நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்!

0
176

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் வெடிகுண்டு வீசி 2 பெண்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி அருகே
மருகால்குறிச்சியை சேர்ந்த அருணாச்சலம் மகன் என்பவர் நம்பிராஜ் (23).நம்பிராஜ் அதே பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதி என்பவரை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமணம் செய்த பிறகு நம்பிராஜ் வான்மதியுடன் திருநெல்வேலியில் குடியேறினார்.நம்பிராஜனின் இந்த செயலால் ஆத்திரத்தில் இருந்த வான்மதியின் அண்ணன் செல்லசாமி மற்றும் நண்பர்கள் செல்லதுரை,முருகன், ஆகியோர்,கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி அன்று நம்பிராஜனை பேசுவது போல் வரைவளைத்து வெட்டி கொலை செய்தனர்.இந்தக் கொலையின் தொடர்பாக வான்மதியின் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

நம்பிராஜன் கொலை செய்தவர்களை பழிவாங்க நம்பிராஜனின் அண்ணன் ராமையா தரப்பினர் காத்திருந்தனர்.கடந்த மார்ச் 14-ஆம் தேதி நம்பிராஜனின் அண்ணன் தரப்பினர்,
நாங்குநேரியில் ஹோட்டல் நடத்தி வரும் செல்ல துறையின் தந்தை மற்றும் ஹோட்டலில் வேலை பார்த்த சுரேஷ் என்பவரை வெட்டிக் கொலை செய்தனர்.இந்தக் கொலையின் தொடர்பாக நம்பிராஜனின் அண்ணன் ராமையா மற்றும் அவருடைய தாயார் சண்முகத்தாய் மற்றும் இசக்கி என்பவர் கைது செய்யப்பட்டனர்.இவ்வளவும் நடந்தும் இந்தச் சம்பவம் ஓய்ந்தபாடில்லை மேலும் பழிக்கு பழிவாங்க வான்மதின் பெற்றோர்கள் தரப்பினர் காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முந்தினம் குண்டர் சட்டத்தில் கைதான நம்பிராஜனின் தாயார் மற்றும் அண்ணன் ஆகியோர் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதனையறிந்த எதிர்தரப்பினர்,நேற்று மதியம் 11.45 மணி அளவில் 10 இருசக்கர வாகனங்களில் 12க்கும் மேற்பட்டவர்கள் முகங்களை மறைத்துக் கொண்டு மாறுகால்குறிச்சி கிராமத்திற்குள் வந்தனர்.மேலும் இவர்கள் அப்பகுதியில் பெட்ரோல் குண்டுகள் வீசியும், நாட்டு வெடிகுண்டுகள் வீசியும் மக்களை பீதியில் ஆழ்த்தினர்.இந்நிலையில் தன்னை பழிவாங்குவதற்காக தான் வந்துள்ளார்கள் என்று அறிந்துகொண்ட நம்பிராஜன் தாயார் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டார்.இருந்தபொழுதிலும் வீட்டிற்குள் புகுந்த அந்த கும்பல் நம்பிராஜன் தாயாரின் தலையை வெட்டினர்.பின்பு இசக்கி வீட்டிற்குள் புகுந்து இசைக்கி தாயாரையும் வெட்டிக் கொலை செய்தனர்.இசக்கியின் மகள் செல்வி.பதினான்கு வயதாகும் இந்த பெண்ணை சிறுமி என்று கூட பாராமல் அரிவாளால் அந்த கொடூர கும்பல் வெட்டினர்.
இதைத்தொடர்ந்து நம்பிராஜனின் தாயாரின் தலையை தெருமுனையில் வைத்து பின்னர் சிறிது நேரம் கழித்து சாக்கடையில் தூக்கி வீசிவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது.நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட நம்பிராஜனின் தாயார் மற்றும் சகோதரர்களுக்கு,எதிர்த் தரப்பினர் பழி வாங்க நேரிடலாம் என்று போலீசார் எச்சரித்தநிலையில் குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர்.பெண்கள் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் இந்த கொடூர கொலை சம்பவம்
அரங்கேறியுள்ளது. தற்போது தொடர்ந்து பழிவாங்கும் சம்பவம் அரங்கேறி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Previous articleஉச்சி முதல் பாதம் வரை உள்ள நோய்களை குணப்படுத்தும் 8 வடிவ பயிற்சி:! அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Next articleமாதம் ரூ.2390 உயர்த்தப்படும் சுங்க கட்டணம்:!! அதிர்ச்சியில் மக்கள்!