டைரக்டர் அட்லி மீது கடும் கோபத்தில் இருக்கும் பாலிவுட் பிரபலம்! காரணம் இதுதானா?
பிரபல இயக்குனர் அட்லி மீது இந்தி நடிகர் ஷாருக்கான் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற தனது முதல் படத்திலேயே தான் ஒரு வெற்றி இயக்குனர் என நிரூபித்தவர் டைரக்டர் அட்லி. அடுத்து இவர் இளைய தளபதி விஜய் வைத்து இயக்கிய தெறி, மெர்சல், பிகில், என அனைத்தும் பிளாக் பாஸ்டர் ஹிட்டுகளாக அமைந்து தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக அவரை வலம் வர வைத்தது.
இதையடுத்து இயக்குனர் அட்லி பதான் பட வெற்றியை தொடர்ந்து ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா ஹீரோயினியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். அனிருத்துக்கு பாலிவுட்டில் இசையமைப்பாளராக இது முதல் படமாகும்.
மேலும் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதியும் நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார்கள். பதான் படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் வந்து ஆக்சன் காட்சியில் மிரட்டி இருப்பார். அதேபோல் ஜவான் படத்தில் இளைய தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே செய்தி வெளியானது.
இந்நிலையில் லியோ படத்தில் பிஸியாக இருப்பதால் இளைய தளபதியால் ஜவான் படத்தில் நடிக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு சமமான ஒரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்து புஷ்பா படத்தில் பிரபலமான அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க இயக்குனர் அட்லி முடிவு செய்து அவரின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக கூறப்படுகிறது.
பான் இந்தியா படமாக உருவாகும் ஜவான் படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார். இந்த படத்தில் நினைத்ததை விட அதிக செலவு செய்ததால் அட்லி மீது ஷாருக்கான் கடும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதனால் இது குறித்து சென்னை வந்ததும் அட்லீ தனது மன வருத்தத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளிவரவில்லை.
இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி தள்ளி போகும் என கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவராவிட்டாலும் படம் தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிகின்றது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜவான் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் ராஜ்குமார் ஹிராணியுடன் ஷாருக்கான் இணைய உள்ள டன்கி படத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது.