பெண்கள் தங்கள் பிரசவ காலத்திற்கு பிறகு உடலில் பெருமளவு மாற்றங்களை சந்திக்கின்றனர்.குறிப்பாக உடல் எடையில் அதிக மாற்றங்கள் நிகழ்கிறது.பிரசவ காலத்திற்கு பிறகு அதிகரிக்கும் உடல் எடையை சீக்கிரம் குறைக்க இந்த பானம் செய்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளை பூண்டு பற்கள் – இரண்டு
2)வேப்பிலை – ஒரு கொத்து
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
படி 01:
முதலில் இரண்டு வெள்ளை பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
படி 02:
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து இந்த நறுக்கிய பூண்டு பற்களை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
படி 03:
அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலை இலைகளை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
படி 04:
இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து கலக்கி பருகினால் பிரசவ தொப்பை கடகடன்னு குறைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
படி 01:
பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
படி 02:
பின்னர் இந்த தண்ணீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை சூடான நீரில் பிழிந்து கொள்ள வேண்டும்.
படி 03:
பின்னர் ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து பருகினால் பிரசவ தொப்பை குறையும்.
தேவையான பொருட்கள்:-
1)சின்ன வெங்காயம் – இரண்டு
2)பசு நெய் – அரை தேக்கரண்டி
3)பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
படி 01:
முதலில் இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
படி 02:
பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி பசு நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
படி 03:
பிறகு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காய துண்டுகளை போட்டு வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
படி 04:
அடுத்து இந்த வெங்காய பேஸ்ட்டில் அரை தேக்கரண்டி அளவு பனங்கற்கண்டு தூள் சேர்த்து கலக்கி சாப்பிட்டு வந்தால் பிரசவ காலத்திற்கு பிறகு தொப்பை போடுவது கட்டுப்படும்.