இந்த க்ரீமை உடல் முழுதுவம் தடவி வந்தால் விரைவில் மேனி மிருதுவாகவும்,வெள்ளையாகவும் மாறும்.