பிரதீப் –க்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயின்!! விக்னேஷ் சிவனின் அடுத்த அவதாரம்!!

0
34
Bollywood heroine opposite Pradeep!! Vignesh Shivan's Next Avatar!!
Bollywood heroine opposite Pradeep!! Vignesh Shivan's Next Avatar!!

பிரதீப் –க்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயின்!! விக்னேஷ் சிவனின் அடுத்த அவதாரம்!!

தமிழ் துறையுலகின் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் தமிழில் “போடா போடி, நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல்” முதலிய வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை விக்னேஷ் சிவன் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தை வைத்து ஏகே 62 திரைப்படத்தை இயக்க வாய்ப்பை தவற விட்ட விக்னேஷ் சிவன் தற்போது லவ் டுடே படத்தின் ஹீரோவான பிரதீப்பை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க உள்ளார்.

இந்த படத்திற்கான பணிகள் அனைத்தும் தற்போது வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இப்படம் குறித்த முக்கிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததை அடுத்து தற்போது இந்த வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்துள்ளது.

இக்கதை ஒரு செயலியை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கான பட்ஜெட் ரூபாய் 50 கோடி என்றும், இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஜான்வி கப்பூரை விக்னேஷ் சிவன் களமிறக்க உள்ளார்.

இவர் நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கப்பூரின் மகள் ஆவார். இப்படத்தின் மூலமாக ஜான்வி கபூர் தமிழ் திரையுலகில் முதல் முறையாக நுழையப்போகிறார் என்று கூறப்படுகிறது.

இவர் பாலிவுட்டில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தற்போது ஜூனியர் என்.டி.ஆர். க்கு ஜோடியாக தேவரா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ஜான்வி கபூர் அடுத்தபடியாக கோலிவுட்டிலும் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
CineDesk